Saturday, June 11, 2016

Sanggeetham 9 | சங்கீதம் 9 | Psalms 9

கர்த்தாவே,  என்  முழு  இருதயத்தோடும்  உம்மைத்  துதிப்பேன்;  உம்முடைய  அதிசயங்களையெல்லாம்  விவரிப்பேன்.  (சங்கீதம்  9:1)

karththaavea,  en  muzhu  iruthayaththoadum  ummaith  thuthippean;  ummudaiya  athisayangga'laiyellaam  vivarippean.  (sanggeetham  9:1)

உம்மில்  மகிழ்ந்து  களிகூருவேன்;  உன்னதமானவரே,  உமது  நாமத்தைக்  கீர்த்தனம்பண்ணுவேன்.  (சங்கீதம்  9:2)

ummil  magizhnthu  ka'likooruvean;  unnathamaanavarea,  umathu  naamaththaik  keerththanampa'n'nuvean.  (sanggeetham  9:2)

என்  சத்துருக்கள்  பின்னாகத்  திரும்பும்போது,  உமது  சமுகத்தில்  அவர்கள்  இடறுண்டு  அழிந்துபோவார்கள்.  (சங்கீதம்  9:3)

en  saththurukka'l  pinnaagath  thirumbumpoathu,  umathu  samugaththil  avarga'l  ida’ru'ndu  azhinthupoavaarga'l.  (sanggeetham  9:3)

நீர்  என்  நியாயத்தையும்  என்  வழக்கையும்  தீர்த்து,  நீதியுள்ள  நியாயாதிபதியாய்  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கிறீர்.  (சங்கீதம்  9:4)

neer  en  niyaayaththaiyum  en  vazhakkaiyum  theerththu,  neethiyu'l'la  niyaayaathibathiyaay  singgaasanaththinmeal  veet’rirukki’reer.  (sanggeetham  9:4)

ஜாதிகளைக்  கடிந்துகொண்டு,  துன்மார்க்கரை  அழித்து,  அவர்கள்  நாமத்தை  என்றென்றைக்கும்  இல்லாதபடி  குலைத்துப்போட்டீர்.  (சங்கீதம்  9:5)

jaathiga'laik  kadinthuko'ndu,  thunmaarkkarai  azhiththu,  avarga'l  naamaththai  en’ren’raikkum  illaathapadi  kulaiththuppoatteer.  (sanggeetham  9:5)

சத்துருக்கள்  என்றென்றைக்கும்  பாழாக்கப்பட்டார்கள்;  அவர்கள்  பட்டணங்களை  நிர்மூலமாக்கினீர்;  அவர்கள்  பேரும்  அவர்களோடேகூட  ஒழிந்துபோயிற்று.  (சங்கீதம்  9:6)

saththurukka'l  en’ren’raikkum  paazhaakkappattaarga'l;  avarga'l  patta'nangga'lai  nirmoolamaakkineer;  avarga'l  pearum  avarga'loadeakooda  ozhinthupoayit’ru.  (sanggeetham  9:6)

கர்த்தரோ  என்றென்றைக்கும்  இருப்பார்;  தம்முடைய  சிங்காசனத்தை  நியாயத்தீர்ப்புக்கு  ஆயத்தம்பண்ணினார்.  (சங்கீதம்  9:7)

karththaroa  en’ren’raikkum  iruppaar;  thammudaiya  singgaasanaththai  niyaayaththeerppukku  aayaththampa'n'ninaar.  (sanggeetham  9:7)

அவர்  பூச்சக்கரத்தை  நீதியாய்  நியாயந்தீர்த்து,  சகல  ஜனங்களுக்கும்  செம்மையாய்  நீதிசெய்வார்.  (சங்கீதம்  9:8)

avar  poochchakkaraththai  neethiyaay  niyaayantheerththu,  sagala  janangga'lukkum  semmaiyaay  neethiseyvaar.  (sanggeetham  9:8)

சிறுமைப்பட்டவனுக்குக்  கர்த்தர்  அடைக்கலமானவர்;  நெருக்கப்படுகிற  காலங்களில்  அவரே  தஞ்சமானவர்.  (சங்கீதம்  9:9)

si’rumaippattavanukkuk  karththar  adaikkalamaanavar;  nerukkappadugi’ra  kaalangga'lil  avarea  thagnchamaanavar.  (sanggeetham  9:9)

கர்த்தாவே,  உம்மைத்  தேடுகிறவர்களை  நீர்  கைவிடுகிறதில்லை;  ஆதலால்,  உமது  நாமத்தை  அறிந்தவர்கள்  உம்மை  நம்பியிருப்பார்கள்.  (சங்கீதம்  9:10)

karththaavea,  ummaith  theadugi’ravarga'lai  neer  kaividugi’rathillai;  aathalaal,  umathu  naamaththai  a’rinthavarga'l  ummai  nambiyiruppaarga'l.  (sanggeetham  9:10)

சீயோனில்  வாசமாயிருக்கிற  கர்த்தரைக்  கீர்த்தனம்பண்ணி,  அவர்  செய்கைகளை  ஜனங்களுக்குள்ளே  அறிவியுங்கள்.  (சங்கீதம்  9:11)

seeyoanil  vaasamaayirukki’ra  karththaraik  keerththanampa'n'ni,  avar  seygaiga'lai  janangga'lukku'l'lea  a’riviyungga'l.  (sanggeetham  9:11)

இரத்தப்பழிகளைக்குறித்து  அவர்  விசாரணை  செய்யும்போது,  அவைகளை  நினைக்கிறார்;  சிறுமைப்பட்டவர்களுடைய  கூப்பிடுதலை  மறவார்.  (சங்கீதம்  9:12)

iraththappazhiga'laikku’riththu  avar  visaara'nai  seyyumpoathu,  avaiga'lai  ninaikki’raar;  si’rumaippattavarga'ludaiya  kooppiduthalai  ma’ravaar.  (sanggeetham  9:12)

மரணவாசல்களிலிருந்து  என்னைத்  தூக்கிவிடுகிற  கர்த்தாவே,  நான்  உம்முடைய  துதிகளையெல்லாம்  சீயோன்  குமாரத்தியின்  வாசல்களில்  விவரித்து,  உம்முடைய  இரட்சிப்பினால்  களிகூரும்படிக்கு,  (சங்கீதம்  9:13)

mara'navaasalga'lilirunthu  ennaith  thookkividugi’ra  karththaavea,  naan  ummudaiya  thuthiga'laiyellaam  seeyoan  kumaaraththiyin  vaasalga'lil  vivariththu,  ummudaiya  iradchippinaal  ka'likoorumpadikku,  (sanggeetham  9:13)

தேவரீர்  எனக்கு  இரங்கி,  என்னைப்  பகைக்கிறவர்களால்  எனக்கு  வரும்  துன்பத்தை  நோக்கிப்பாரும்.  (சங்கீதம்  9:14)

theavareer  enakku  iranggi,  ennaip  pagaikki’ravarga'laal  enakku  varum  thunbaththai  noakkippaarum.  (sanggeetham  9:14)

ஜாதிகள்  தாங்கள்  வெட்டின  குழியில்  தாங்களே  விழுந்தார்கள்;  அவர்கள்  மறைவாய்  வைத்த  வலையில்  அவர்களுடைய  காலே  அகப்பட்டுக்கொண்டது.  (சங்கீதம்  9:15)

jaathiga'l  thaangga'l  vettina  kuzhiyil  thaangga'lea  vizhunthaarga'l;  avarga'l  ma’raivaay  vaiththa  valaiyil  avarga'ludaiya  kaalea  agappattukko'ndathu.  (sanggeetham  9:15)

கர்த்தர்  தாம்  செய்த  நியாயத்தினால்  அறியப்படுகிறார்;  துன்மார்க்கன்  தன்  கைகளின்  செய்கையிலே  சிக்கிக்கொண்டான்.  (இகாயோன்,  சேலா.)  (சங்கீதம்  9:16)

karththar  thaam  seytha  niyaayaththinaal  a’riyappadugi’raar;  thunmaarkkan  than  kaiga'lin  seygaiyilea  sikkikko'ndaan.  (ikaayoan,  sealaa.)  (sanggeetham  9:16)

துன்மார்க்கரும்,  தேவனை  மறக்கிற  எல்லா  ஜாதிகளும்,  நரகத்திலே  தள்ளப்படுவார்கள்.  (சங்கீதம்  9:17)

thunmaarkkarum,  theavanai  ma’rakki’ra  ellaa  jaathiga'lum,  naragaththilea  tha'l'lappaduvaarga'l.  (sanggeetham  9:17)

எளியவன்  என்றைக்கும்  மறக்கப்படுவதில்லை;  சிறுமைப்பட்டவர்களுடைய  நம்பிக்கை  ஒருபோதும்  கெட்டுப்போவதில்லை.  (சங்கீதம்  9:18)

e'liyavan  en’raikkum  ma’rakkappaduvathillai;  si’rumaippattavarga'ludaiya  nambikkai  orupoathum  kettuppoavathillai.  (sanggeetham  9:18)

எழுந்தருளும்  கர்த்தாவே,  மனுஷன்  பெலன்கொள்ளாதபடி  செய்யும்;  ஜாதிகள்  உம்முடைய  சமுகத்தில்  நியாயந்தீர்க்கப்படக்கடவர்கள்.  (சங்கீதம்  9:19)

ezhuntharu'lum  karththaavea,  manushan  belanko'l'laathapadi  seyyum;  jaathiga'l  ummudaiya  samugaththil  niyaayantheerkkappadakkadavarga'l.  (sanggeetham  9:19)

ஜாதிகள்  தங்களை  மனுஷரென்று  அறியும்படிக்கு,  அவர்களுக்குப்  பயமுண்டாக்கும்,  கர்த்தாவே.  (சேலா.)  (சங்கீதம்  9:20)

jaathiga'l  thangga'lai  manusharen’ru  a’riyumpadikku,  avarga'lukkup  bayamu'ndaakkum,  karththaavea.  (sealaa.)  (sanggeetham  9:20)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!