Sunday, June 19, 2016

Unnathappaattu 2 | உன்னதப்பாட்டு 2 | Song of Solomon 2

நான்  சாரோனின்  ரோஜாவும்,  பள்ளத்தாக்குகளின்  லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்.  (உன்னதப்பாட்டு  2:1)

naan  saaroanin  roajaavum,  pa'l'laththaakkuga'lin  leelipushpamumaayirukki’rean.  (unnathappaattu  2:1)

முள்ளுகளுக்குள்ளே  லீலிபுஷ்பம்  எப்படியிருக்கிறதோ,  அப்படியே  குமாரத்திகளுக்குள்ளே  எனக்குப்  பிரியமானவளும்  இருக்கிறாள்.  (உன்னதப்பாட்டு  2:2)

mu'l'luga'lukku'l'lea  leelipushpam  eppadiyirukki’rathoa,  appadiyea  kumaaraththiga'lukku'l'lea  enakkup  piriyamaanava'lum  irukki’raa'l.  (unnathappaattu  2:2)

காட்டுமரங்களுக்குள்ளே  கிச்சிலிமரம்  எப்படியிருக்கிறதோ,  அப்படியே  குமாரருக்குள்ளே  என்  நேசர்  இருக்கிறார்;  அதின்  நிழலிலே  வாஞ்சையாய்  உட்காருகிறேன்,  அதின்  கனி  என்  வாய்க்கு  மதுரமாயிருக்கிறது.  (உன்னதப்பாட்டு  2:3)

kaattumarangga'lukku'l'lea  kichchilimaram  eppadiyirukki’rathoa,  appadiyea  kumaararukku'l'lea  en  neasar  irukki’raar;  athin  nizhalilea  vaagnchaiyaay  udkaarugi’rean,  athin  kani  en  vaaykku  mathuramaayirukki’rathu.  (unnathappaattu  2:3)

என்னை  விருந்துசாலைக்கு  அழைத்துக்கொண்டுபோனார்;  என்மேல்  பறந்த  அவருடைய  கொடி  நேசமே.  (உன்னதப்பாட்டு  2:4)

ennai  virunthusaalaikku  azhaiththukko'ndupoanaar;  enmeal  pa’rantha  avarudaiya  kodi  neasamea.  (unnathappaattu  2:4)

திராட்சரசத்தால்  என்னைத்  தேற்றுங்கள்,  கிச்சிலிப்பழங்களால்  என்னை  ஆற்றுங்கள்;  நேசத்தால்  சோகமடைந்திருக்கிறேன்.  (உன்னதப்பாட்டு  2:5)

thiraadcharasaththaal  ennaith  theat’rungga'l,  kichchilippazhangga'laal  ennai  aat’rungga'l;  neasaththaal  soagamadainthirukki’rean.  (unnathappaattu  2:5)

அவர்  இடதுகை  என்  தலையின்கீழ்  இருக்கிறது;  அவர்  வலதுகை  என்னை  அணைத்துக்கொள்ளுகிறது.  (உன்னதப்பாட்டு  2:6)

avar  idathukai  en  thalaiyinkeezh  irukki’rathu;  avar  valathukai  ennai  a'naiththukko'l'lugi’rathu.  (unnathappaattu  2:6)

எருசலேமின்  குமாரத்திகளே!  எனக்குப்  பிரியமானவளுக்கு  மனதாகுமட்டும்,  நீங்கள்  அவளை  விழிக்கப்பண்ணாமலும்  எழுப்பாமலுமிருக்கும்படி  வெளிமான்கள்மேலும்  வெளியின்  மரைகள்மேலும்  உங்களை  ஆணையிடுகிறேன்.  (உன்னதப்பாட்டு  2:7)

erusaleamin  kumaaraththiga'lea!  enakkup  piriyamaanava'lukku  manathaagumattum,  neengga'l  ava'lai  vizhikkappa'n'naamalum  ezhuppaamalumirukkumpadi  ve'limaanga'lmealum  ve'liyin  maraiga'lmealum  ungga'lai  aa'naiyidugi’rean.  (unnathappaattu  2:7)

இது  என்  நேசருடைய  சத்தம்!  இதோ,  அவர்  மலைகள்மேல்  குதித்தும்  மேடுகள்மேல்  துள்ளியும்  வருகிறார்.  (உன்னதப்பாட்டு  2:8)

ithu  en  neasarudaiya  saththam!  ithoa,  avar  malaiga'lmeal  kuthiththum  meaduga'lmeal  thu'l'liyum  varugi’raar.  (unnathappaattu  2:8)

என்  நேசர்  வெளிமானுக்கும்  மரைக்குட்டிக்கும்  ஒப்பாயிருக்கிறார்;  இதோ,  அவர்  எங்கள்  மதிலுக்குப்  புறம்பே  நின்று,  பலகணி  வழியாய்ப்  பார்த்து,  கிராதியின்  வழியாய்த்  தமது  மலர்ந்த  முகத்தைக்  காண்பிக்கிறார்.  (உன்னதப்பாட்டு  2:9)

en  neasar  ve'limaanukkum  maraikkuttikkum  oppaayirukki’raar;  ithoa,  avar  engga'l  mathilukkup  pu’rambea  nin’ru,  palaga'ni  vazhiyaayp  paarththu,  kiraathiyin  vazhiyaayth  thamathu  malarntha  mugaththaik  kaa'nbikki’raar.  (unnathappaattu  2:9)

என்  நேசர்  என்னோடே  பேசி:  என்  பிரியமே!  என்  ரூபவதியே!  எழுந்துவா.  (உன்னதப்பாட்டு  2:10)

en  neasar  ennoadea  peasi:  en  piriyamea!  en  roobavathiyea!  ezhunthuvaa.  (unnathappaattu  2:10)

இதோ,  மாரிகாலம்  சென்றது,  மழைபெய்து  ஒழிந்தது.  (உன்னதப்பாட்டு  2:11)

ithoa,  maarikaalam  sen’rathu,  mazhaipeythu  ozhinthathu.  (unnathappaattu  2:11)

பூமியிலே  புஷ்பங்கள்  காணப்படுகிறது;  குருவிகள்  பாடுங்காலம்  வந்தது,  காட்டுப்புறாவின்  சத்தம்  நமது  தேசத்தில்  கேட்கப்படுகிறது.  (உன்னதப்பாட்டு  2:12)

boomiyilea  pushpangga'l  kaa'nappadugi’rathu;  kuruviga'l  paadungkaalam  vanthathu,  kaattuppu’raavin  saththam  namathu  theasaththil  keadkappadugi’rathu.  (unnathappaattu  2:12)

அத்திமரம்  காய்காய்த்தது;  திராட்சக்கொடிகள்  பூப்பூத்து  வாசனையும்  பரிமளிக்கிறது;  என்  பிரியமே!  என்  ரூபவதியே!  நீ  எழுந்துவா.  (உன்னதப்பாட்டு  2:13)

aththimaram  kaaykaayththathu;  thiraadchakkodiga'l  pooppooththu  vaasanaiyum  parima'likki’rathu;  en  piriyamea!  en  roobavathiyea!  nee  ezhunthuvaa.  (unnathappaattu  2:13)

கன்மலையின்  வெடிப்புகளிலும்  சிகரங்களின்  மறைவிடங்களிலும்  தங்குகிற  என்  புறாவே!  உன்  முகரூபத்தை  எனக்குக்  காண்பி,  உன்  சத்தத்தை  நான்  கேட்கட்டும்;  உன்  சத்தம்  இன்பமும்,  உன்  முகரூபம்  அழகுமாயிருக்கிறது  என்றார்.  (உன்னதப்பாட்டு  2:14)

kanmalaiyin  vedippuga'lilum  sigarangga'lin  ma’raividangga'lilum  thanggugi’ra  en  pu’raavea!  un  mugaroobaththai  enakkuk  kaa'nbi,  un  saththaththai  naan  keadkattum;  un  saththam  inbamum,  un  mugaroobam  azhagumaayirukki’rathu  en’raar.  (unnathappaattu  2:14)

திராட்சத்தோட்டங்களைக்  கெடுக்கிற  குழிநரிகளையும்  சிறுநரிகளையும்  நமக்குப்  பிடியுங்கள்;  நம்முடைய  திராட்சத்தோட்டங்கள்  பூவும்  பிஞ்சுமாயிருக்கிறதே.  (உன்னதப்பாட்டு  2:15)

thiraadchaththoattangga'laik  kedukki’ra  kuzhinariga'laiyum  si’runariga'laiyum  namakkup  pidiyungga'l;  nammudaiya  thiraadchaththoattangga'l  poovum  pignchumaayirukki’rathea.  (unnathappaattu  2:15)

என்  நேசர்  என்னுடையவர்,  நான்  அவருடையவள்.  அவர்  லீலிபுஷ்பங்களுக்குள்ளே  மேய்கிறார்.  (உன்னதப்பாட்டு  2:16)

en  neasar  ennudaiyavar,  naan  avarudaiyava'l.  avar  leelipushpangga'lukku'l'lea  meaygi’raar.  (unnathappaattu  2:16)

என்  நேசரே!  பகல்  குளிர்ச்சியாகி,  நிழல்  சாய்ந்துபோகும்வரைக்கும்,  நீர்  திரும்பி,  குன்றும்  பிளப்புமான  கன்மலைகளில்  குதித்துவரும்  கலைமானுக்கும்  மரைகளின்  குட்டிக்கும்  சமானமாயிரும்.  (உன்னதப்பாட்டு  2:17)

en  neasarea!  pagal  ku'lirchchiyaagi,  nizhal  saaynthupoagumvaraikkum,  neer  thirumbi,  kun’rum  pi'lappumaana  kanmalaiga'lil  kuthiththuvarum  kalaimaanukkum  maraiga'lin  kuttikkum  samaanamaayirum.  (unnathappaattu  2:17)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!