Wednesday, June 29, 2016

Sanggeetham 87 | சங்கீதம் 87 | Psalms 87

அவர்  அஸ்திபாரம்  பரிசுத்த  பர்வதங்களில்  இருக்கிறது.  (சங்கீதம்  87:1)

avar  asthibaaram  parisuththa  parvathangga'lil  irukki’rathu.  (sanggeetham  87:1)

கர்த்தர்  யாக்கோபின்  வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும்  சீயோனின்  வாசல்களில்  பிரியமாயிருக்கிறார்.  (சங்கீதம்  87:2)

karththar  yaakkoabin  vaasasthalangga'lellaavat’raippaarkkilum  seeyoanin  vaasalga'lil  piriyamaayirukki’raar.  (sanggeetham  87:2)

தேவனுடைய  நகரமே!  உன்னைக்  குறித்து  மகிமையான  விசேஷங்கள்  வசனிக்கப்படும்.  (சேலா.)  (சங்கீதம்  87:3)

theavanudaiya  nagaramea!  unnaik  ku’riththu  magimaiyaana  viseashangga'l  vasanikkappadum.  (sealaa.)  (sanggeetham  87:3)

என்னை  அறிந்தவர்களுக்குள்ளே  ராகாபையும்  பாபிலோனையும்  குறித்துப்  பேசுவேன்;  இதோ,  பெலிஸ்தியரிலும்,  தீரியரிலும்,  எத்தியோப்பியரிலுங்கூட,  இன்னான்  அங்கே  பிறந்தான்  என்றும்;  (சங்கீதம்  87:4)

ennai  a’rinthavarga'lukku'l'lea  raahaabaiyum  baabiloanaiyum  ku’riththup  peasuvean;  ithoa,  pelisthiyarilum,  theeriyarilum,  eththiyoappiyarilungkooda,  innaan  anggea  pi’ranthaan  en’rum;  (sanggeetham  87:4)

சீயோனைக்குறித்து,  இன்னான்  இன்னான்  அதிலே  பிறந்தானென்றும்  சொல்லப்படும்;  உன்னதமானவர்தாமே  அதை  ஸ்திரப்படுத்துவார்.  (சங்கீதம்  87:5)

seeyoanaikku’riththu,  innaan  innaan  athilea  pi’ranthaanen’rum  sollappadum;  unnathamaanavarthaamea  athai  sthirappaduththuvaar.  (sanggeetham  87:5)

கர்த்தர்  ஜனங்களைப்  பேரெழுதும்போது,  இன்னான்  அதிலே  பிறந்தான்  என்று  அவர்களைத்  தொகையிடுவார்.  (சேலா.)  (சங்கீதம்  87:6)

karththar  janangga'laip  pearezhuthumpoathu,  innaan  athilea  pi’ranthaan  en’ru  avarga'laith  thogaiyiduvaar.  (sealaa.)  (sanggeetham  87:6)

எங்கள்  ஊற்றுகளெல்லாம்  உன்னில்  இருக்கிறது  என்று  பாடுவாரும்  ஆடுவாரும்  ஏகமாய்ச்  சொல்லுவார்கள்.  (சங்கீதம்  87:7)

engga'l  oot’ruga'lellaam  unnil  irukki’rathu  en’ru  paaduvaarum  aaduvaarum  eagamaaych  solluvaarga'l.  (sanggeetham  87:7)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!