எங்கள்
ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய
நாமம் பூமியெங்கும் எவ்வளவு
மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை
வானங்களுக்கு மேலாக வைத்தீர்.
(சங்கீதம் 8:1)
engga'l aa'ndavaraagiya karththaavea,
ummudaiya naamam boomiyenggum evva'lavu meanmaiyu'l'lathaayirukki’rathu! ummudaiya magaththuvaththai vaanangga'lukku mealaaga vaiththeer.
(sanggeetham 8:1)
பகைஞனையும் பழிகாரனையும்
அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய
சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர்
வாயினால் பெலன் உண்டுபண்ணினீர். (சங்கீதம்
8:2)
pagaignanaiyum pazhikaaranaiyum adakkippoada,
theavareer ummudaiya saththurukka'linimiththam kuzhanthaiga'l paalagar vaayinaal
belan
u'ndupa'n'nineer. (sanggeetham 8:2)
உமது
விரல்களின் கிரியையாகிய உம்முடைய
வானங்களையும், நீர் ஸ்தாபித்த
சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, (சங்கீதம்
8:3)
umathu viralga'lin kiriyaiyaagiya ummudaiya vaanangga'laiyum, neer sthaabiththa santhiranaiyum nadchaththirangga'laiyum naan paarkkumpoathu, (sanggeetham 8:3)
மனுஷனை
நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை
நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.
(சங்கீதம் 8:4)
manushanai neer ninaikki’ratha’rkum, manushakumaaranai neer visaarikki’ratha’rkum avan emmaaththiram
engi’rean. (sanggeetham 8:4)
நீர்
அவனைத் தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும்
கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர். (சங்கீதம்
8:5)
neer avanaith theavathootharilum sat’ru si’riyavanaakkineer; magimaiyinaalum kanaththinaalum avanai
mudisoottineer. (sanggeetham 8:5)
உம்முடைய கரத்தின்
கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு
ஆளுகை தந்து, சகலத்தையும்
அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். (சங்கீதம்
8:6)
ummudaiya karaththin kiriyaiga'linmeal neer avanukku aa'lugai thanthu,
sagalaththaiyum avanudaiya
paathangga'lukkuk keezhppaduththineer. (sanggeetham 8:6)
ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும், (சங்கீதம்
8:7)
aadumaaduga'lellaavat’raiyum, kaattumirugangga'laiyum, (sanggeetham 8:7)
ஆகாயத்துப் பறவைகளையும்,
சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில்
சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். (சங்கீதம்
8:8)
aagaayaththup pa’ravaiga'laiyum, samuththiraththu
machchangga'laiyum, kadalga'lil sagncharikki’ravaiga'laiyum avanudaiya paathangga'lukkuk keezhppaduththineer. (sanggeetham 8:8)
எங்கள்
ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய
நாமம் பூமியெங்கும் எவ்வளவு
மேன்மையுள்ளதாயிருக்கிறது! (சங்கீதம் 8:9)
engga'l
aa'ndavaraagiya karththaavea,
ummudaiya naamam boomiyenggum evva'lavu meanmaiyu'l'lathaayirukki’rathu! (sanggeetham 8:9)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!