Wednesday, June 29, 2016

Sanggeetham 80 | சங்கீதம் 80 | Psalms 80

இஸ்ரவேலின்  மேய்ப்பரே,  யோசேப்பை  ஆட்டுமந்தையைப்போல்  நடத்துகிறவரே,  செவிகொடும்;  கேருபீன்கள்  மத்தியில்  வாசம்பண்ணுகிறவரே,  பிரகாசியும்.  (சங்கீதம்  80:1)

isravealin  meaypparea,  yoaseappai  aattumanthaiyaippoal  nadaththugi’ravarea,  sevikodum;  kearubeenga'l  maththiyil  vaasampa'n'nugi’ravarea,  piragaasiyum.  (sanggeetham  80:1)

எப்பிராயீம்  பென்யமீன்  மனாசே  என்பவர்களுக்கு  முன்பாக,  நீர்  உமது  வல்லமையை  எழுப்பி,  எங்களை  இரட்சிக்க  வந்தருளும்.  (சங்கீதம்  80:2)

eppiraayeem  benyameen  manaasea  enbavarga'lukku  munbaaga,  neer  umathu  vallamaiyai  ezhuppi,  engga'lai  iradchikka  vantharu'lum.  (sanggeetham  80:2)

தேவனே,  எங்களைத்  திருப்பிக்கொண்டுவாரும்,  உமது  முகத்தைப்  பிரகாசிக்கப்பண்ணும்,  அப்பொழுது  இரட்சிக்கப்படுவோம்.  (சங்கீதம்  80:3)

theavanea,  engga'laith  thiruppikko'nduvaarum,  umathu  mugaththaip  piragaasikkappa'n'num,  appozhuthu  iradchikkappaduvoam.  (sanggeetham  80:3)

சேனைகளின்  தேவனாகிய  கர்த்தாவே,  உமது  ஜனத்தின்  விண்ணப்பத்துக்கு  விரோதமாய்  நீர்  எதுவரைக்கும்  கோபங்கொள்வீர்.  (சங்கீதம்  80:4)

seanaiga'lin  theavanaagiya  karththaavea,  umathu  janaththin  vi'n'nappaththukku  viroathamaay  neer  ethuvaraikkum  koabangko'lveer.  (sanggeetham  80:4)

கண்ணீராகிய  அப்பத்தை  அவர்களுக்கு  போஜனமாகவும்,  மிகுதியான  கண்ணீரையே  அவர்களுக்குப்  பானமாகவும்  கொடுத்தீர்.  (சங்கீதம்  80:5)

ka'n'neeraagiya  appaththai  avarga'lukku  poajanamaagavum,  miguthiyaana  ka'n'neeraiyea  avarga'lukkup  baanamaagavum  koduththeer.  (sanggeetham  80:5)

எங்கள்  அயலாருக்கு  எங்களை  வழக்காக  வைக்கிறீர்;  எங்கள்  சத்துருக்கள்  எங்களைப்  பரியாசம்பண்ணுகிறார்கள்.  (சங்கீதம்  80:6)

engga'l  ayalaarukku  engga'lai  vazhakkaaga  vaikki’reer;  engga'l  saththurukka'l  engga'laip  pariyaasampa'n'nugi’raarga'l.  (sanggeetham  80:6)

சேனைகளின்  தேவனே,  எங்களைத்  திருப்பிக்கொண்டுவாரும்,  உமது  முகத்தைப்  பிரகாசிக்கப்பண்ணும்,  அப்பொழுது  இரட்சிக்கப்படுவோம்.  (சங்கீதம்  80:7)

seanaiga'lin  theavanea,  engga'laith  thiruppikko'nduvaarum,  umathu  mugaththaip  piragaasikkappa'n'num,  appozhuthu  iradchikkappaduvoam.  (sanggeetham  80:7)

நீர்  எகிப்திலிருந்து  ஒரு  திராட்சக்கொடியைக்  கொண்டுவந்து,  ஜாதிகளைத்  துரத்திவிட்டு,  அதை  நாட்டினீர்.  (சங்கீதம்  80:8)

neer  egipthilirunthu  oru  thiraadchakkodiyaik  ko'nduvanthu,  jaathiga'laith  thuraththivittu,  athai  naattineer.  (sanggeetham  80:8)

அதற்கு  இடத்தை  ஆயத்தப்படுத்தினீர்;  அது  வேரூன்றி,  தேசமெங்கும்  படர்ந்தது.  (சங்கீதம்  80:9)

atha’rku  idaththai  aayaththappaduththineer;  athu  vearoon’ri,  theasamenggum  padarnthathu.  (sanggeetham  80:9)

அதின்  நிழலால்  மலைகளும்  அதின்  கிளைகளால்  திவ்வியமான  கேதுருக்களும்  மூடப்பட்டது.  (சங்கீதம்  80:10)

athin  nizhalaal  malaiga'lum  athin  ki'laiga'laal  thivviyamaana  keathurukka'lum  moodappattathu.  (sanggeetham  80:10)

அது  தன்  கொடிகளைச்  சமுத்திரமட்டாகவும்,  தன்  கிளைகளை  நதிமட்டாகவும்  படரவிட்டது.  (சங்கீதம்  80:11)

athu  than  kodiga'laich  samuththiramattaagavum,  than  ki'laiga'lai  nathimattaagavum  padaravittathu.  (sanggeetham  80:11)

இப்பொழுதோ  வழிநடக்கிற  யாவரும்  அதைப்  பறிக்கும்படியாக,  அதின்  அடைப்புகளை  ஏன்  தகர்த்துப்போட்டீர்?  (சங்கீதம்  80:12)

ippozhuthoa  vazhinadakki’ra  yaavarum  athaip  pa’rikkumpadiyaaga,  athin  adaippuga'lai  ean  thagarththuppoatteer?  (sanggeetham  80:12)

காட்டுப்பன்றி  அதை  உழுதுபோடுகிறது,  வெளியின்  மிருகங்கள்  அதை  மேய்ந்துபோடுகிறது.  (சங்கீதம்  80:13)

kaattuppan’ri  athai  uzhuthupoadugi’rathu,  ve'liyin  mirugangga'l  athai  meaynthupoadugi’rathu.  (sanggeetham  80:13)

சேனைகளின்  தேவனே,  திரும்பிவாரும்,  வானத்திலிருந்து  கண்ணோக்கிப்பார்த்து,  இந்தத்  திராட்சச்செடியை  விசாரித்தருளும்;  (சங்கீதம்  80:14)

seanaiga'lin  theavanea,  thirumbivaarum,  vaanaththilirunthu  ka'n'noakkippaarththu,  inthath  thiraadchachsediyai  visaariththaru'lum;  (sanggeetham  80:14)

உம்முடைய  வலதுகரம்  நாட்டின  கொடியையும்,  உமக்கு  நீர்  திடப்படுத்தின  கிளையையும்  கடாட்சித்தருளும்.  (சங்கீதம்  80:15)

ummudaiya  valathukaram  naattina  kodiyaiyum,  umakku  neer  thidappaduththina  ki'laiyaiyum  kadaadchiththaru'lum.  (sanggeetham  80:15)

அது  அக்கினியால்  சுடப்பட்டும்  வெட்டுண்டும்  போயிற்று;  உம்முடைய  முகத்தின்  பயமுறுத்தலால்  அழிந்துபோகிறார்கள்.  (சங்கீதம்  80:16)

athu  akkiniyaal  sudappattum  vettu'ndum  poayit’ru;  ummudaiya  mugaththin  bayamu’ruththalaal  azhinthupoagi’raarga'l.  (sanggeetham  80:16)

உமது  கரம்  உமது  வலதுபாரிசத்துப்  புருஷன்மீதிலும்,  உமக்கு  நீர்  திடப்படுத்தின  மனுஷகுமாரன்மீதிலும்  இருப்பதாக.  (சங்கீதம்  80:17)

umathu  karam  umathu  valathupaarisaththup  purushanmeethilum,  umakku  neer  thidappaduththina  manushakumaaranmeethilum  iruppathaaga.  (sanggeetham  80:17)

அப்பொழுது  உம்மைவிட்டுப்  பின்வாங்கமாட்டோம்;  எங்களை  உயிர்ப்பியும்,  அப்பொழுது  உமது  நாமத்தைத்  தொழுதுகொள்ளுவோம்.  (சங்கீதம்  80:18)

appozhuthu  ummaivittup  pinvaanggamaattoam;  engga'lai  uyirppiyum,  appozhuthu  umathu  naamaththaith  thozhuthuko'l'luvoam.  (sanggeetham  80:18)

சேனைகளின்  தேவனாகிய  கர்த்தாவே,  எங்களைத்  திருப்பிக்கொண்டு  வாரும்;  உமது  முகத்தைப்  பிரகாசிக்கப்பண்ணும்,  அப்பொழுது  இரட்சிக்கப்படுவோம்.  (சங்கீதம்  80:19)

seanaiga'lin  theavanaagiya  karththaavea,  engga'laith  thiruppikko'ndu  vaarum;  umathu  mugaththaip  piragaasikkappa'n'num,  appozhuthu  iradchikkappaduvoam.  (sanggeetham  80:19)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!