Saturday, June 11, 2016

Sanggeetham 7 | சங்கீதம் 7 | Psalms 7

என்  தேவனாகிய  கர்த்தாவே,  உம்மை  நம்பியிருக்கிறேன்;  என்னைத்  துன்பப்படுத்துகிறவர்கள்  எல்லாருக்கும்  என்னை  விலக்கி  இரட்சியும்.  (சங்கீதம்  7:1)

en  theavanaagiya  karththaavea,  ummai  nambiyirukki’rean;  ennaith  thunbappaduththugi’ravarga'l  ellaarukkum  ennai  vilakki  iradchiyum.  (sanggeetham  7:1)

சத்துரு  சிங்கம்போல்  என்  ஆத்துமாவைப்  பிடித்துக்கொண்டுபோய்,  விடுவிக்கிறவன்  இல்லாமையால்,  அதைப்பீறாதபடிக்கு  என்னைத்  தப்புவியும்.  (சங்கீதம்  7:2)

saththuru  singgampoal  en  aaththumaavaip  pidiththukko'ndupoay,  viduvikki’ravan  illaamaiyaal,  athaippee’raathapadikku  ennaith  thappuviyum.  (sanggeetham  7:2)

என்  தேவனாகிய  கர்த்தாவே,  நான்  இதைச்  செய்ததும்,  என்  கைகளில்  நியாயக்கேடிருக்கிறதும்,  (சங்கீதம்  7:3)

en  theavanaagiya  karththaavea,  naan  ithaich  seythathum,  en  kaiga'lil  niyaayakkeadirukki’rathum,  (sanggeetham  7:3)

என்னோடே  சமாதானமாயிருந்தவனுக்கு  நான்  தீமைசெய்ததும்,  காரணமில்லாமல்  எனக்குச்  சத்துருவானவனை  நான்  கொள்ளையிட்டதும்  உண்டானால்,  (சங்கீதம்  7:4)

ennoadea  samaathaanamaayirunthavanukku  naan  theemaiseythathum,  kaara'namillaamal  enakkuch  saththuruvaanavanai  naan  ko'l'laiyittathum  u'ndaanaal,  (sanggeetham  7:4)

பகைஞன்  என்  ஆத்துமாவைத்  தொடர்ந்துபிடித்து,  என்  பிராணனைத்  தரையிலே  தள்ளி  மிதித்து,  என்  மகிமையைத்  தூளிலே  தாழ்த்தக்கடவன்.  (சேலா.)  (சங்கீதம்  7:5)

pagaignan  en  aaththumaavaith  thodarnthupidiththu,  en  piraa'nanaith  tharaiyilea  tha'l'li  mithiththu,  en  magimaiyaith  thoo'lilea  thaazhththakkadavan.  (sealaa.)  (sanggeetham  7:5)

கர்த்தாவே,  நீர்  உம்முடைய  கோபத்தில்  எழுந்திருந்து,  என்  சத்துருக்களுடைய  மூர்க்கங்களினிமித்தம்  உம்மை  உயர்த்தி,  எனக்காக  விழித்துக்கொள்ளும்;  நியாயத்தீர்ப்பை  நியமித்திருக்கிறீரே.  (சங்கீதம்  7:6)

karththaavea,  neer  ummudaiya  koabaththil  ezhunthirunthu,  en  saththurukka'ludaiya  moorkkangga'linimiththam  ummai  uyarththi,  enakkaaga  vizhiththukko'l'lum;  niyaayaththeerppai  niyamiththirukki’reerea.  (sanggeetham  7:6)

ஜனக்கூட்டம்  உம்மைச்  சூழ்ந்துகொள்ளும்;  அவர்களுக்காகத்  திரும்பவும்  உன்னதத்திற்கு  எழுந்தருளும்.  (சங்கீதம்  7:7)

janakkoottam  ummaich  soozhnthuko'l'lum;  avarga'lukkaagath  thirumbavum  unnathaththi’rku  ezhuntharu'lum.  (sanggeetham  7:7)

கர்த்தர்  ஜனங்களுக்கு  நியாயஞ்  செய்வார்;  கர்த்தாவே,  என்  நீதியின்படியும்  என்னிலுள்ள  உண்மையின்படியும்  எனக்கு  நியாயஞ்செய்யும்.  (சங்கீதம்  7:8)

karththar  janangga'lukku  niyaayagn  seyvaar;  karththaavea,  en  neethiyinpadiyum  ennilu'l'la  u'nmaiyinpadiyum  enakku  niyaayagnseyyum.  (sanggeetham  7:8)

துன்மார்க்கனுடைய  பொல்லாங்கை  ஒழியப்பண்ணும்;  நீதிமானை  ஸ்திரப்படுத்துவீராக;  நீதியுள்ளவராயிருக்கிற  தேவரீர்  இருதயங்களையும்  உள்ளிந்திரியங்களையும்  சோதித்தறிகிறவர்.  (சங்கீதம்  7:9)

thunmaarkkanudaiya  pollaanggai  ozhiyappa'n'num;  neethimaanai  sthirappaduththuveeraaga;  neethiyu'l'lavaraayirukki’ra  theavareer  iruthayangga'laiyum  u'l'linthiriyangga'laiyum  soathiththa’rigi’ravar.  (sanggeetham  7:9)

செம்மையான  இருதயமுள்ளவர்களை  இரட்சிக்கிற  தேவனிடத்தில்  என்  கேடகம்  இருக்கிறது.  (சங்கீதம்  7:10)

semmaiyaana  iruthayamu'l'lavarga'lai  iradchikki’ra  theavanidaththil  en  keadagam  irukki’rathu.  (sanggeetham  7:10)

தேவன்  நீதியுள்ள  நியாயாதிபதி;  அவர்  நாள்தோறும்  பாவியின்மேல்  சினங்கொள்ளுகிற  தேவன்.  (சங்கீதம்  7:11)

theavan  neethiyu'l'la  niyaayaathibathi;  avar  naa'lthoa’rum  paaviyinmeal  sinangko'l'lugi’ra  theavan.  (sanggeetham  7:11)

அவன்  மனந்திரும்பாவிட்டால்  அவர்  தம்முடைய  பட்டயத்தைக்  கருக்காக்குவார்;  அவர்  தம்முடைய  வில்லை  நாணேற்றி,  அதை  ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.  (சங்கீதம்  7:12)

avan  mananthirumbaavittaal  avar  thammudaiya  pattayaththaik  karukkaakkuvaar;  avar  thammudaiya  villai  naa'neat’ri,  athai  aayaththappaduththiyirukki’raar.  (sanggeetham  7:12)

அவனுக்கு  மரணாயுதங்களை  ஆயத்தம்பண்ணினார்;  தம்முடைய  அம்புகளை  அக்கினி  அம்புகளாக்கினார்.  (சங்கீதம்  7:13)

avanukku  mara'naayuthangga'lai  aayaththampa'n'ninaar;  thammudaiya  ambuga'lai  akkini  ambuga'laakkinaar.  (sanggeetham  7:13)

இதோ,  அவன்  அக்கிரமத்தைப்  பெறக்  கர்ப்பவேதனைப்படுகிறான்;  தீவினையைக்  கர்ப்பந்தரித்து,  பொய்யைப்  பெறுகிறான்.  (சங்கீதம்  7:14)

ithoa,  avan  akkiramaththaip  pe’rak  karppaveathanaippadugi’raan;  theevinaiyaik  karppanthariththu,  poyyaip  pe’rugi’raan.  (sanggeetham  7:14)

குழியை  வெட்டி,  அதை  ஆழமாக்கினான்;  தான்  வெட்டின  குழியில்  தானே  விழுந்தான்.  (சங்கீதம்  7:15)

kuzhiyai  vetti,  athai  aazhamaakkinaan;  thaan  vettina  kuzhiyil  thaanea  vizhunthaan.  (sanggeetham  7:15)

அவன்  தீவினை  அவன்  சிரசின்மேல்  திரும்பும்,  அவன்  கொடுமை  அவன்  உச்சந்தலையின்மேல்  இறங்கும்.  (சங்கீதம்  7:16)

avan  theevinai  avan  sirasinmeal  thirumbum,  avan  kodumai  avan  uchchanthalaiyinmeal  i’ranggum.  (sanggeetham  7:16)

நான்  கர்த்தரை  அவருடைய  நீதியின்படி  துதித்து,  உன்னதமான  கர்த்தருடைய  நாமத்தைக்  கீர்த்தனம்பண்ணுவேன்.  (சங்கீதம்  7:17)

naan  karththarai  avarudaiya  neethiyinpadi  thuthiththu,  unnathamaana  karththarudaiya  naamaththaik  keerththanampa'n'nuvean.  (sanggeetham  7:17)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!