Thursday, June 30, 2016

Sanggeetham 92 | சங்கீதம் 92 | Psalms 92

கர்த்தரைத்  துதிப்பதும்,  உன்னதமானவரே,  உமது  நாமத்தைக்  கீர்த்தனம்பண்ணுவதும்,  (சங்கீதம்  92:1)

karththaraith  thuthippathum,  unnathamaanavarea,  umathu  naamaththaik  keerththanampa'n'nuvathum,  (sanggeetham  92:1)

பத்துநரம்பு  வீணையினாலும்,  தம்புருவினாலும்,  தியானத்தோடு  வாசிக்கும்  சுரமண்டலத்தினாலும்,  (சங்கீதம்  92:2)

paththunarambu  vee'naiyinaalum,  thamburuvinaalum,  thiyaanaththoadu  vaasikkum  surama'ndalaththinaalum,  (sanggeetham  92:2)

காலையிலே  உமது  கிருபையையும்,  இரவிலே  உமது  சத்தியத்தையும்  அறிவிப்பதும்  நலமாயிருக்கும்.  (சங்கீதம்  92:3)

kaalaiyilea  umathu  kirubaiyaiyum,  iravilea  umathu  saththiyaththaiyum  a’rivippathum  nalamaayirukkum.  (sanggeetham  92:3)

கர்த்தாவே,  உமது  செய்கைகளால்  என்னை  மகிழ்ச்சியாக்கினீர்,  உமது  கரத்தின்  கிரியைகளினிமித்தம்  ஆனந்தசத்தமிடுவேன்.  (சங்கீதம்  92:4)

karththaavea,  umathu  seygaiga'laal  ennai  magizhchchiyaakkineer,  umathu  karaththin  kiriyaiga'linimiththam  aananthasaththamiduvean.  (sanggeetham  92:4)

கர்த்தாவே,  உமது  கிரியைகள்  எவ்வளவு  மகத்துவமானவைகள்!  உமது  யோசனைகள்  மகா  ஆழமானவைகள்.  (சங்கீதம்  92:5)

karththaavea,  umathu  kiriyaiga'l  evva'lavu  magaththuvamaanavaiga'l!  umathu  yoasanaiga'l  mahaa  aazhamaanavaiga'l.  (sanggeetham  92:5)

மிருககுணமுள்ள  மனுஷன்  அதை  அறியான்;  மூடன்  அதை  உணரான்.  (சங்கீதம்  92:6)

mirugaku'namu'l'la  manushan  athai  a’riyaan;  moodan  athai  u'naraan.  (sanggeetham  92:6)

துன்மார்க்கர்  புல்லைப்போலே  தழைத்து,  அக்கிரமக்காரர்  யாவரும்  செழிக்கும்போது,  அது  அவர்கள்  என்றென்றைக்கும்  அழிந்துபோவதற்கே  ஏதுவாகும்.  (சங்கீதம்  92:7)

thunmaarkkar  pullaippoalea  thazhaiththu,  akkiramakkaarar  yaavarum  sezhikkumpoathu,  athu  avarga'l  en’ren’raikkum  azhinthupoavatha’rkea  eathuvaagum.  (sanggeetham  92:7)

கர்த்தாவே,  நீர்  என்றென்றைக்கும்  உன்னதமானவராயிருக்கிறீர்.  (சங்கீதம்  92:8)

karththaavea,  neer  en’ren’raikkum  unnathamaanavaraayirukki’reer.  (sanggeetham  92:8)

கர்த்தாவே,  உமது  சத்துருக்கள்  அழிவார்கள்;  உமது  சத்துருக்கள்  அழிந்தேபோவார்கள்;  சகல  அக்கிரமக்காரரும்  சிதறுண்டுபோவார்கள்.  (சங்கீதம்  92:9)

karththaavea,  umathu  saththurukka'l  azhivaarga'l;  umathu  saththurukka'l  azhintheapoavaarga'l;  sagala  akkiramakkaararum  sitha’ru'ndupoavaarga'l.  (sanggeetham  92:9)

என்  கொம்பைக்  காண்டாமிருகத்தின்  கொம்பைப்போல  உயர்த்துவீர்;  புது  எண்ணெயால்  அபிஷேகம்பண்ணப்படுகிறேன்.  (சங்கீதம்  92:10)

en  kombaik  kaa'ndaamirugaththin  kombaippoala  uyarththuveer;  puthu  e'n'neyaal  abisheagampa'n'nappadugi’rean.  (sanggeetham  92:10)

என்  சத்துருக்களுக்கு  நேரிடுவதை  என்  கண்  காணும்;  எனக்கு  விரோதமாய்  எழும்புகிற  துன்மார்க்கருக்கு  நேரிடுவதை  என்  காது  கேட்கும்.  (சங்கீதம்  92:11)

en  saththurukka'lukku  neariduvathai  en  ka'n  kaa'num;  enakku  viroathamaay  ezhumbugi’ra  thunmaarkkarukku  neariduvathai  en  kaathu  keadkum.  (sanggeetham  92:11)

நீதிமான்  பனையைப்போல்  செழித்து,  லீபனோனிலுள்ள  கேதுருவைப்போல்  வளருவான்.  (சங்கீதம்  92:12)

neethimaan  panaiyaippoal  sezhiththu,  leebanoanilu'l'la  keathuruvaippoal  va'laruvaan.  (sanggeetham  92:12)

கர்த்தருடைய  ஆலயத்திலே  நாட்டப்பட்டவர்கள்  எங்கள்  தேவனுடைய  பிராகாரங்களில்  செழித்திருப்பார்கள்.  (சங்கீதம்  92:13)

karththarudaiya  aalayaththilea  naattappattavarga'l  engga'l  theavanudaiya  piraagaarangga'lil  sezhiththiruppaarga'l.  (sanggeetham  92:13)

கர்த்தர்  உத்தமரென்றும்,  என்  கன்மலையாகிய  அவரிடத்தில்  அநீதியில்லையென்றும்,  விளங்கப்பண்ணும்படி,  (சங்கீதம்  92:14)

karththar  uththamaren’rum,  en  kanmalaiyaagiya  avaridaththil  aneethiyillaiyen’rum,  vi'langgappa'n'numpadi,  (sanggeetham  92:14)

அவர்கள்  முதிர்வயதிலும்  கனி  தந்து,  புஷ்டியும்  பசுமையுமாயிருப்பார்கள்.  (சங்கீதம்  92:15)

avarga'l  muthirvayathilum  kani  thanthu,  pushdiyum  pasumaiyumaayiruppaarga'l.  (sanggeetham  92:15)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!