Sunday, June 19, 2016

Unnathappaattu 6 | உன்னதப்பாட்டு 6 | Song of Solomon 6


உன்  நேசர்  எங்கே  போனார்?  ஸ்திரீகளில்  ரூபவதியே!  உன்  நேசர்  எவ்விடம்  போய்விட்டார்?  உன்னோடேகூட  நாங்களும்  அவரைத்  தேடுவோம்.  (உன்னதப்பாட்டு  6:1)

un  neasar  enggea  poanaar?  sthireega'lil  roobavathiyea!  un  neasar  evvidam  poayvittaar?  unnoadeakooda  naangga'lum  avaraith  theaduvoam.  (unnathappaattu  6:1)

தோட்டங்களில்  மேயவும்,  லீலிபுஷ்பங்களைக்  கொய்யவும்,  என்  நேசர்  தமது  தோட்டத்துக்கும்  கந்தவர்க்கப்  பாத்திகளுக்கும்  போனார்.  (உன்னதப்பாட்டு  6:2)

thoattangga'lil  meayavum,  leelipushpangga'laik  koyyavum,  en  neasar  thamathu  thoattaththukkum  kanthavarkkap  paaththiga'lukkum  poanaar.  (unnathappaattu  6:2)

நான்  என்  நேசருடையவள்,  என்  நேசர்  என்னுடையவர்;  அவர்  லீலிபுஷ்பங்களுக்குள்ளே  மேய்கிறார்.  (உன்னதப்பாட்டு  6:3)

naan  en  neasarudaiyava'l,  en  neasar  ennudaiyavar;  avar  leelipushpangga'lukku'l'lea  meaygi’raar.  (unnathappaattu  6:3)

என்  பிரியமே!  நீ  திர்சாவைப்போல்  சௌந்தரியமும்,  எருசலேமைப்போல்  வடிவமும்,  கொடிகள்  பறக்கும்  படையைப்போல்  கெடியுமானவள்.  (உன்னதப்பாட்டு  6:4)

en  piriyamea!  nee  thirsaavaippoal  saunthariyamum,  erusaleamaippoal  vadivamum,  kodiga'l  pa’rakkum  padaiyaippoal  kediyumaanava'l.  (unnathappaattu  6:4)

உன்  கண்களை  என்னைவிட்டுத்  திருப்பு,  அவைகள்  என்னை  வென்றது;  உன்  அளகபாரம்  கீலேயாத்  மலையிலே  தழைமேயும்  வெள்ளாட்டு  மந்தையைப்போலிருக்கிறது.  (உன்னதப்பாட்டு  6:5)

un  ka'nga'lai  ennaivittuth  thiruppu,  avaiga'l  ennai  ven’rathu;  un  a'lagabaaram  keeleayaath  malaiyilea  thazhaimeayum  ve'l'laattu  manthaiyaippoalirukki’rathu.  (unnathappaattu  6:5)

உன்  பற்கள்  குளிப்பாட்டப்பட்டுக்  கரையேறுகிறவைகளும்,  ஒன்றானாலும்  மலடாயிராமல்  இரட்டைக்  குட்டியீன்றவைகளுமான  ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது.  (உன்னதப்பாட்டு  6:6)

un  pa’rka'l  ku'lippaattappattuk  karaiyea’rugi’ravaiga'lum,  on’raanaalum  maladaayiraamal  irattaik  kuttiyeen’ravaiga'lumaana  aattumanthaiyaippoalirukki’rathu.  (unnathappaattu  6:6)

உன்  முக்காட்டின்  நடுவே  உன்  கன்னங்கள்  வெடித்த  மாதளம்பழம்போலிருக்கிறது.  (உன்னதப்பாட்டு  6:7)

un  mukkaattin  naduvea  un  kannangga'l  vediththa  maatha'lampazhampoalirukki’rathu.  (unnathappaattu  6:7)

ராஜஸ்திரீகள்  அறுபதுபேரும்,  மறுமனையாட்டிகள்  எண்பதுபேருமுண்டு;  கன்னியருக்குத்  தொகையில்லை.  (உன்னதப்பாட்டு  6:8)

raajasthireega'l  a’rubathupearum,  ma’rumanaiyaattiga'l  e'nbathupearumu'ndu;  kanniyarukkuth  thogaiyillai.  (unnathappaattu  6:8)

என்  புறாவோ,  என்  உத்தமியோ  ஒருத்தியே;  அவள்  தன்  தாய்க்கு  ஒரே  பிள்ளை;  அவள்  தன்னைப்  பெற்றவளுக்கு  அருமையானவள்;  குமாரத்திகள்  அவளைக்  கண்டு,  அவளை  வாழ்த்தினார்கள்;  ராஜஸ்திரீகளும்  மறுமனையாட்டிகளும்  அவளைப்  போற்றினார்கள்.  (உன்னதப்பாட்டு  6:9)

en  pu’raavoa,  en  uththamiyoa  oruththiyea;  ava'l  than  thaaykku  orea  pi'l'lai;  ava'l  thannaip  pet’rava'lukku  arumaiyaanava'l;  kumaaraththiga'l  ava'laik  ka'ndu,  ava'lai  vaazhththinaarga'l;  raajasthireega'lum  ma’rumanaiyaattiga'lum  ava'laip  poat’rinaarga'l.  (unnathappaattu  6:9)

சந்திரனைப்போல்  அழகும்,  சூரியனைப்போல்  பிரகாசமும்,  கொடிகள்  பறக்கும்  படையைப்போல்  கெடியுமுள்ளவளாய்,  அருணோதயம்போல்  உதிக்கிற  இவள்  யார்?  (உன்னதப்பாட்டு  6:10)

santhiranaippoal  azhagum,  sooriyanaippoal  piragaasamum,  kodiga'l  pa’rakkum  padaiyaippoal  kediyumu'l'lava'laay,  aru'noathayampoal  uthikki’ra  iva'l  yaar?  (unnathappaattu  6:10)

பள்ளத்தாக்கிலே  பழுத்த  கனிகளைப்  பார்க்கவும்,  திராட்சச்செடிகள்  துளிர்விட்டு,  மாதளஞ்செடிகள்  பூத்ததா  என்று  அறியவும்,  வாதுமைத்  தோட்டத்துக்குப்  போனேன்.  (உன்னதப்பாட்டு  6:11)

pa'l'laththaakkilea  pazhuththa  kaniga'laip  paarkkavum,  thiraadchachsediga'l  thu'lirvittu,  maatha'lagnsediga'l  pooththathaa  en’ru  a’riyavum,  vaathumaith  thoattaththukkup  poanean.  (unnathappaattu  6:11)

நினையாததுக்குமுன்னே  என்  ஆத்துமா  என்னை  அம்மினதாபின்  இரதங்களுக்கு  ஒப்பாக்கிற்று.  (உன்னதப்பாட்டு  6:12)

ninaiyaathathukkumunnea  en  aaththumaa  ennai  amminathaabin  irathangga'lukku  oppaakkit’ru.  (unnathappaattu  6:12)

திரும்பிவா,  திரும்பிவா,  சூலமித்தியே!  நாங்கள்  உன்னைப்  பார்க்கும்படிக்கு,  திரும்பிவா,  திரும்பிவா.  சூலமித்தியில்  நீங்கள்  என்னத்தைப்  பார்க்கிறீர்கள்?  அவள்  இரண்டு  சேனையின்  கூட்டத்துக்குச்  சமானமானவள்.  (உன்னதப்பாட்டு  6:13)

thirumbivaa,  thirumbivaa,  soolamiththiyea!  naangga'l  unnaip  paarkkumpadikku,  thirumbivaa,  thirumbivaa.  soolamiththiyil  neengga'l  ennaththaip  paarkki’reerga'l?  ava'l  ira'ndu  seanaiyin  koottaththukkuch  samaanamaanava'l.  (unnathappaattu  6:13)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!