Wednesday, June 29, 2016

Sanggeetham 81 | சங்கீதம் 81 | Psalms 81

நம்முடைய  பெலனாகிய  தேவனைக்  கெம்பீரமாய்ப்  பாடி,  யாக்கோபின்  தேவனைக்குறித்து  ஆர்ப்பரியுங்கள்.  (சங்கீதம்  81:1)

nammudaiya  belanaagiya  theavanaik  kembeeramaayp  paadi,  yaakkoabin  theavanaikku’riththu  aarppariyungga'l.  (sanggeetham  81:1)

தம்புரு  வாசித்து,  வீணையையும்  இனிய  ஓசையான  சுரமண்டலத்தையும்  எடுத்து,  சங்கீதம்  பாடுங்கள்.  (சங்கீதம்  81:2)

thamburu  vaasiththu,  vee'naiyaiyum  iniya  oasaiyaana  surama'ndalaththaiyum  eduththu,  sanggeetham  paadungga'l.  (sanggeetham  81:2)

மாதப்பிறப்பிலும்,  நியமித்தகாலத்திலும்,  நம்முடைய  பண்டிகைநாட்களிலும்,  எக்காளம்  ஊதுங்கள்.  (சங்கீதம்  81:3)

maathappi’rappilum,  niyamiththakaalaththilum,  nammudaiya  pa'ndigainaadka'lilum,  ekkaa'lam  oothungga'l.  (sanggeetham  81:3)

இது  இஸ்ரவேலுக்குப்  பிரமாணமும்,  யாக்கோபின்  தேவன்  விதித்த  நியாயமுமாயிருக்கிறது.  (சங்கீதம்  81:4)

ithu  isravealukkup  piramaa'namum,  yaakkoabin  theavan  vithiththa  niyaayamumaayirukki’rathu.  (sanggeetham  81:4)

நாம்  அறியாத  பாஷையைக்  கேட்ட  எகிப்துதேசத்தைவிட்டுப்  புறப்படுகையில்,  இதை  யோசேப்பிலே  சாட்சியாக  ஏற்படுத்தினார்.  (சங்கீதம்  81:5)

naam  a’riyaatha  baashaiyaik  keatta  egipthutheasaththaivittup  pu’rappadugaiyil,  ithai  yoaseappilea  saadchiyaaga  ea’rpaduththinaar.  (sanggeetham  81:5)

அவன்  தோளைச்  சுமைக்கு  விலக்கினேன்;  அவன்  கைகள்  கூடைக்கு  நீங்கலாக்கப்பட்டது.  (சங்கீதம்  81:6)

avan  thoa'laich  sumaikku  vilakkinean;  avan  kaiga'l  koodaikku  neenggalaakkappattathu.  (sanggeetham  81:6)

நெருக்கத்திலே  நீ  கூப்பிட்டாய்,  நான்  உன்னைத்  தப்புவித்தேன்;  இடிமுழக்கம்  உண்டாகும்  மறைவிடத்திலிருந்து  உனக்கு  உத்தரவு  அருளினேன்;  மேரிபாவின்  தண்ணீர்களிடத்தில்  உன்னைச்  சோதித்து  அறிந்தேன்.  (சேலா.)  (சங்கீதம்  81:7)

nerukkaththilea  nee  kooppittaay,  naan  unnaith  thappuviththean;  idimuzhakkam  u'ndaagum  ma’raividaththilirunthu  unakku  uththaravu  aru'linean;  mearibaavin  tha'n'neerga'lidaththil  unnaich  soathiththu  a’rinthean.  (sealaa.)  (sanggeetham  81:7)

என்  ஜனமே  கேள்,  உனக்குச்  சாட்சியிட்டுச்  சொல்லுவேன்;  இஸ்ரவேலே,  நீ  எனக்குச்  செவிகொடுத்தால்  நலமாயிருக்கும்.  (சங்கீதம்  81:8)

en  janamea  kea'l,  unakkuch  saadchiyittuch  solluvean;  isravealea,  nee  enakkuch  sevikoduththaal  nalamaayirukkum.  (sanggeetham  81:8)

உனக்குள்  வேறு  தேவன்  உண்டாயிருக்கவேண்டாம்;  அந்நிய  தேவனை  நீ  நமஸ்கரிக்கவும்  வேண்டாம்.  (சங்கீதம்  81:9)

unakku'l  vea’ru  theavan  u'ndaayirukkavea'ndaam;  anniya  theavanai  nee  namaskarikkavum  vea'ndaam.  (sanggeetham  81:9)

உன்னை  எகிப்துதேசத்திலிருந்து  புறப்படப்பண்ணின  உன்  தேவனாகிய  கர்த்தர்  நானே;  உன்  வாயை  விரிவாய்த்  திற,  நான்  அதை  நிரப்புவேன்.  (சங்கீதம்  81:10)

unnai  egipthutheasaththilirunthu  pu’rappadappa'n'nina  un  theavanaagiya  karththar  naanea;  un  vaayai  virivaayth  thi’ra,  naan  athai  nirappuvean.  (sanggeetham  81:10)

என்  ஜனமோ  என்  சத்தத்துக்குச்  செவிகொடுக்கவில்லை;  இஸ்ரவேல்  என்னை  விரும்பவில்லை.  (சங்கீதம்  81:11)

en  janamoa  en  saththaththukkuch  sevikodukkavillai;  israveal  ennai  virumbavillai.  (sanggeetham  81:11)

ஆகையால்  அவர்களை  அவர்கள்  இருதயத்தின்  கடினத்திற்கு  விட்டுவிட்டேன்;  தங்கள்  யோசனைகளின்படியே  நடந்தார்கள்.  (சங்கீதம்  81:12)

aagaiyaal  avarga'lai  avarga'l  iruthayaththin  kadinaththi’rku  vittuvittean;  thangga'l  yoasanaiga'linpadiyea  nadanthaarga'l.  (sanggeetham  81:12)

ஆ,  என்  ஜனம்  எனக்குச்  செவிகொடுத்து,  இஸ்ரவேல்  என்  வழிகளில்  நடந்தால்  நலமாயிருக்கும்!  (சங்கீதம்  81:13)

aa,  en  janam  enakkuch  sevikoduththu,  israveal  en  vazhiga'lil  nadanthaal  nalamaayirukkum!  (sanggeetham  81:13)

நான்  சீக்கிரத்தில்  அவர்கள்  எதிராளிகளைத்  தாழ்த்தி,  என்  கையை  அவர்கள்  சத்துருக்களுக்கு  விரோதமாகத்  திருப்புவேன்.  (சங்கீதம்  81:14)

naan  seekkiraththil  avarga'l  ethiraa'liga'laith  thaazhththi,  en  kaiyai  avarga'l  saththurukka'lukku  viroathamaagath  thiruppuvean.  (sanggeetham  81:14)

அப்பொழுது  கர்த்தரைப்  பகைக்கிறவர்கள்  அவருக்கு  இச்சகம்  பேசி  அடங்குவார்கள்;  அவர்களுடைய  காலம்  என்றென்றைக்கும்  இருக்கும்.  (சங்கீதம்  81:15)

appozhuthu  karththaraip  pagaikki’ravarga'l  avarukku  ichchagam  peasi  adangguvaarga'l;  avarga'ludaiya  kaalam  en’ren’raikkum  irukkum.  (sanggeetham  81:15)

உச்சிதமான  கோதுமையினால்  அவர்களைப்  போஷிப்பார்;  கன்மலையின்  தேனினால்  உன்னைத்  திருப்தியாக்குவேன்.  (சங்கீதம்  81:16)

uchchithamaana  koathumaiyinaal  avarga'laip  poashippaar;  kanmalaiyin  theaninaal  unnaith  thirupthiyaakkuvean.  (sanggeetham  81:16)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!