Wednesday, June 29, 2016

Sanggeetham 82 | சங்கீதம் 82 | Psalms 82

தேவசபையிலே  தேவன்  எழுந்தருளியிருக்கிறார்;  தேவர்களின்  நடுவிலே  அவர்  நியாயம்  விசாரிக்கிறார்.  (சங்கீதம்  82:1)

theavasabaiyilea  theavan  ezhuntharu'liyirukki’raar;  theavarga'lin  naduvilea  avar  niyaayam  visaarikki’raar.  (sanggeetham  82:1)

எதுவரைக்கும்  நீங்கள்  அநியாயத்தீர்ப்புச்செய்து,  துன்மார்க்கருக்கு  முகதாட்சிணியம்  பண்ணுவீர்கள்.  (சேலா.)  (சங்கீதம்  82:2)

ethuvaraikkum  neengga'l  aniyaayaththeerppuchseythu,  thunmaarkkarukku  mugathaadchi'niyam  pa'n'nuveerga'l.  (sealaa.)  (sanggeetham  82:2)

ஏழைக்கும்  திக்கற்ற  பிள்ளைக்கும்  நியாயஞ்செய்து,  சிறுமைப்பட்டவனுக்கும்  திக்கற்றவனுக்கும்  நீதி  செய்யுங்கள்.  (சங்கீதம்  82:3)

eazhaikkum  thikkat’ra  pi'l'laikkum  niyaayagnseythu,  si’rumaippattavanukkum  thikkat’ravanukkum  neethi  seyyungga'l.  (sanggeetham  82:3)

பலவீனனையும்  எளியவனையும்  விடுவித்து,  துன்மார்க்கரின்  கைக்கு  அவர்களைத்  தப்புவியுங்கள்.  (சங்கீதம்  82:4)

balaveenanaiyum  e'liyavanaiyum  viduviththu,  thunmaarkkarin  kaikku  avarga'laith  thappuviyungga'l.  (sanggeetham  82:4)

அறியாமலும்  உணராமலும்  இருக்கிறார்கள்,  அந்தகாரத்திலே  நடக்கிறார்கள்;  தேசத்தின்  அஸ்திபாரங்களெல்லாம்  அசைகிறது.  (சங்கீதம்  82:5)

a’riyaamalum  u'naraamalum  irukki’raarga'l,  anthagaaraththilea  nadakki’raarga'l;  theasaththin  asthibaarangga'lellaam  asaigi’rathu.  (sanggeetham  82:5)

நீங்கள்  தேவர்கள்  என்றும்,  நீங்களெல்லாரும்  உன்னதமானவரின்  மக்கள்  என்றும்  நான்  சொல்லியிருந்தேன்.  (சங்கீதம்  82:6)

neengga'l  theavarga'l  en’rum,  neengga'lellaarum  unnathamaanavarin  makka'l  en’rum  naan  solliyirunthean.  (sanggeetham  82:6)

ஆனாலும்  நீங்கள்  மனுஷரைப்போலச்  செத்து,  லோகப்பிரபுக்களில்  ஒருவனைப்போல  விழுந்துபோவீர்கள்.  (சங்கீதம்  82:7)

aanaalum  neengga'l  manusharaippoalach  seththu,  loagappirabukka'lil  oruvanaippoala  vizhunthupoaveerga'l.  (sanggeetham  82:7)

தேவனே,  எழுந்தருளும்,  பூமிக்கு  நியாயத்தீர்ப்புச்  செய்யும்;  நீரே  சகல  ஜாதிகளையும்  சுதந்தரமாகக்  கொண்டிருப்பவர்.  (சங்கீதம்  82:8)

theavanea,  ezhuntharu'lum,  boomikku  niyaayaththeerppuch  seyyum;  neerea  sagala  jaathiga'laiyum  suthantharamaagak  ko'ndiruppavar.  (sanggeetham  82:8)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!