Thursday, June 09, 2016

Theeththu 1 | தீத்து 1 | Titus 1

தேவனுடைய  ஊழியக்காரனும்,  இயேசுகிறிஸ்துவினுடைய  அப்போஸ்தலனுமாகிய  பவுல்,  பொதுவான  விசுவாசத்தின்படி  உத்தம  குமாரனாகிய  தீத்துவுக்கு  எழுதுகிறதாவது:  (தீத்து  1:1)

theavanudaiya  oozhiyakkaaranum,  iyeasuki’risthuvinudaiya  appoasthalanumaagiya  pavul,  pothuvaana  visuvaasaththinpadi  uththama  kumaaranaagiya  theeththuvukku  ezhuthugi’rathaavathu:  (theeththu  1:1)

பிதாவாகிய  தேவனாலும்,  நம்முடைய  இரட்சகராயிருக்கிற  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினாலும்,  கிருபையும்  இரக்கமும்  சமாதானமும்  உண்டாவதாக.  (தீத்து  1:2)

pithaavaagiya  theavanaalum,  nammudaiya  iradchagaraayirukki’ra  karththaraagiya  iyeasuki’risthuvinaalum,  kirubaiyum  irakkamum  samaathaanamum  u'ndaavathaaga.  (theeththu  1:2)

பொய்யுரையாத  தேவன்  ஆதிகாலமுதல்  நித்திய  ஜீவனைக்குறித்து  வாக்குத்தத்தம்பண்ணி,  அதைக்குறித்த  நம்பிக்கையைப்பற்றி  தேவபக்திக்கேதுவான  சத்தியத்தை  அறிகிற  அறிவும்  விசுவாசமும்  தேவனால்  தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு  உண்டாகும்படி,  (தீத்து  1:3)

poyyuraiyaatha  theavan  aathikaalamuthal  niththiya  jeevanaikku’riththu  vaakkuththaththampa'n'ni,  athaikku’riththa  nambikkaiyaippat’ri  theavabakthikkeathuvaana  saththiyaththai  a’rigi’ra  a’rivum  visuvaasamum  theavanaal  therinthuko'l'lappattavarga'lukku  u'ndaagumpadi,  (theeththu  1:3)

ஏற்றகாலங்களிலே  நம்முடைய  இரட்சகராகிய  தேவனுடைய  கட்டளையின்படி  எனக்கு  ஒப்புவிக்கப்பட்ட  பிரசங்கத்தினாலே  தமது  வார்த்தையை  வெளிப்படுத்தினார்.  (தீத்து  1:4)

eat’rakaalangga'lilea  nammudaiya  iradchagaraagiya  theavanudaiya  katta'laiyinpadi  enakku  oppuvikkappatta  pirasanggaththinaalea  thamathu  vaarththaiyai  ve'lippaduththinaar.  (theeththu  1:4)

நீ  குறைவாயிருக்கிறவைகளை  ஒழுங்குபடுத்தும்படிக்கும்,  நான்  உனக்குக்  கட்டளையிட்டபடியே,  பட்டணங்கள்தோறும்  மூப்பரை  ஏற்படுத்தும்படிக்கும்,  உன்னைக்  கிரேத்தாதீவிலே  விட்டுவந்தேனே.  (தீத்து  1:5)

nee  ku’raivaayirukki’ravaiga'lai  ozhunggupaduththumpadikkum,  naan  unakkuk  katta'laiyittapadiyea,  patta'nangga'lthoa’rum  moopparai  ea’rpaduththumpadikkum,  unnaik  kireaththaatheevilea  vittuvantheanea.  (theeththu  1:5)

குற்றஞ்சாட்டப்படாதவனும்,  ஒரே  மனைவியையுடைய  புருஷனும்,  துன்மார்க்கரென்றும்  அடங்காதவர்களென்றும்  பேரெடுக்காத  விசுவாசமுள்ள  பிள்ளைகளை  உடையவனுமாகிய  ஒருவனிருந்தால்  அவனையே  ஏற்படுத்தலாம்.  (தீத்து  1:6)

kut’ragnsaattappadaathavanum,  orea  manaiviyaiyudaiya  purushanum,  thunmaarkkaren’rum  adanggaathavarga'len’rum  pearedukkaatha  visuvaasamu'l'la  pi'l'laiga'lai  udaiyavanumaagiya  oruvanirunthaal  avanaiyea  ea’rpaduththalaam.  (theeththu  1:6)

ஏனெனில்,  கண்காணியானவன்  தேவனுடைய  உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய்,  குற்றஞ்சாட்டப்படாதவனும்,  தன்  இஷ்டப்படி  செய்யாதவனும்,  முற்கோபமில்லாதவனும்,  மதுபானப்பிரியமில்லாதவனும்,  அடியாதவனும்,  இழிவான  ஆதாயத்தை  இச்சியாதவனும்,  (தீத்து  1:7)

eanenil,  ka'nkaa'niyaanavan  theavanudaiya  ukkiraa'nakkaaranukkeat’ravithamaay,  kut’ragnsaattappadaathavanum,  than  ishdappadi  seyyaathavanum,  mu’rkoabamillaathavanum,  mathubaanappiriyamillaathavanum,  adiyaathavanum,  izhivaana  aathaayaththai  ichchiyaathavanum,  (theeththu  1:7)

அந்நியரை  உபசரிக்கிறவனும்,  நல்லோர்மேல்  பிரியமுள்ளவனும்,  தெளிந்த  புத்தியுள்ளவனும்,  நீதிமானும்,  பரிசுத்தவானும்,  இச்சையடக்கமுள்ளவனும்,  (தீத்து  1:8)

anniyarai  ubasarikki’ravanum,  nalloarmeal  piriyamu'l'lavanum,  the'lintha  buththiyu'l'lavanum,  neethimaanum,  parisuththavaanum,  ichchaiyadakkamu'l'lavanum,  (theeththu  1:8)

ஆரோக்கியமான  உபதேசத்தினாலே  புத்திசொல்லவும்,  எதிர்பேசுகிறவர்களைக்  கண்டனம்  பண்ணவும்  வல்லவனுமாயிருக்கும்படி,  தான்  போதிக்கப்பட்டதற்கேற்ற  உண்மையான  வசனத்தை  நன்றாய்ப்  பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.  (தீத்து  1:9)

aaroakkiyamaana  ubatheasaththinaalea  buththisollavum,  ethirpeasugi’ravarga'laik  ka'ndanam  pa'n'navum  vallavanumaayirukkumpadi,  thaan  poathikkappattatha’rkeat’ra  u'nmaiyaana  vasanaththai  nan’raayp  pat’rikko'l'lugi’ravanumaayirukkavea'ndum.  (theeththu  1:9)

அநேகர்,  விசேஷமாய்  விருத்தசேதனமுள்ளவர்கள்,  அடங்காதவர்களும்,  வீண்பேச்சுக்காரரும்,  மனதை  மயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள்.  (தீத்து  1:10)

aneagar,  viseashamaay  viruththaseathanamu'l'lavarga'l,  adanggaathavarga'lum,  vee'npeachchukkaararum,  manathai  mayakkugi’ravarga'lumaayirukki’raarga'l.  (theeththu  1:10)

அவர்களுடைய  வாயை  அடக்கவேண்டும்;  அவர்கள்  இழிவான  ஆதாயத்துக்காகத்  தகாதவைகளை  உபதேசித்து,  முழுக்குடும்பங்களையும்  கவிழ்த்துப்போடுகிறார்கள்.  (தீத்து  1:11)

avarga'ludaiya  vaayai  adakkavea'ndum;  avarga'l  izhivaana  aathaayaththukkaagath  thagaathavaiga'lai  ubatheasiththu,  muzhukkudumbangga'laiyum  kavizhththuppoadugi’raarga'l.  (theeththu  1:11)

கிரேத்தாதீவார்  ஓயாப்பொய்யர்,  துஷ்டமிருகங்கள்,  பெருவயிற்றுச்  சோம்பேறிகள்  என்று  அவர்களிலொருவனாகிய  அவர்கள்  தீர்க்கதரிசியானவனே  சொல்லியிருக்கிறான்.  (தீத்து  1:12)

kireaththaatheevaar  oayaappoyyar,  thushdamirugangga'l,  peruvayit’ruch  soambea’riga'l  en’ru  avarga'liloruvanaagiya  avarga'l  theerkkatharisiyaanavanea  solliyirukki’raan.  (theeththu  1:12)

இந்தச்  சாட்சி  உண்மையாயிருக்கிறது;  இது  முகாந்தரமாக,  அவர்கள்  யூதருடைய  கட்டுக்கதைகளுக்கும்,  சத்தியத்தை  விட்டு  விலகுகிற  மனுஷருடைய  கற்பனைகளுக்கும்  செவிகொடாமல்,  (தீத்து  1:13)

inthach  saadchi  u'nmaiyaayirukki’rathu;  ithu  mugaantharamaaga,  avarga'l  yootharudaiya  kattukkathaiga'lukkum,  saththiyaththai  vittu  vilagugi’ra  manusharudaiya  ka’rpanaiga'lukkum  sevikodaamal,  (theeththu  1:13)

விசுவாசத்திலே  ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி,  நீ  அவர்களைக்  கண்டிப்பாய்க்  கடிந்துகொள்.  (தீத்து  1:14)

visuvaasaththilea  aaroakkiyamu'l'lavarga'laayirukkumpadi,  nee  avarga'laik  ka'ndippaayk  kadinthuko'l.  (theeththu  1:14)

சுத்தமுள்ளவர்களுக்குச்  சகலமும்  சுத்தமாயிருக்கும்;  அசுத்தமுள்ளவர்களுக்கும்  அவிசுவாசமுள்ளவர்களுக்கும்  ஒன்றும்  சுத்தமாயிராது;  அவர்களுடைய  புத்தியும்  மனச்சாட்சியும்  அசுத்தமாயிருக்கும்.  (தீத்து  1:15)

suththamu'l'lavarga'lukkuch  sagalamum  suththamaayirukkum;  asuththamu'l'lavarga'lukkum  avisuvaasamu'l'lavarga'lukkum  on’rum  suththamaayiraathu;  avarga'ludaiya  buththiyum  manachsaadchiyum  asuththamaayirukkum.  (theeththu  1:15)

அவர்கள்  தேவனை  அறிந்திருக்கிறோமென்று  அறிக்கைபண்ணுகிறார்கள்,  கிரியைகளினாலோ  அவரை  மறுதலிக்கிறார்கள்;  அவர்கள்  அருவருக்கப்படத்தக்கவர்களும்,  கீழ்ப்படியாதவர்களும்,  எந்த  நற்கிரியையுஞ்செய்ய  ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.  (தீத்து  1:16)

avarga'l  theavanai  a’rinthirukki’roamen’ru  a’rikkaipa'n'nugi’raarga'l,  kiriyaiga'linaaloa  avarai  ma’ruthalikki’raarga'l;  avarga'l  aruvarukkappadaththakkavarga'lum,  keezhppadiyaathavarga'lum,  entha  na’rkiriyaiyugnseyya  aagaathavarga'lumaayirukki’raarga'l.  (theeththu  1:16)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!