Wednesday, June 29, 2016

Sanggeetham 88 | சங்கீதம் 88 | Psalms 88

என்  இரட்சிப்பின்  தேவனாகிய  கர்த்தாவே,  இரவும்  பகலும்  உம்மை  நோக்கிக்  கூப்பிடுகிறேன்.  (சங்கீதம்  88:1)

en  iradchippin  theavanaagiya  karththaavea,  iravum  pagalum  ummai  noakkik  kooppidugi’rean.  (sanggeetham  88:1)

என்  விண்ணப்பம்  உமது  சமுகத்தில்  வருவதாக;  என்  கூப்பிடுதலுக்கு  உமது  செவியைச்  சாய்த்தருளும்.  (சங்கீதம்  88:2)

en  vi'n'nappam  umathu  samugaththil  varuvathaaga;  en  kooppiduthalukku  umathu  seviyaich  saayththaru'lum.  (sanggeetham  88:2)

என்  ஆத்துமா  துக்கத்தால்  நிறைந்திருக்கிறது;  என்  ஜீவன்  பாதாளத்திற்குச்  சமீபமாய்  வந்திருக்கிறது.  (சங்கீதம்  88:3)

en  aaththumaa  thukkaththaal  ni’rainthirukki’rathu;  en  jeevan  paathaa'laththi’rkuch  sameebamaay  vanthirukki’rathu.  (sanggeetham  88:3)

நான்  குழியில்  இறங்குகிறவர்களோடு  எண்ணப்பட்டு,  பெலனற்ற  மனுஷனைப்போலானேன்.  (சங்கீதம்  88:4)

naan  kuzhiyil  i’ranggugi’ravarga'loadu  e'n'nappattu,  belanat’ra  manushanaippoalaanean.  (sanggeetham  88:4)

மரித்தவர்களில்  ஒருவனைப்போல்  நெகிழப்பட்டிருக்கிறேன்;  நீர்  இனி  ஒருபோதும்  நினையாதபடி,  உமது  கையால்  அறுப்புண்டுபோய்ப்  பிரேதக்குழிகளிலே  கிடக்கிறவர்களைப்போலானேன்.  (சங்கீதம்  88:5)

mariththavarga'lil  oruvanaippoal  negizhappattirukki’rean;  neer  ini  orupoathum  ninaiyaathapadi,  umathu  kaiyaal  a’ruppu'ndupoayp  pireathakkuzhiga'lilea  kidakki’ravarga'laippoalaanean.  (sanggeetham  88:5)

என்னைப்  பாதாளக்குழியிலும்  இருளிலும்  ஆழங்களிலும்  வைத்தீர்.  (சங்கீதம்  88:6)

ennaip  paathaa'lakkuzhiyilum  iru'lilum  aazhangga'lilum  vaiththeer.  (sanggeetham  88:6)

உம்முடைய  கோபம்  என்னை  இருத்துகிறது;  உம்முடைய  அலைகள்  எல்லாவற்றினாலும்  என்னை  வருத்தப்படுத்துகிறீர்.  (சேலா.)  (சங்கீதம்  88:7)

ummudaiya  koabam  ennai  iruththugi’rathu;  ummudaiya  alaiga'l  ellaavat’rinaalum  ennai  varuththappaduththugi’reer.  (sealaa.)  (sanggeetham  88:7)

எனக்கு  அறிமுகமானவர்களை  எனக்குத்  தூரமாக  விலக்கி,  அவர்களுக்கு  என்னை  அருவருப்பாக்கினீர்;  நான்  வெளியே  புறப்படக்கூடாதபடி  அடைபட்டிருக்கிறேன்.  (சங்கீதம்  88:8)

enakku  a’rimugamaanavarga'lai  enakkuth  thooramaaga  vilakki,  avarga'lukku  ennai  aruvaruppaakkineer;  naan  ve'liyea  pu’rappadakkoodaathapadi  adaipattirukki’rean.  (sanggeetham  88:8)

துக்கத்தினால்  என்  கண்  தொய்ந்துபோயிற்று;  கர்த்தாவே,  அநுதினமும்  நான்  உம்மை  நோக்கிக்  கூப்பிட்டு,  உமக்கு  நேராக  என்  கைகளை  விரிக்கிறேன்.  (சங்கீதம்  88:9)

thukkaththinaal  en  ka'n  thoynthupoayit’ru;  karththaavea,  anuthinamum  naan  ummai  noakkik  kooppittu,  umakku  nearaaga  en  kaiga'lai  virikki’rean.  (sanggeetham  88:9)

மரித்தவர்களுக்கு  அதிசயங்களைச்  செய்வீரோ?  செத்துப்போன  வீரர்  எழுந்து  உம்மைத்  துதிப்பார்களோ?  (சேலா.)  (சங்கீதம்  88:10)

mariththavarga'lukku  athisayangga'laich  seyveeroa?  seththuppoana  veerar  ezhunthu  ummaith  thuthippaarga'loa?  (sealaa.)  (sanggeetham  88:10)

பிரேதக்குழியில்  உமது  கிருபையும்,  அழிவில்  உமது  உண்மையும்  விவரிக்கப்படுமோ?  (சங்கீதம்  88:11)

pireathakkuzhiyil  umathu  kirubaiyum,  azhivil  umathu  u'nmaiyum  vivarikkappadumoa?  (sanggeetham  88:11)

இருளில்  உமது  அதிசயங்களும்,  மறதியின்  பூமியில்  உமது  நீதியும்  அறியப்படுமோ?  (சங்கீதம்  88:12)

iru'lil  umathu  athisayangga'lum,  ma’rathiyin  boomiyil  umathu  neethiyum  a’riyappadumoa?  (sanggeetham  88:12)

நானோ  கர்த்தாவே,  உம்மை  நோக்கிக்  கூப்பிடுகிறேன்;  காலையிலே  என்  விண்ணப்பம்  உமக்கு  முன்பாக  வரும்.  (சங்கீதம்  88:13)

naanoa  karththaavea,  ummai  noakkik  kooppidugi’rean;  kaalaiyilea  en  vi'n'nappam  umakku  munbaaga  varum.  (sanggeetham  88:13)

கர்த்தாவே,  ஏன்  என்  ஆத்துமாவைத்  தள்ளிவிடுகிறீர்?  ஏன்  உமது  முகத்தை  எனக்கு  மறைக்கிறீர்?  (சங்கீதம்  88:14)

karththaavea,  ean  en  aaththumaavaith  tha'l'lividugi’reer?  ean  umathu  mugaththai  enakku  ma’raikki’reer?  (sanggeetham  88:14)

சிறுவயதுமுதல்  நான்  சிறுமைப்பட்டவனும்  மாண்டுபோகிறவனுமாயிருக்கிறேன்;  உம்மால்  வரும்  திகில்கள்  என்மேல்  சுமந்திருக்கிறது,  நான்  மனங்கலங்குகிறேன்.  (சங்கீதம்  88:15)

si’ruvayathumuthal  naan  si’rumaippattavanum  maa'ndupoagi’ravanumaayirukki’rean;  ummaal  varum  thigilga'l  enmeal  sumanthirukki’rathu,  naan  manangkalanggugi’rean.  (sanggeetham  88:15)

உம்முடைய  எரிச்சல்கள்  என்மேல்  புரண்டுபோகிறது;  உம்முடைய  பயங்கரங்கள்  என்னை  அதம்பண்ணுகிறது.  (சங்கீதம்  88:16)

ummudaiya  erichchalga'l  enmeal  pura'ndupoagi’rathu;  ummudaiya  bayanggarangga'l  ennai  athampa'n'nugi’rathu.  (sanggeetham  88:16)

அவைகள்  நாடோறும்  தண்ணீரைப்போல்  என்னைச்  சூழ்ந்து,  ஏகமாய்  என்னை  வளைந்துகொள்ளுகிறது.  (சங்கீதம்  88:17)

avaiga'l  naadoa’rum  tha'n'neeraippoal  ennaich  soozhnthu,  eagamaay  ennai  va'lainthuko'l'lugi’rathu.  (sanggeetham  88:17)

சிநேகிதனையும்  தோழனையும்  எனக்குத்  தூரமாக  விலக்கினீர்;  எனக்கு  அறிமுகமானவர்கள்  மறைந்துபோனார்கள்.  (சங்கீதம்  88:18)

sineagithanaiyum  thoazhanaiyum  enakkuth  thooramaaga  vilakkineer;  enakku  a’rimugamaanavarga'l  ma’rainthupoanaarga'l.  (sanggeetham  88:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!