Wednesday, June 29, 2016

Sanggeetham 79 | சங்கீதம் 79 | Psalms 79

தேவனே,  புறஜாதியார்  உமது  சுதந்தரத்தில்  வந்து,  உமது  பரிசுத்த  ஆலயத்தைத்  தீட்டுப்படுத்தி,  எருசலேமை  மண்மேடுகளாக்கினார்கள்.  (சங்கீதம்  79:1)

theavanea,  pu’rajaathiyaar  umathu  suthantharaththil  vanthu,  umathu  parisuththa  aalayaththaith  theettuppaduththi,  erusaleamai  ma'nmeaduga'laakkinaarga'l.  (sanggeetham  79:1)

உமது  ஊழியக்காரரின்  பிரேதங்களை  ஆகாயத்துப்  பறவைகளுக்கும்,  உமது  பரிசுத்தவான்களின்  மாம்சத்தைப்  பூமியின்  மிருகங்களுக்கும்  இரையாகக்  கொடுத்தார்கள்.  (சங்கீதம்  79:2)

umathu  oozhiyakkaararin  pireathangga'lai  aagaayaththup  pa’ravaiga'lukkum,  umathu  parisuththavaanga'lin  maamsaththaip  boomiyin  mirugangga'lukkum  iraiyaagak  koduththaarga'l.  (sanggeetham  79:2)

எருசலேமைச்  சுற்றிலும்  அவர்களுடைய  இரத்தத்தை  தண்ணீரைப்போலச்  சிந்தினார்கள்;  அவர்களை  அடக்கம்பண்ணுவாருமில்லை.  (சங்கீதம்  79:3)

erusaleamaich  sut’rilum  avarga'ludaiya  iraththaththai  tha'n'neeraippoalach  sinthinaarga'l;  avarga'lai  adakkampa'n'nuvaarumillai.  (sanggeetham  79:3)

எங்கள்  அயலாருக்கு  நிந்தையும்,  எங்கள்  சுற்றுப்புறத்தாருக்குப்  பரியாசமும்  சக்கந்தமுமானோம்.  (சங்கீதம்  79:4)

engga'l  ayalaarukku  ninthaiyum,  engga'l  sut’ruppu’raththaarukkup  pariyaasamum  sakkanthamumaanoam.  (sanggeetham  79:4)

எதுவரைக்கும்  கர்த்தாவே!  நீர்  என்றைக்கும்  கோபமாயிருப்பீரோ?  உம்முடைய  எரிச்சல்  அக்கினியைப்போல்  எரியுமோ?  (சங்கீதம்  79:5)

ethuvaraikkum  karththaavea!  neer  en’raikkum  koabamaayiruppeeroa?  ummudaiya  erichchal  akkiniyaippoal  eriyumoa?  (sanggeetham  79:5)

உம்மை  அறியாத  ஜாதிகள்மேலும்,  உமது  நாமத்தைத்  தொழுதுகொள்ளாத  ராஜ்யங்கள்மேலும்,  உம்முடைய  உக்கிரத்தை  ஊற்றிவிடும்.  (சங்கீதம்  79:6)

ummai  a’riyaatha  jaathiga'lmealum,  umathu  naamaththaith  thozhuthuko'l'laatha  raajyangga'lmealum,  ummudaiya  ukkiraththai  oot’rividum.  (sanggeetham  79:6)

அவர்கள்  யாக்கோபைப்  பட்சித்து,  அவன்  குடியிருப்பைப்  பாழாக்கினார்களே.  (சங்கீதம்  79:7)

avarga'l  yaakkoabaip  padchiththu,  avan  kudiyiruppaip  paazhaakkinaarga'lea.  (sanggeetham  79:7)

பூர்வகாலத்து  அக்கிரமங்களை  எங்களுக்கு  விரோதமாக  நினையாதேயும்;  உம்முடைய  இரக்கங்கள்  சீக்கிரமாய்  எங்களுக்கு  நேரிடுவதாக;  நாங்கள்  மிகவும்  தாழ்த்தப்பட்டுப்போனோம்.  (சங்கீதம்  79:8)

poorvakaalaththu  akkiramangga'lai  engga'lukku  viroathamaaga  ninaiyaatheayum;  ummudaiya  irakkangga'l  seekkiramaay  engga'lukku  neariduvathaaga;  naangga'l  migavum  thaazhththappattuppoanoam.  (sanggeetham  79:8)

எங்களை  இரட்சிக்கும்  தேவனே,  நீர்  உமது  நாமத்தின்  மகிமையினிமித்தம்  எங்களுக்கு  உதவிசெய்து,  உமது  நாமத்தினிமித்தம்  எங்களை  விடுவித்து,  எங்கள்  பாவங்களை  நிவிர்த்தியாக்கும்.  (சங்கீதம்  79:9)

engga'lai  iradchikkum  theavanea,  neer  umathu  naamaththin  magimaiyinimiththam  engga'lukku  uthaviseythu,  umathu  naamaththinimiththam  engga'lai  viduviththu,  engga'l  paavangga'lai  nivirththiyaakkum.  (sanggeetham  79:9)

அவர்களுடைய  தேவன்  எங்கே  என்று  புறஜாதிகள்  சொல்வானேன்?  உமது  ஊழியக்காரருடைய  சிந்துண்ட  இரத்தத்தின்  பழிவாங்குதல்  ஜாதிகளுக்குள்ளே  எங்கள்  கண்களுக்கு  முன்பாக  விளங்கும்படி  செய்யும்.  (சங்கீதம்  79:10)

avarga'ludaiya  theavan  enggea  en’ru  pu’rajaathiga'l  solvaanean?  umathu  oozhiyakkaararudaiya  sinthu'nda  iraththaththin  pazhivaangguthal  jaathiga'lukku'l'lea  engga'l  ka'nga'lukku  munbaaga  vi'langgumpadi  seyyum.  (sanggeetham  79:10)

கட்டுண்டவனுடைய  பெருமூச்சு  உமக்கு  முன்பாக  வரட்டும்;  கொலைக்கு  நியமிக்கப்பட்டவர்களை  உமது  புயபலத்தினால்  உயிரோடே  காத்தருளும்.  (சங்கீதம்  79:11)

kattu'ndavanudaiya  perumoochchu  umakku  munbaaga  varattum;  kolaikku  niyamikkappattavarga'lai  umathu  puyabalaththinaal  uyiroadea  kaaththaru'lum.  (sanggeetham  79:11)

ஆண்டவரே,  எங்கள்  அயலார்  உம்மை  நிந்தித்த  நிந்தையை,  ஏழத்தனையாக  அவர்கள்  மடியிலே  திரும்பப்பண்ணும்.  (சங்கீதம்  79:12)

aa'ndavarea,  engga'l  ayalaar  ummai  ninthiththa  ninthaiyai,  eazhaththanaiyaaga  avarga'l  madiyilea  thirumbappa'n'num.  (sanggeetham  79:12)

அப்பொழுது,  உம்முடைய  ஜனங்களும்  உம்முடைய  மேய்ச்சலின்  ஆடுகளுமாகிய  நாங்கள்  உம்மை  என்றென்றைக்கும்  புகழுவோம்;  தலைமுறை  தலைமுறையாக  உமது  துதியைச்  சொல்லிவருவோம்.  (சங்கீதம்  79:13)

appozhuthu,  ummudaiya  janangga'lum  ummudaiya  meaychchalin  aaduga'lumaagiya  naangga'l  ummai  en’ren’raikkum  pugazhuvoam;  thalaimu’rai  thalaimu’raiyaaga  umathu  thuthiyaich  sollivaruvoam.  (sanggeetham  79:13)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!