Thursday, June 30, 2016

Sanggeetham 96 | சங்கீதம் 96 | Psalms 96

கர்த்தருக்குப்  புதுப்பாட்டைப்  பாடுங்கள்;  பூமியின்  குடிகளே,  எல்லாரும்  கர்த்தரைப்  பாடுங்கள்.  (சங்கீதம்  96:1)

karththarukkup  puthuppaattaip  paadungga'l;  boomiyin  kudiga'lea,  ellaarum  karththaraip  paadungga'l.  (sanggeetham  96:1)

கர்த்தரைப்  பாடி,  அவருடைய  நாமத்தை  ஸ்தோத்திரித்து,  நாளுக்குநாள்  அவருடைய  இரட்சிப்பைச்  சுவிசேஷமாய்  அறிவியுங்கள்.  (சங்கீதம்  96:2)

karththaraip  paadi,  avarudaiya  naamaththai  sthoaththiriththu,  naa'lukkunaa'l  avarudaiya  iradchippaich  suviseashamaay  a’riviyungga'l.  (sanggeetham  96:2)

ஜாதிகளுக்குள்  அவருடைய  மகிமையையும்,  சகல  ஜனங்களுக்குள்ளும்  அவருடைய  அதிசயங்களையும்  விவரித்துச்  சொல்லுங்கள்.  (சங்கீதம்  96:3)

jaathiga'lukku'l  avarudaiya  magimaiyaiyum,  sagala  janangga'lukku'l'lum  avarudaiya  athisayangga'laiyum  vivariththuch  sollungga'l.  (sanggeetham  96:3)

கர்த்தர்  பெரியவரும்,  மிகவும்  ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்;  எல்லா  தேவர்களிலும்  பயப்படத்தக்கவர்  அவரே.  (சங்கீதம்  96:4)

karththar  periyavarum,  migavum  sthoaththirikkappadaththakkavarumaayirukki’raar;  ellaa  theavarga'lilum  bayappadaththakkavar  avarea.  (sanggeetham  96:4)

சகல  ஜனங்களுடைய  தேவர்களும்  விக்கிரகங்கள்தானே;  கர்த்தரோ  வானங்களை  உண்டாக்கினவர்.  (சங்கீதம்  96:5)

sagala  janangga'ludaiya  theavarga'lum  vikkiragangga'lthaanea;  karththaroa  vaanangga'lai  u'ndaakkinavar.  (sanggeetham  96:5)

மகிமையும்  கனமும்  அவர்  சமுகத்தில்  இருக்கிறது,  வல்லமையும்  மகத்துவமும்  அவர்  பரிசுத்த  ஸ்தலத்திலுள்ளது.  (சங்கீதம்  96:6)

magimaiyum  kanamum  avar  samugaththil  irukki’rathu,  vallamaiyum  magaththuvamum  avar  parisuththa  sthalaththilu'l'lathu.  (sanggeetham  96:6)

ஜனங்களின்  வம்சங்களே,  கர்த்தருக்கு  மகிமையையும்  வல்லமையையும்  செலுத்துங்கள்,  கர்த்தருக்கே  அதைச்  செலுத்துங்கள்.  (சங்கீதம்  96:7)

janangga'lin  vamsangga'lea,  karththarukku  magimaiyaiyum  vallamaiyaiyum  seluththungga'l,  karththarukkea  athaich  seluththungga'l.  (sanggeetham  96:7)

கர்த்தருக்கு  அவருடைய  நாமத்திற்குரிய  மகிமையைச்  செலுத்தி,  காணிக்கைகளைக்  கொண்டுவந்து,  அவருடைய  பிராகாரங்களில்  பிரவேசியுங்கள்.  (சங்கீதம்  96:8)

karththarukku  avarudaiya  naamaththi’rkuriya  magimaiyaich  seluththi,  kaa'nikkaiga'laik  ko'nduvanthu,  avarudaiya  piraagaarangga'lil  piraveasiyungga'l.  (sanggeetham  96:8)

பரிசுத்த  அலங்காரத்துடனே  கர்த்தரைத்  தொழுதுகொள்ளுங்கள்;  பூலோகத்தாரே,  நீங்கள்  யாவரும்  அவருக்கு  முன்பாக  நடுங்குங்கள்.  (சங்கீதம்  96:9)

parisuththa  alanggaaraththudanea  karththaraith  thozhuthuko'l'lungga'l;  booloagaththaarea,  neengga'l  yaavarum  avarukku  munbaaga  nadunggungga'l.  (sanggeetham  96:9)

கர்த்தர்  ராஜரிகம்பண்ணுகிறார்,  ஆகையால்  பூச்சக்கரம்  அசையாதபடி  உறுதிப்பட்டிருக்கும்;  அவர்  ஜனங்களை  நிதானமாய்  நியாயந்தீர்ப்பார்  என்று  ஜாதிகளுக்குள்ளே  சொல்லுங்கள்.  (சங்கீதம்  96:10)

karththar  raajarigampa'n'nugi’raar,  aagaiyaal  poochchakkaram  asaiyaathapadi  u’ruthippattirukkum;  avar  janangga'lai  nithaanamaay  niyaayantheerppaar  en’ru  jaathiga'lukku'l'lea  sollungga'l.  (sanggeetham  96:10)

வானங்கள்  மகிழ்ந்து,  பூமி  பூரிப்பாகி,  சமுத்திரமும்  அதின்  நிறைவும்  முழங்குவதாக.  (சங்கீதம்  96:11)

vaanangga'l  magizhnthu,  boomi  poorippaagi,  samuththiramum  athin  ni’raivum  muzhangguvathaaga.  (sanggeetham  96:11)

நாடும்  அதிலுள்ள  யாவும்  களிகூருவதாக;  அப்பொழுது  கர்த்தருக்கு  முன்பாக  காட்டுவிருட்சங்களெல்லாம்  கெம்பீரிக்கும்.  (சங்கீதம்  96:12)

naadum  athilu'l'la  yaavum  ka'likooruvathaaga;  appozhuthu  karththarukku  munbaaga  kaattuvirudchangga'lellaam  kembeerikkum.  (sanggeetham  96:12)

அவர்  வருகிறார்,  அவர்  பூமியை  நியாயந்தீர்க்க  வருகிறார்;  அவர்  பூலோகத்தை  நீதியோடும்,  ஜனங்களைச்  சத்தியத்தோடும்  நியாயந்தீர்ப்பார்.  (சங்கீதம்  96:13)

avar  varugi’raar,  avar  boomiyai  niyaayantheerkka  varugi’raar;  avar  booloagaththai  neethiyoadum,  janangga'laich  saththiyaththoadum  niyaayantheerppaar.  (sanggeetham  96:13)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!