Thursday, June 09, 2016

Theeththu 3 | தீத்து 3 | Titus 3

துரைத்தனங்களுக்கும்  அதிகாரங்களுக்கும்  கீழ்ப்படிந்து  அடங்கியிருக்கவும்,  சகலவிதமான  நற்கிரியைகளையும்  செய்ய  ஆயத்தமாயிருக்கவும்,  (தீத்து  3:1)

thuraiththanangga'lukkum  athigaarangga'lukkum  keezhppadinthu  adanggiyirukkavum,  sagalavithamaana  na’rkiriyaiga'laiyum  seyya  aayaththamaayirukkavum,  (theeththu  3:1)

ஒருவனையும்  தூஷியாமலும்,  சண்டை  பண்ணாமலும்,  பொறுமையுள்ளவர்களாய்  எல்லா  மனுஷருக்கும்  சாந்தகுணத்தைக்  காண்பிக்கவும்  அவர்களுக்கு  நினைப்பூட்டு.  (தீத்து  3:2)

oruvanaiyum  thooshiyaamalum,  sa'ndai  pa'n'naamalum,  po’rumaiyu'l'lavarga'laay  ellaa  manusharukkum  saanthaku'naththaik  kaa'nbikkavum  avarga'lukku  ninaippoottu.  (theeththu  3:2)

ஏனெனில்,  முற்காலத்திலே  நாமும்  புத்தியீனரும்,  கீழ்ப்படியாதவர்களும்,  வழிதப்பி  நடக்கிறவர்களும்,  பலவித  இச்சைகளுக்கும்  இன்பங்களுக்கும்  அடிமைப்பட்டவர்களும்,  துர்க்குணத்தோடும்  பொறாமையோடும்  ஜீவனம்பண்ணுகிறவர்களும்,  பகைக்கப்படத்தக்கவர்களும்,  ஒருவரையொருவர்  பகைக்கிறவர்களுமாயிருந்தோம்.  (தீத்து  3:3)

eanenil,  mu’rkaalaththilea  naamum  buththiyeenarum,  keezhppadiyaathavarga'lum,  vazhithappi  nadakki’ravarga'lum,  palavitha  ichchaiga'lukkum  inbangga'lukkum  adimaippattavarga'lum,  thurkku'naththoadum  po’raamaiyoadum  jeevanampa'n'nugi’ravarga'lum,  pagaikkappadaththakkavarga'lum,  oruvaraiyoruvar  pagaikki’ravarga'lumaayirunthoam.  (theeththu  3:3)

நம்முடைய  இரட்சகராகிய  தேவனுடைய  தயையும்  மனுஷர்மேலுள்ள  அன்பும்  பிரசன்னமானபோது,  (தீத்து  3:4)

nammudaiya  iradchagaraagiya  theavanudaiya  thayaiyum  manusharmealu'l'la  anbum  pirasannamaanapoathu,  (theeththu  3:4)

நாம்  செய்த  நீதியின்  கிரியைகளினிமித்தம்  அவர்  நம்மை  இரட்சியாமல்,  தமது  இரக்கத்தின்படியே,  மறுஜென்ம  முழுக்கினாலும்,  பரிசுத்த  ஆவியினுடைய  புதிதாக்குதலினாலும்  நம்மை  இரட்சித்தார்.  (தீத்து  3:5)

naam  seytha  neethiyin  kiriyaiga'linimiththam  avar  nammai  iradchiyaamal,  thamathu  irakkaththinpadiyea,  ma’rujenma  muzhukkinaalum,  parisuththa  aaviyinudaiya  puthithaakkuthalinaalum  nammai  iradchiththaar.  (theeththu  3:5)

தமது  கிருபையினாலே  நாம்  நீதிமான்களாக்கப்பட்டு,  நித்திய  ஜீவனுண்டாகும்  என்கிற  நம்பிக்கையின்படி  சுதந்தரராகத்தக்கதாக,  (தீத்து  3:6)

thamathu  kirubaiyinaalea  naam  neethimaanga'laakkappattu,  niththiya  jeevanu'ndaagum  engi’ra  nambikkaiyinpadi  suthanthararaagaththakkathaaga,  (theeththu  3:6)

அவர்  நமது  இரட்சகராகிய  இயேசுகிறிஸ்து  மூலமாய்,  அந்தப்  பரிசுத்தஆவியை  நம்மேல்  சம்பூரணமாய்ப்  பொழிந்தருளினார்.  (தீத்து  3:7)

avar  namathu  iradchagaraagiya  iyeasuki’risthu  moolamaay,  anthap  parisuththaaaviyai  nammeal  sampoora'namaayp  pozhintharu'linaar.  (theeththu  3:7)

இந்த  வார்த்தை  உண்மையுள்ளது;  தேவனிடத்தில்  விசுவாசமானவர்கள்  நற்கிரியைகளைச்  செய்ய  ஜாக்கிரதையாயிருக்கும்படி  நீ  இவைகளைக்குறித்துத்  திட்டமாய்ப்  போதிக்கவேண்டுமென்று  விரும்புகிறேன்;  இவைகளே  நன்மையும்  மனுஷருக்குப்  பிரயோஜனமுமானவைகள்.  (தீத்து  3:8)

intha  vaarththai  u'nmaiyu'l'lathu;  theavanidaththil  visuvaasamaanavarga'l  na’rkiriyaiga'laich  seyya  jaakkirathaiyaayirukkumpadi  nee  ivaiga'laikku’riththuth  thittamaayp  poathikkavea'ndumen’ru  virumbugi’rean;  ivaiga'lea  nanmaiyum  manusharukkup  pirayoajanamumaanavaiga'l.  (theeththu  3:8)

புத்தியீனமான  தர்க்கங்களையும்,  வம்சவரலாறுகளையும்,  சண்டைகளையும்,  நியாயப்பிரமாணத்தைக்குறித்து  உண்டாகிற  வாக்குவாதங்களையும்  விட்டு  விலகு;  அவைகள்  அப்பிரயோஜனமும்  வீணுமாயிருக்கும்.  (தீத்து  3:9)

buththiyeenamaana  tharkkangga'laiyum,  vamsavaralaa’ruga'laiyum,  sa'ndaiga'laiyum,  niyaayappiramaa'naththaikku’riththu  u'ndaagi’ra  vaakkuvaathangga'laiyum  vittu  vilagu;  avaiga'l  appirayoajanamum  vee'numaayirukkum.  (theeththu  3:9)

வேதப்புரட்டனாயிருக்கிற  ஒருவனுக்கு  நீ  இரண்டொருதரம்  புத்தி  சொன்னபின்பு  அவனைவிட்டு  விலகு.  (தீத்து  3:10)

veathappurattanaayirukki’ra  oruvanukku  nee  ira'ndorutharam  buththi  sonnapinbu  avanaivittu  vilagu.  (theeththu  3:10)

அப்படிப்பட்டவன்  நிலைதவறி,  தன்னிலேதானே  ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப்  பாவஞ்செய்கிறவனென்று  அறிந்திருக்கிறாயே.  (தீத்து  3:11)

appadippattavan  nilaithava’ri,  thannileathaanea  aakkinaiththeerppudaiyavanaayp  paavagnseygi’ravanen’ru  a’rinthirukki’raayea.  (theeththu  3:11)

நான்  அர்த்தெமாவையாவது  தீகிக்குவையாவது  உன்னிடத்தில்  அனுப்பும்போது  நீ  நிக்கொப்போலிக்கு  என்னிடத்தில்  வர  ஜாக்கிரதைப்படு;  மாரிகாலத்திலே  அங்கே  தங்கும்படி  தீர்மானித்திருக்கிறேன்.  (தீத்து  3:12)

naan  arththemaavaiyaavathu  theegikkuvaiyaavathu  unnidaththil  anuppumpoathu  nee  nikkoppoalikku  ennidaththil  vara  jaakkirathaippadu;  maarikaalaththilea  anggea  thanggumpadi  theermaaniththirukki’rean.  (theeththu  3:12)

நியாயசாஸ்திரியாகிய  சேனாவுக்கும்  அப்பொல்லோவுக்கும்  ஒரு  குறைவுமில்லாதபடிக்கு  அவர்களை  ஜாக்கிரதையாய்  விசாரித்து  வழிவிட்டனுப்பு.  (தீத்து  3:13)

niyaayasaasthiriyaagiya  seanaavukkum  appolloavukkum  oru  ku’raivumillaathapadikku  avarga'lai  jaakkirathaiyaay  visaariththu  vazhivittanuppu.  (theeththu  3:13)

நம்முடையவர்களும்  கனியற்றவர்களாயிராதபடி  குறைவுகளை  நீக்குகிறதற்கேதுவாக  நற்கிரியைகளைச்  செய்யப்பழகட்டும்.  (தீத்து  3:14)

nammudaiyavarga'lum  kaniyat’ravarga'laayiraathapadi  ku’raivuga'lai  neekkugi’ratha’rkeathuvaaga  na’rkiriyaiga'laich  seyyappazhagattum.  (theeththu  3:14)

என்னோடிருக்கிற  யாவரும்  உனக்கு  வாழ்த்துதல்  சொல்லுகிறார்கள்.  விசுவாசத்திலே  நம்மைச்  சிநேகிக்கிறவர்களுக்கு  வாழ்த்துதல்  சொல்லு.  கிருபையானது  உங்களனைவரோடுங்கூட  இருப்பதாக.  ஆமென்.  (தீத்து  3:15)

ennoadirukki’ra  yaavarum  unakku  vaazhththuthal  sollugi’raarga'l.  visuvaasaththilea  nammaich  sineagikki’ravarga'lukku  vaazhththuthal  sollu.  kirubaiyaanathu  ungga'lanaivaroadungkooda  iruppathaaga.  aamen.  (theeththu  3:15)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!