Sunday, June 19, 2016

Unnathappaattu 4 | உன்னதப்பாட்டு 4 | Song of Solomon 4

நீ  ரூபவதி,  என்  பிரியமே!  நீ  ரூபவதி;  உன்  முக்காட்டின்  நடுவே  உன்  கண்கள்  புறாக்கண்களாயிருக்கிறது;  உன்  கூந்தல்  கீலேயாத்  மலையில்  தழைமேயும்  வெள்ளாட்டு  மந்தையைப்போலிருக்கிறது.  (உன்னதப்பாட்டு  4:1)

nee  roobavathi,  en  piriyamea!  nee  roobavathi;  un  mukkaattin  naduvea  un  ka'nga'l  pu’raakka'nga'laayirukki’rathu;  un  koonthal  keeleayaath  malaiyil  thazhaimeayum  ve'l'laattu  manthaiyaippoalirukki’rathu.  (unnathappaattu  4:1)

உன்  பற்கள்,  மயிர்  கத்தரிக்கப்பட்டபின்  குளிப்பாட்டப்பட்டுக்  கரையேறுகிறவைகளும்,  ஒன்றாகிலும்  மலடாயிராமல்  எல்லாம்  இரட்டைக்குட்டியீன்றவைகளுமான  ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது.  (உன்னதப்பாட்டு  4:2)

un  pa’rka'l,  mayir  kaththarikkappattapin  ku'lippaattappattuk  karaiyea’rugi’ravaiga'lum,  on’raagilum  maladaayiraamal  ellaam  irattaikkuttiyeen’ravaiga'lumaana  aattumanthaiyaippoalirukki’rathu.  (unnathappaattu  4:2)

உன்  உதடுகள்  சிவப்புநூலுக்குச்  சமானமும்,  உன்  வாக்கு  இன்பமுமாயிருக்கிறது;  உன்  முக்காட்டின்  நடுவே  உன்  கன்னங்கள்  வெடித்த  மாதளம்பழம்போலிருக்கிறது.  (உன்னதப்பாட்டு  4:3)

un  uthaduga'l  sivappunoolukkuch  samaanamum,  un  vaakku  inbamumaayirukki’rathu;  un  mukkaattin  naduvea  un  kannangga'l  vediththa  maatha'lampazhampoalirukki’rathu.  (unnathappaattu  4:3)

உன்  கழுத்து,  பராக்கிரமசாலிகளின்  கேடகங்களாகிய  ஆயிரம்  பரிசைகள்  தூக்கியிருக்கிற  ஆயுதசாலையாக்கப்பட்ட  தாவீதின்  கோபுரம்போலிருக்கிறது.  (உன்னதப்பாட்டு  4:4)

un  kazhuththu,  baraakkiramasaaliga'lin  keadagangga'laagiya  aayiram  parisaiga'l  thookkiyirukki’ra  aayuthasaalaiyaakkappatta  thaaveethin  koapurampoalirukki’rathu.  (unnathappaattu  4:4)

உன்  இரண்டு  ஸ்தனங்களும்  லீலிபுஷ்பங்களில்  மேயும்  வெளிமானின்  இரட்டைக்குட்டிகளுக்குச்  சமானம்.  (உன்னதப்பாட்டு  4:5)

un  ira'ndu  sthanangga'lum  leelipushpangga'lil  meayum  ve'limaanin  irattaikkuttiga'lukkuch  samaanam.  (unnathappaattu  4:5)

பகல்  குளிர்ச்சியாகி  நிழல்  சாய்ந்துபோகும்வரைக்கும்,  நான்  வெள்ளைப்போளமலையிலும்  சாம்பிராணிமலையிலும்  போயிருப்பேன்.  (உன்னதப்பாட்டு  4:6)

pagal  ku'lirchchiyaagi  nizhal  saaynthupoagumvaraikkum,  naan  ve'l'laippoa'lamalaiyilum  saambiraa'nimalaiyilum  poayiruppean.  (unnathappaattu  4:6)

என்  பிரியமே!  நீ  பூரண  ரூபவதி;  உன்னில்  பழுதொன்றுமில்லை.  (உன்னதப்பாட்டு  4:7)

en  piriyamea!  nee  poora'na  roobavathi;  unnil  pazhuthon’rumillai.  (unnathappaattu  4:7)

லீபனோனிலிருந்து  என்னோடே  வா,  என்  மணவாளியே!  லீபனோனிலிருந்து  என்னோடே  வா.  அமனாவின்  கொடுமுடியிலிருந்தும்,  சேனீர்  எர்மோனின்  கொடுமுடியிலிருந்தும்,  சிங்கங்களின்  தாபரங்களிலிருந்தும்,  சிவிங்கிகளின்  மலைகளிலிருந்தும்  கீழே  பார்.  (உன்னதப்பாட்டு  4:8)

leebanoanilirunthu  ennoadea  vaa,  en  ma'navaa'liyea!  leebanoanilirunthu  ennoadea  vaa.  amanaavin  kodumudiyilirunthum,  seaneer  ermoanin  kodumudiyilirunthum,  singgangga'lin  thaabarangga'lilirunthum,  sivinggiga'lin  malaiga'lilirunthum  keezhea  paar.  (unnathappaattu  4:8)

என்  இருதயத்தைக்  கவர்ந்துகொண்டாய்;  என்  சகோதரியே!  என்  மணவாளியே!  உன்  கண்களிலொன்றினாலும்  உன்  கழுத்திலுள்ள  ஒரு  சரப்பணியினாலும்  என்  இருதயத்தைக்  கவர்ந்துகொண்டாய்.  (உன்னதப்பாட்டு  4:9)

en  iruthayaththaik  kavarnthuko'ndaay;  en  sagoathariyea!  en  ma'navaa'liyea!  un  ka'nga'lilon’rinaalum  un  kazhuththilu'l'la  oru  sarappa'niyinaalum  en  iruthayaththaik  kavarnthuko'ndaay.  (unnathappaattu  4:9)

உன்  நேசம்  எவ்வளவு  இன்பமாயிருக்கிறது;  என்  சகோதரியே!  என்  மணவாளியே!  திராட்சரசத்தைப்பார்க்கிலும்  உன்  நேசம்  எவ்வளவு  மதுரமாயிருக்கிறது!  சகல  கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும்  உன்  பரிமளதைலங்கள்  எவ்வளவு  வாசனையாயிருக்கிறது!  (உன்னதப்பாட்டு  4:10)

un  neasam  evva'lavu  inbamaayirukki’rathu;  en  sagoathariyea!  en  ma'navaa'liyea!  thiraadcharasaththaippaarkkilum  un  neasam  evva'lavu  mathuramaayirukki’rathu!  sagala  kanthavarkkangga'laippaarkkilum  un  parima'lathailangga'l  evva'lavu  vaasanaiyaayirukki’rathu!  (unnathappaattu  4:10)

என்  மணவாளியே!  உன்  உதடுகளிலிருந்து  தேன்  ஒழுகுகிறது,  உன்  நாவின்கீழ்  தேனும்  பாலும்  இருக்கிறது,  உன்  வஸ்திரங்களின்  வாசனை  லீபனோனின்  வாசனைக்கொப்பாயிருக்கிறது.  (உன்னதப்பாட்டு  4:11)

en  ma'navaa'liyea!  un  uthaduga'lilirunthu  thean  ozhugugi’rathu,  un  naavinkeezh  theanum  paalum  irukki’rathu,  un  vasthirangga'lin  vaasanai  leebanoanin  vaasanaikkoppaayirukki’rathu.  (unnathappaattu  4:11)

என்  சகோதரியே!  என்  மணவாளியே!  நீ  அடைக்கப்பட்ட  தோட்டமும்,  மறைவு  கட்டப்பட்ட  நீரூற்றும்,  முத்திரிக்கப்பட்ட  கிணறுமாயிருக்கிறாய்.  (உன்னதப்பாட்டு  4:12)

en  sagoathariyea!  en  ma'navaa'liyea!  nee  adaikkappatta  thoattamum,  ma’raivu  kattappatta  neeroot’rum,  muththirikkappatta  ki'na’rumaayirukki’raay.  (unnathappaattu  4:12)

உன்  தோட்டம்  மாதளஞ்செடிகளும்,  அருமையான  கனிமரங்களும்,  மருதோன்றிச்  செடிகளும்,  நளதச்செடிகளும்,  (உன்னதப்பாட்டு  4:13)

un  thoattam  maatha'lagnsediga'lum,  arumaiyaana  kanimarangga'lum,  maruthoan’rich  sediga'lum,  na'lathachsediga'lum,  (unnathappaattu  4:13)

நளதமும்,  குங்குமமும்,  வசம்பும்,  லவங்கமும்,  சகலவித  தூபவர்க்க  மரங்களும்,  வெள்ளைப்போளச்செடிகளும்,  சந்தன  விருட்சங்களும்,  சகலவித  கந்தவர்க்கச்செடிகளுமுள்ள  சிங்காரவனமாயிருக்கிறது.  (உன்னதப்பாட்டு  4:14)

na'lathamum,  kunggumamum,  vasambum,  lavanggamum,  sagalavitha  thoobavarkka  marangga'lum,  ve'l'laippoa'lachsediga'lum,  santhana  virudchangga'lum,  sagalavitha  kanthavarkkachsediga'lumu'l'la  singgaaravanamaayirukki’rathu.  (unnathappaattu  4:14)

தோட்டங்களுக்கு  நீரூற்றும்,  ஜீவத்தண்ணீரின்  துரவும்,  லீபனோனிலிருந்து  ஓடிவரும்  வாய்க்கால்களும்  உண்டாயிருக்கிறது.  (உன்னதப்பாட்டு  4:15)

thoattangga'lukku  neeroot’rum,  jeevaththa'n'neerin  thuravum,  leebanoanilirunthu  oadivarum  vaaykkaalga'lum  u'ndaayirukki’rathu.  (unnathappaattu  4:15)

வாடையே!  எழும்பு;  தென்றலே!  வா;  கந்தப்பிசின்கள்  வடிய  என்  தோட்டத்தில்  வீசு;  என்  நேசர்  தம்முடைய  தோட்டத்துக்கு  வந்து,  தமது  அருமையான  கனிகளைப்  புசிப்பாராக.  (உன்னதப்பாட்டு  4:16)

vaadaiyea!  ezhumbu;  then’ralea!  vaa;  kanthappisinga'l  vadiya  en  thoattaththil  veesu;  en  neasar  thammudaiya  thoattaththukku  vanthu,  thamathu  arumaiyaana  kaniga'laip  pusippaaraaga.  (unnathappaattu  4:16)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!