Thursday, June 30, 2016

Sanggeetham 99 | சங்கீதம் 99 | Psalms 99

கர்த்தர்  ராஜரிகம்பண்ணுகிறார்,  ஜனங்கள்  தத்தளிப்பார்களாக;  அவர்  கேருபீன்களின்  மத்தியில்  வீற்றிருக்கிறார்,  பூமி  அசைவதாக.  (சங்கீதம்  99:1)

karththar  raajarigampa'n'nugi’raar,  janangga'l  thaththa'lippaarga'laaga;  avar  kearubeenga'lin  maththiyil  veet’rirukki’raar,  boomi  asaivathaaga.  (sanggeetham  99:1)

கர்த்தர்  சீயோனில்  பெரியவர்,  அவர்  எல்லா  ஜனங்கள்மேலும்  உயர்ந்தவர்.  (சங்கீதம்  99:2)

karththar  seeyoanil  periyavar,  avar  ellaa  janangga'lmealum  uyarnthavar.  (sanggeetham  99:2)

மகத்துவமும்  பயங்கரமுமான  உமது  நாமத்தை  அவர்கள்  துதிப்பார்களாக;  அது  பரிசுத்தமுள்ளது.  (சங்கீதம்  99:3)

magaththuvamum  bayanggaramumaana  umathu  naamaththai  avarga'l  thuthippaarga'laaga;  athu  parisuththamu'l'lathu.  (sanggeetham  99:3)

ராஜாவின்  வல்லமை  நீதியில்  பிரியப்படுகிறது,  தேவரீர்  நியாயத்தை  நிலைநிறுத்துகிறீர்;  நீர்  யாக்கோபில்  நியாயமும்  நீதியும்  செய்கிறீர்.  (சங்கீதம்  99:4)

raajaavin  vallamai  neethiyil  piriyappadugi’rathu,  theavareer  niyaayaththai  nilaini’ruththugi’reer;  neer  yaakkoabil  niyaayamum  neethiyum  seygi’reer.  (sanggeetham  99:4)

நம்முடைய  தேவனாகிய  கர்த்தரை  உயர்த்தி,  அவர்  பாதபடியிலே  பணியுங்கள்;  அவர்  பரிசுத்தமுள்ளவர்.  (சங்கீதம்  99:5)

nammudaiya  theavanaagiya  karththarai  uyarththi,  avar  paathapadiyilea  pa'niyungga'l;  avar  parisuththamu'l'lavar.  (sanggeetham  99:5)

அவருடைய  ஆசாரியரில்  மோசேயும்  ஆரோனும்,  அவர்  நாமத்தைப்பற்றிக்  கூப்பிடுகிறவர்களில்  சாமுவேலும்,  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டார்கள்;  அவர்  அவர்களுக்கு  மறுஉத்தரவு  அருளினார்.  (சங்கீதம்  99:6)

avarudaiya  aasaariyaril  moaseayum  aaroanum,  avar  naamaththaippat’rik  kooppidugi’ravarga'lil  saamuvealum,  karththarai  noakkik  kooppittaarga'l;  avar  avarga'lukku  ma’ruuththaravu  aru'linaar.  (sanggeetham  99:6)

மேகஸ்தம்பத்திலிருந்து  அவர்களோடே  பேசினார்;  அவர்கள்  அவருடைய  சாட்சிப்பிரமாணங்களையும்  அவர்  தங்களுக்குக்  கொடுத்த  கட்டளையையும்  கைக்கொண்டார்கள்.  (சங்கீதம்  99:7)

meagasthambaththilirunthu  avarga'loadea  peasinaar;  avarga'l  avarudaiya  saadchippiramaa'nangga'laiyum  avar  thangga'lukkuk  koduththa  katta'laiyaiyum  kaikko'ndaarga'l.  (sanggeetham  99:7)

எங்கள்  தேவனாகிய  கர்த்தாவே,  நீர்  அவர்களுக்கு  உத்தரவு  அருளினீர்;  நீர்  அவர்கள்  கிரியைகளினிமித்தம்  நீதி  சரிக்கட்டினபோதிலும்,  அவர்களுக்கு  மன்னிக்கிற  தேவனாயிருந்தீர்.  (சங்கீதம்  99:8)

engga'l  theavanaagiya  karththaavea,  neer  avarga'lukku  uththaravu  aru'lineer;  neer  avarga'l  kiriyaiga'linimiththam  neethi  sarikkattinapoathilum,  avarga'lukku  mannikki’ra  theavanaayiruntheer.  (sanggeetham  99:8)

நம்முடைய  தேவனாகிய  கர்த்தரை  உயர்த்தி,  அவருடைய  பரிசுத்த  பர்வதத்திற்கு  நேராகப்  பணியுங்கள்;  நம்முடைய  தேவனாகிய  கர்த்தர்  பரிசுத்தமுள்ளவர்.  (சங்கீதம்  99:9)

nammudaiya  theavanaagiya  karththarai  uyarththi,  avarudaiya  parisuththa  parvathaththi’rku  nearaagap  pa'niyungga'l;  nammudaiya  theavanaagiya  karththar  parisuththamu'l'lavar.  (sanggeetham  99:9)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!