Wednesday, June 29, 2016

Sanggeetham 71 | சங்கீதம் 71 | Psalms 71

கர்த்தாவே,  உம்மை  நம்பியிருக்கிறேன்;  நான்  ஒருபோதும்  வெட்கம்  அடையாதபடி  செய்யும்.  (சங்கீதம்  71:1)

karththaavea,  ummai  nambiyirukki’rean;  naan  orupoathum  vedkam  adaiyaathapadi  seyyum.  (sanggeetham  71:1)

உமது  நீதியினிமித்தம்  என்னை  விடுவித்து,  என்னைக்  காத்தருளும்;  உமது  செவியை  எனக்குச்  சாய்த்து,  என்னை  இரட்சியும்.  (சங்கீதம்  71:2)

umathu  neethiyinimiththam  ennai  viduviththu,  ennaik  kaaththaru'lum;  umathu  seviyai  enakkuch  saayththu,  ennai  iradchiyum.  (sanggeetham  71:2)

நான்  எப்பொழுதும்  வந்தடையத்தக்கக்  கன்மலையாயிரும்;  என்னை  இரட்சிப்பதற்குக்  கட்டளையிட்டீரே;  நீரே  என்  கன்மலையும்  என்  கோட்டையுமாய்  இருக்கிறீர்.  (சங்கீதம்  71:3)

naan  eppozhuthum  vanthadaiyaththakkak  kanmalaiyaayirum;  ennai  iradchippatha’rkuk  katta'laiyitteerea;  neerea  en  kanmalaiyum  en  koattaiyumaay  irukki’reer.  (sanggeetham  71:3)

என்  தேவனே,  துன்மார்க்கனுடைய  கைக்கும்,  நியாயக்கேடும்  கொடுமையுமுள்ளவனுடைய  கைக்கும்  என்னைத்  தப்புவியும்.  (சங்கீதம்  71:4)

en  theavanea,  thunmaarkkanudaiya  kaikkum,  niyaayakkeadum  kodumaiyumu'l'lavanudaiya  kaikkum  ennaith  thappuviyum.  (sanggeetham  71:4)

கர்த்தராகிய  ஆண்டவரே,  நீரே  என்  நோக்கமும்,  என்  சிறுவயதுதொடங்கி  என்  நம்பிக்கையுமாயிருக்கிறீர்.  (சங்கீதம்  71:5)

karththaraagiya  aa'ndavarea,  neerea  en  noakkamum,  en  si’ruvayathuthodanggi  en  nambikkaiyumaayirukki’reer.  (sanggeetham  71:5)

நான்  கர்ப்பத்தில்  உற்பவித்ததுமுதல்  உம்மால்  ஆதரிக்கப்பட்டேன்;  என்  தாயின்  வயிற்றிலிருந்து  என்னை  எடுத்தவர்  நீரே;  உம்மையே  நான்  எப்பொழுதும்  துதிப்பேன்.  (சங்கீதம்  71:6)

naan  karppaththil  u’rpaviththathumuthal  ummaal  aatharikkappattean;  en  thaayin  vayit’rilirunthu  ennai  eduththavar  neerea;  ummaiyea  naan  eppozhuthum  thuthippean.  (sanggeetham  71:6)

அநேகருக்கு  நான்  ஒரு  புதுமைப்போலானேன்;  நீரோ  எனக்குப்  பலத்த  அடைக்கலமாயிருக்கிறீர்.  (சங்கீதம்  71:7)

aneagarukku  naan  oru  puthumaippoalaanean;  neeroa  enakkup  balaththa  adaikkalamaayirukki’reer.  (sanggeetham  71:7)

என்  வாய்  உமது  துதியினாலும்,  நாள்தோறும்  உமது  மகத்துவத்தினாலும்  நிறைந்திருப்பதாக.  (சங்கீதம்  71:8)

en  vaay  umathu  thuthiyinaalum,  naa'lthoa’rum  umathu  magaththuvaththinaalum  ni’rainthiruppathaaga.  (sanggeetham  71:8)

முதிர்ந்தவயதில்  என்னைத்  தள்ளிவிடாமலும்,  என்  பெலன்  ஒடுங்கும்போது  என்னைக்  கைவிடாமலும்  இரும்.  (சங்கீதம்  71:9)

muthirnthavayathil  ennaith  tha'l'lividaamalum,  en  belan  odunggumpoathu  ennaik  kaividaamalum  irum.  (sanggeetham  71:9)

என்  சத்துருக்கள்  எனக்கு  விரோதமாய்ப்  பேசி,  என்  ஆத்துமாவுக்குக்  காத்திருக்கிறவர்கள்  ஏகமாய்  ஆலோசனைபண்ணி:  (சங்கீதம்  71:10)

en  saththurukka'l  enakku  viroathamaayp  peasi,  en  aaththumaavukkuk  kaaththirukki’ravarga'l  eagamaay  aaloasanaipa'n'ni:  (sanggeetham  71:10)

தேவன்  அவனைக்  கைவிட்டார்,  அவனைத்  தொடர்ந்துபிடியுங்கள்;  அவனை  விடுவிப்பார்  இல்லை  என்கிறார்கள்.  (சங்கீதம்  71:11)

theavan  avanaik  kaivittaar,  avanaith  thodarnthupidiyungga'l;  avanai  viduvippaar  illai  engi’raarga'l.  (sanggeetham  71:11)

தேவனே,  எனக்குத்  தூரமாயிராதேயும்;  என்  தேவனே,  எனக்குச்  சகாயம்பண்ணத்  தீவிரியும்.  (சங்கீதம்  71:12)

theavanea,  enakkuth  thooramaayiraatheayum;  en  theavanea,  enakkuch  sagaayampa'n'nath  theeviriyum.  (sanggeetham  71:12)

என்  ஆத்துமாவை  விரோதிக்கிறவர்கள்  வெட்கி  அழியவும்,  எனக்குப்  பொல்லாப்புத்  தேடுகிறவர்கள்  நிந்தையாலும்  இலச்சையாலும்  மூடப்படவுங்கடவர்கள்.  (சங்கீதம்  71:13)

en  aaththumaavai  viroathikki’ravarga'l  vedki  azhiyavum,  enakkup  pollaapputh  theadugi’ravarga'l  ninthaiyaalum  ilachchaiyaalum  moodappadavungkadavarga'l.  (sanggeetham  71:13)

நானோ  எப்பொழுதும்  நம்பிக்கைகொண்டிருந்து,  மேன்மேலும்  உம்மைத்  துதிப்பேன்.  (சங்கீதம்  71:14)

naanoa  eppozhuthum  nambikkaiko'ndirunthu,  meanmealum  ummaith  thuthippean.  (sanggeetham  71:14)

என்  வாய்  நாள்தோறும்  உமது  நீதியையும்  உமது  இரட்சிப்பையும்  சொல்லும்;  அவைகளின்  தொகையை  நான்  அறியேன்.  (சங்கீதம்  71:15)

en  vaay  naa'lthoa’rum  umathu  neethiyaiyum  umathu  iradchippaiyum  sollum;  avaiga'lin  thogaiyai  naan  a’riyean.  (sanggeetham  71:15)

கர்த்தராகிய  ஆண்டவருடைய  வல்லமையை  முன்னிட்டு  நடப்பேன்;  உம்முடைய  நீதியைப்பற்றியே  மேன்மைபாராட்டுவேன்.  (சங்கீதம்  71:16)

karththaraagiya  aa'ndavarudaiya  vallamaiyai  munnittu  nadappean;  ummudaiya  neethiyaippat’riyea  meanmaipaaraattuvean.  (sanggeetham  71:16)

தேவனே,  என்  சிறுவயதுமுதல்  எனக்குப்  போதித்துவந்தீர்;  இதுவரைக்கும்  உம்முடைய  அதிசயங்களை  அறிவித்துவந்தேன்.  (சங்கீதம்  71:17)

theavanea,  en  si’ruvayathumuthal  enakkup  poathiththuvantheer;  ithuvaraikkum  ummudaiya  athisayangga'lai  a’riviththuvanthean.  (sanggeetham  71:17)

இப்பொழுதும்  தேவனே,  இந்தச்  சந்ததிக்கு  உமது  வல்லமையையும்,  வரப்போகிற  யாவருக்கும்  உமது  பராக்கிரமத்தையும்  நான்  அறிவிக்குமளவும்,  முதிர்வயதும்  நரைமயிருமுள்ளவனாகும்வரைக்கும்  என்னைக்  கைவிடீராக.  (சங்கீதம்  71:18)

ippozhuthum  theavanea,  inthach  santhathikku  umathu  vallamaiyaiyum,  varappoagi’ra  yaavarukkum  umathu  baraakkiramaththaiyum  naan  a’rivikkuma'lavum,  muthirvayathum  naraimayirumu'l'lavanaagumvaraikkum  ennaik  kaivideeraaga.  (sanggeetham  71:18)

தேவனே,  உம்முடைய  நீதி  உன்னதமானது,  பெரிதானவைகளை  நீர்  செய்தீர்;  தேவனே,  உமக்கு  நிகரானவர்  யார்?  (சங்கீதம்  71:19)

theavanea,  ummudaiya  neethi  unnathamaanathu,  perithaanavaiga'lai  neer  seytheer;  theavanea,  umakku  nigaraanavar  yaar?  (sanggeetham  71:19)

அநேக  இக்கட்டுகளையும்  ஆபத்துகளையும்  காணும்படி  செய்த  என்னை  நீர்  திரும்பவும்  உயிர்ப்பித்து,  திரும்பவும்  என்னைப்  பூமியின்  பாதாளங்களிலிருந்து  ஏறப்பண்ணுவீர்.  (சங்கீதம்  71:20)

aneaga  ikkattuga'laiyum  aabaththuga'laiyum  kaa'numpadi  seytha  ennai  neer  thirumbavum  uyirppiththu,  thirumbavum  ennaip  boomiyin  paathaa'langga'lilirunthu  ea’rappa'n'nuveer.  (sanggeetham  71:20)

என்  மேன்மையைப்  பெருகப்பண்ணி,  என்னை  மறுபடியும்  தேற்றுவீர்.  (சங்கீதம்  71:21)

en  meanmaiyaip  perugappa'n'ni,  ennai  ma’rupadiyum  theat’ruveer.  (sanggeetham  71:21)

என்  தேவனே,  நான்  வீணையைக்கொண்டு  உம்மையும்  உம்முடைய  சத்தியத்தையும்  துதிப்பேன்;  இஸ்ரவேலின்  பரிசுத்தரே,  சுரமண்டலத்தைக்கொண்டு  உம்மைப்  பாடுவேன்.  (சங்கீதம்  71:22)

en  theavanea,  naan  vee'naiyaikko'ndu  ummaiyum  ummudaiya  saththiyaththaiyum  thuthippean;  isravealin  parisuththarea,  surama'ndalaththaikko'ndu  ummaip  paaduvean.  (sanggeetham  71:22)

நான்  பாடும்போது  என்  உதடுகளும்,  நீர்  மீட்டுக்கொண்ட  என்  ஆத்துமாவும்  கெம்பீரித்து  மகிழும்.  (சங்கீதம்  71:23)

naan  paadumpoathu  en  uthaduga'lum,  neer  meettukko'nda  en  aaththumaavum  kembeeriththu  magizhum.  (sanggeetham  71:23)

எனக்குப்  பொல்லாப்பைத்  தேடுகிறவர்கள்  வெட்கி  இலச்சையடைந்தபடியால்,  நாள்தோறும்  என்  நாவு  உமது  நீதியைக்  கொண்டாடும்.  (சங்கீதம்  71:24)

enakkup  pollaappaith  theadugi’ravarga'l  vedki  ilachchaiyadainthapadiyaal,  naa'lthoa’rum  en  naavu  umathu  neethiyaik  ko'ndaadum.  (sanggeetham  71:24)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!