Wednesday, June 29, 2016

Sanggeetham 74 | சங்கீதம் 74 | Psalms 74

தேவனே,  நீர்  எங்களை  என்றென்றைக்கும்  ஏன்  தள்ளிவிடுகிறீர்?  உமது  மேய்ச்சலின்  ஆடுகள்மேல்  உமது  கோபம்  ஏன்  புகைகிறது?  (சங்கீதம்  74:1)

theavanea,  neer  engga'lai  en’ren’raikkum  ean  tha'l'lividugi’reer?  umathu  meaychchalin  aaduga'lmeal  umathu  koabam  ean  pugaigi’rathu?  (sanggeetham  74:1)

நீர்  பூர்வகாலத்தில்  சம்பாதித்த  உமது  சபையையும்,  நீர்  மீட்டுக்கொண்ட  உமது  சுதந்தரமான  கோத்திரத்தையும்,  நீர்  வாசமாயிருந்த  சீயோன்  பர்வதத்தையும்  நினைத்தருளும்.  (சங்கீதம்  74:2)

neer  poorvakaalaththil  sambaathiththa  umathu  sabaiyaiyum,  neer  meettukko'nda  umathu  suthantharamaana  koaththiraththaiyum,  neer  vaasamaayiruntha  seeyoan  parvathaththaiyum  ninaiththaru'lum.  (sanggeetham  74:2)

நெடுங்காலமாகப்  பாழாய்க்கிடக்கிற  ஸ்தலங்களில்  உம்முடைய  பாதங்களை  எழுந்தருளப்பண்ணும்;  பரிசுத்த  ஸ்தலத்திலே  சத்துரு  அனைத்தையும்  கெடுத்துப்போட்டான்.  (சங்கீதம்  74:3)

nedungkaalamaagap  paazhaaykkidakki’ra  sthalangga'lil  ummudaiya  paathangga'lai  ezhuntharu'lappa'n'num;  parisuththa  sthalaththilea  saththuru  anaiththaiyum  keduththuppoattaan.  (sanggeetham  74:3)

உம்முடைய  சத்துருக்கள்  உம்முடைய  ஆலயங்களுக்குள்ளே  கெர்ச்சித்து,  தங்கள்  கொடிகளை  அடையாளங்களாக  நாட்டுகிறார்கள்.  (சங்கீதம்  74:4)

ummudaiya  saththurukka'l  ummudaiya  aalayangga'lukku'l'lea  kerchchiththu,  thangga'l  kodiga'lai  adaiyaa'langga'laaga  naattugi’raarga'l.  (sanggeetham  74:4)

கோடரிகளை  ஓங்கிச்  சோலையிலே  மரங்களை  வெட்டுகிறவன்  பேர்பெற்றவனானான்.  (சங்கீதம்  74:5)

koadariga'lai  oanggich  soalaiyilea  marangga'lai  vettugi’ravan  pearpet’ravanaanaan.  (sanggeetham  74:5)

இப்பொழுதோ  அவர்கள்  அதின்  சித்திரவேலைகள்  முழுவதையும்  வாச்சிகளாலும்  சம்மட்டிகளாலும்  தகர்த்துப்  போடுகிறார்கள்.  (சங்கீதம்  74:6)

ippozhuthoa  avarga'l  athin  siththiravealaiga'l  muzhuvathaiyum  vaachchiga'laalum  sammattiga'laalum  thagarththup  poadugi’raarga'l.  (sanggeetham  74:6)

உமது  பரிசுத்த  ஸ்தலத்தை  அக்கினிக்கு  இரையாக்கி,  உமது  நாமத்தின்  வாசஸ்தலத்தைத்  தரைமட்டும்  இடித்து,  அசுத்தப்படுத்தினார்கள்.  (சங்கீதம்  74:7)

umathu  parisuththa  sthalaththai  akkinikku  iraiyaakki,  umathu  naamaththin  vaasasthalaththaith  tharaimattum  idiththu,  asuththappaduththinaarga'l.  (sanggeetham  74:7)

அவர்களை  ஏகமாய்  நிர்த்தூளியாக்குவோம்  என்று  தங்கள்  இருதயத்தில்  சொல்லி,  தேசத்திலுள்ள  ஆலயங்களையெல்லாம்  சுட்டெரித்துப்போட்டார்கள்.  (சங்கீதம்  74:8)

avarga'lai  eagamaay  nirththoo'liyaakkuvoam  en’ru  thangga'l  iruthayaththil  solli,  theasaththilu'l'la  aalayangga'laiyellaam  sutteriththuppoattaarga'l.  (sanggeetham  74:8)

எங்களுக்கு  இருந்த  அடையாளங்களைக்  காணோம்;  தீர்க்கதரிசியும்  இல்லை;  இது  எதுவரைக்கும்  என்று  அறிகிறவனும்  எங்களிடத்தில்  இல்லை.  (சங்கீதம்  74:9)

engga'lukku  iruntha  adaiyaa'langga'laik  kaa'noam;  theerkkatharisiyum  illai;  ithu  ethuvaraikkum  en’ru  a’rigi’ravanum  engga'lidaththil  illai.  (sanggeetham  74:9)

தேவனே,  எதுவரைக்கும்  சத்துரு  நிந்திப்பான்?  பகைவன்  உமது  நாமத்தை  எப்பொழுதும்  தூஷிப்பானோ?  (சங்கீதம்  74:10)

theavanea,  ethuvaraikkum  saththuru  ninthippaan?  pagaivan  umathu  naamaththai  eppozhuthum  thooshippaanoa?  (sanggeetham  74:10)

உமது  வலதுகரத்தை  ஏன்  முடக்கிக்கொள்ளுகிறீர்;  அதை  உமது  மடியிலிருந்து  எடுத்து  ஓங்கி  நிர்மூலமாக்கும்.  (சங்கீதம்  74:11)

umathu  valathukaraththai  ean  mudakkikko'l'lugi’reer;  athai  umathu  madiyilirunthu  eduththu  oanggi  nirmoolamaakkum.  (sanggeetham  74:11)

பூமியின்  நடுவில்  இரட்சிப்புகளைச்  செய்துவருகிற  தேவன்  பூர்வகாலமுதல்  என்னுடைய  ராஜா.  (சங்கீதம்  74:12)

boomiyin  naduvil  iradchippuga'laich  seythuvarugi’ra  theavan  poorvakaalamuthal  ennudaiya  raajaa.  (sanggeetham  74:12)

தேவரீர்  உமது  வல்லமையினால்  சமுத்திரத்தை  இரண்டாகப்  பிளந்து,  ஜலத்திலுள்ள  வலுசர்ப்பங்களின்  தலைகளை  உடைத்தீர்.  (சங்கீதம்  74:13)

theavareer  umathu  vallamaiyinaal  samuththiraththai  ira'ndaagap  pi'lanthu,  jalaththilu'l'la  valusarppangga'lin  thalaiga'lai  udaiththeer.  (sanggeetham  74:13)

தேவரீர்  முதலைகளின்  தலைகளை  நருக்கிப்போட்டு,  அதை  வனாந்தரத்து  ஜனங்களுக்கு  உணவாகக்  கொடுத்தீர்.  (சங்கீதம்  74:14)

theavareer  muthalaiga'lin  thalaiga'lai  narukkippoattu,  athai  vanaantharaththu  janangga'lukku  u'navaagak  koduththeer.  (sanggeetham  74:14)

ஊற்றையும்  ஆற்றையும்  பிளந்துவிட்டீர்;  மகா  நதிகளையும்  வற்றிப்போகப்பண்ணினீர்.  (சங்கீதம்  74:15)

oot’raiyum  aat’raiyum  pi'lanthuvitteer;  mahaa  nathiga'laiyum  vat’rippoagappa'n'nineer.  (sanggeetham  74:15)

பகலும்  உம்முடையது,  இரவும்  உம்முடையது;  தேவரீர்  ஒளியையும்  சூரியனையும்  படைத்தீர்.  (சங்கீதம்  74:16)

pagalum  ummudaiyathu,  iravum  ummudaiyathu;  theavareer  o'liyaiyum  sooriyanaiyum  padaiththeer.  (sanggeetham  74:16)

பூமியின்  எல்லைகளையெல்லாம்  திட்டம்பண்ணினீர்;  கோடைகாலத்தையும்  மாரிகாலத்தையும்  உண்டாக்கினீர்.  (சங்கீதம்  74:17)

boomiyin  ellaiga'laiyellaam  thittampa'n'nineer;  koadaikaalaththaiyum  maarikaalaththaiyum  u'ndaakkineer.  (sanggeetham  74:17)

கர்த்தாவே,  சத்துரு  உம்மை  நிந்தித்ததையும்,  மதியீன  ஜனங்கள்  உமது  நாமத்தைத்  தூஷித்ததையும்  நினைத்துக்கொள்ளும்.  (சங்கீதம்  74:18)

karththaavea,  saththuru  ummai  ninthiththathaiyum,  mathiyeena  janangga'l  umathu  naamaththaith  thooshiththathaiyum  ninaiththukko'l'lum.  (sanggeetham  74:18)

உமது  காட்டுப்புறாவின்  ஆத்துமாவைத்  துஷ்டருடைய  கூட்டத்திற்கு  ஒப்புக்கொடாதேயும்;  உமது  ஏழைகளின்  கூட்டத்தை  என்றைக்கும்  மறவாதேயும்.  (சங்கீதம்  74:19)

umathu  kaattuppu’raavin  aaththumaavaith  thushdarudaiya  koottaththi’rku  oppukkodaatheayum;  umathu  eazhaiga'lin  koottaththai  en’raikkum  ma’ravaatheayum.  (sanggeetham  74:19)

உம்முடைய  உடன்படிக்கையை  நினைத்தருளும்;  பூமியின்  இருளான  இடங்கள்  கொடுமையுள்ள  குடியிருப்புகளால்  நிறைந்திருக்கிறதே.  (சங்கீதம்  74:20)

ummudaiya  udanpadikkaiyai  ninaiththaru'lum;  boomiyin  iru'laana  idangga'l  kodumaiyu'l'la  kudiyiruppuga'laal  ni’rainthirukki’rathea.  (sanggeetham  74:20)

துன்பப்பட்டவன்  வெட்கத்தோடே  திரும்பவிடாதிரும்;  சிறுமையும்  எளிமையுமானவன்  உமது  நாமத்தைத்  துதிக்கும்படி  செய்யும்.  (சங்கீதம்  74:21)

thunbappattavan  vedkaththoadea  thirumbavidaathirum;  si’rumaiyum  e'limaiyumaanavan  umathu  naamaththaith  thuthikkumpadi  seyyum.  (sanggeetham  74:21)

தேவனே,  எழுந்தருளும்,  உமக்காக  நீரே  வழக்காடும்;  மதியீனனாலே  நாடோறும்  உமக்கு  வரும்  நிந்தையை  நினைத்துக்கொள்ளும்.  (சங்கீதம்  74:22)

theavanea,  ezhuntharu'lum,  umakkaaga  neerea  vazhakkaadum;  mathiyeenanaalea  naadoa’rum  umakku  varum  ninthaiyai  ninaiththukko'l'lum.  (sanggeetham  74:22)

உம்முடைய  சத்துருக்களின்  ஆரவாரத்தை  மறவாதேயும்;  உமக்கு  விரோதமாய்  எழும்புகிறவர்களின்  அமளி  எப்பொழுதும்  அதிகரிக்கிறது.  (சங்கீதம்  74:23)

ummudaiya  saththurukka'lin  aaravaaraththai  ma’ravaatheayum;  umakku  viroathamaay  ezhumbugi’ravarga'lin  ama'li  eppozhuthum  athigarikki’rathu.  (sanggeetham  74:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!