Wednesday, June 29, 2016

Sanggeetham 75 | சங்கீதம் 75 | Psalms 75

உம்மைத்  துதிக்கிறோம்,  தேவனே,  உம்மைத்  துதிக்கிறோம்;  உமது  நாமம்  சமீபமாயிருக்கிறதென்று  உமது  அதிசயமான  கிரியைகள்  அறிவிக்கிறது.  (சங்கீதம்  75:1)

ummaith  thuthikki’roam,  theavanea,  ummaith  thuthikki’roam;  umathu  naamam  sameebamaayirukki’rathen’ru  umathu  athisayamaana  kiriyaiga'l  a’rivikki’rathu.  (sanggeetham  75:1)

நியமிக்கப்பட்ட  காலத்திலே,  யதார்த்தமாய்  நியாயந்தீர்ப்பேன்.  (சங்கீதம்  75:2)

niyamikkappatta  kaalaththilea,  yathaarththamaay  niyaayantheerppean.  (sanggeetham  75:2)

பூமியானது  அதின்  எல்லாக்  குடிகளோடும்  கரைந்துபோகிறது;  அதின்  தூண்களை  நான்  நிலைநிறுத்துகிறேன்.  (சேலா.)  (சங்கீதம்  75:3)

boomiyaanathu  athin  ellaak  kudiga'loadum  karainthupoagi’rathu;  athin  thoo'nga'lai  naan  nilaini’ruththugi’rean.  (sealaa.)  (sanggeetham  75:3)

வீம்புக்காரரை  நோக்கி,  வீம்பு  பேசாதேயுங்கள்  என்றும்;  துன்மார்க்கரை  நோக்கி,  கொம்பை  உயர்த்தாதிருங்கள்  என்றும்  சொன்னேன்.  (சங்கீதம்  75:4)

veembukkaararai  noakki,  veembu  peasaatheayungga'l  en’rum;  thunmaarkkarai  noakki,  kombai  uyarththaathirungga'l  en’rum  sonnean.  (sanggeetham  75:4)

உங்கள்  கொம்பை  உயரமாய்  உயர்த்தாதிருங்கள்;  இறுமாப்புள்ள  கழுத்துடையவர்களாய்ப்  பேசாதிருங்கள்.  (சங்கீதம்  75:5)

ungga'l  kombai  uyaramaay  uyarththaathirungga'l;  i’rumaappu'l'la  kazhuththudaiyavarga'laayp  peasaathirungga'l.  (sanggeetham  75:5)

கிழக்கிலும்  மேற்கிலும்  வனாந்தரதிசையிலுமிருந்து  ஜெயம்  வராது.  (சங்கீதம்  75:6)

kizhakkilum  mea’rkilum  vanaantharathisaiyilumirunthu  jeyam  varaathu.  (sanggeetham  75:6)

தேவனே  நியாயாதிபதி;  ஒருவனைத்  தாழ்த்தி,  ஒருவனை  உயர்த்துகிறார்.  (சங்கீதம்  75:7)

theavanea  niyaayaathibathi;  oruvanaith  thaazhththi,  oruvanai  uyarththugi’raar.  (sanggeetham  75:7)

கலங்கிப்  பொங்குகிற  மதுபானத்தினால்  நிறைந்த  பாத்திரம்  கர்த்தருடைய  கையிலிருக்கிறது,  அதிலிருந்து  வார்க்கிறார்;  பூமியிலுள்ள  துன்மார்க்கர்  யாவரும்  அதின்  வண்டல்களை  உறிஞ்சிக்  குடிப்பார்கள்.  (சங்கீதம்  75:8)

kalanggip  ponggugi’ra  mathubaanaththinaal  ni’raintha  paaththiram  karththarudaiya  kaiyilirukki’rathu,  athilirunthu  vaarkki’raar;  boomiyilu'l'la  thunmaarkkar  yaavarum  athin  va'ndalga'lai  u’rignchik  kudippaarga'l.  (sanggeetham  75:8)

நானோ  என்றென்றைக்கும்  இதை  அறிவித்து,  யாக்கோபின்  தேவனைக்  கீர்த்தனம்பண்ணுவேன்.  (சங்கீதம்  75:9)

naanoa  en’ren’raikkum  ithai  a’riviththu,  yaakkoabin  theavanaik  keerththanampa'n'nuvean.  (sanggeetham  75:9)

துன்மார்க்கருடைய  கொம்புகளையெல்லாம்  வெட்டிப்போடுவேன்;  நீதிமானுடைய  கொம்புகளோ  உயர்த்தப்படும்.  (சங்கீதம்  75:10)

thunmaarkkarudaiya  kombuga'laiyellaam  vettippoaduvean;  neethimaanudaiya  kombuga'loa  uyarththappadum.  (sanggeetham  75:10)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!