Wednesday, June 29, 2016

Sanggeetham 69 | சங்கீதம் 69 | Psalms 69

தேவனே,  என்னை  இரட்சியும்;  வெள்ளங்கள்  என்  ஆத்துமாமட்டும்  பெருகிவருகிறது.  (சங்கீதம்  69:1)

theavanea,  ennai  iradchiyum;  ve'l'langga'l  en  aaththumaamattum  perugivarugi’rathu.  (sanggeetham  69:1)

ஆழமான  உளையில்  அமிழ்ந்திருக்கிறேன்,  நிற்க  நிலையில்லை,  நிலையாத  ஜலத்தில்  ஆழ்ந்திருக்கிறேன்;  வெள்ளங்கள்  என்மேல்  புரண்டுபோகிறது.  (சங்கீதம்  69:2)

aazhamaana  u'laiyil  amizhnthirukki’rean,  ni’rka  nilaiyillai,  nilaiyaatha  jalaththil  aazhnthirukki’rean;  ve'l'langga'l  enmeal  pura'ndupoagi’rathu.  (sanggeetham  69:2)

நான்  கூப்பிடுகிறதினால்  இளைத்தேன்;  என்  தொண்டை  வறண்டுபோயிற்று;  என்  தேவனுக்கு  நான்  காத்திருக்கையால்,  என்  கண்கள்  பூத்துப்போயிற்று.  (சங்கீதம்  69:3)

naan  kooppidugi’rathinaal  i'laiththean;  en  tho'ndai  va’ra'ndupoayit’ru;  en  theavanukku  naan  kaaththirukkaiyaal,  en  ka'nga'l  pooththuppoayit’ru.  (sanggeetham  69:3)

நிமித்தமில்லாமல்  என்னைப்  பகைக்கிறவர்கள்  என்  தலைமயிரிலும்  அதிகமாயிருக்கிறார்கள்;  வீணாக  எனக்குச்  சத்துருக்களாகி  என்னைச்  சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்;  நான்  எடுத்துக்கொள்ளாததை  நான்  கொடுக்க  வேண்டியதாயிற்று.  (சங்கீதம்  69:4)

nimiththamillaamal  ennaip  pagaikki’ravarga'l  en  thalaimayirilum  athigamaayirukki’raarga'l;  vee'naaga  enakkuch  saththurukka'laagi  ennaich  sanggarikkavea'ndumen’rirukki’ravarga'l  balaththirukki’raarga'l;  naan  eduththukko'l'laathathai  naan  kodukka  vea'ndiyathaayit’ru.  (sanggeetham  69:4)

தேவனே,  நீர்  என்  புத்தியீனத்தை  அறிந்திருக்கிறீர்;  என்  குற்றங்கள்  உமக்கு  மறைந்திருக்கவில்லை.  (சங்கீதம்  69:5)

theavanea,  neer  en  buththiyeenaththai  a’rinthirukki’reer;  en  kut’rangga'l  umakku  ma’rainthirukkavillai.  (sanggeetham  69:5)

சேனைகளின்  கர்த்தராகிய  ஆண்டவரே,  உமக்காகக்  காத்திருக்கிறவர்கள்  என்னிமித்தம்  வெட்கப்பட்டுப்போகாதிருப்பார்களாக;  இஸ்ரவேலின்  தேவனே,  உம்மைத்  தேடுகிறவர்கள்  என்னிமித்தம்  நாணமடையாதிருப்பார்களாக.  (சங்கீதம்  69:6)

seanaiga'lin  karththaraagiya  aa'ndavarea,  umakkaagak  kaaththirukki’ravarga'l  ennimiththam  vedkappattuppoagaathiruppaarga'laaga;  isravealin  theavanea,  ummaith  theadugi’ravarga'l  ennimiththam  naa'namadaiyaathiruppaarga'laaga.  (sanggeetham  69:6)

உமதுநிமித்தம்  நிந்தையைச்  சகித்தேன்;  இலச்சை  என்  முகத்தை  மூடிற்று.  (சங்கீதம்  69:7)

umathunimiththam  ninthaiyaich  sagiththean;  ilachchai  en  mugaththai  moodit’ru.  (sanggeetham  69:7)

என்  சகோதரருக்கு  வேற்று  மனுஷனும்,  என்  தாயின்  பிள்ளைகளுக்கு  அந்நியனுமானேன்.  (சங்கீதம்  69:8)

en  sagoathararukku  veat’ru  manushanum,  en  thaayin  pi'l'laiga'lukku  anniyanumaanean.  (sanggeetham  69:8)

உம்முடைய  வீட்டைக்குறித்து  உண்டான  பக்திவைராக்கியம்  என்னைப்  பட்சித்தது;  உம்மை  நிந்திக்கிறவர்களுடைய  நிந்தனைகள்  என்மேல்  விழுந்தது.  (சங்கீதம்  69:9)

ummudaiya  veettaikku’riththu  u'ndaana  bakthivairaakkiyam  ennaip  padchiththathu;  ummai  ninthikki’ravarga'ludaiya  ninthanaiga'l  enmeal  vizhunthathu.  (sanggeetham  69:9)

என்  ஆத்துமா  வாடும்படி  உபவாசித்து  அழுதேன்;  அதுவும்  எனக்கு  நிந்தையாய்  முடிந்தது.  (சங்கீதம்  69:10)

en  aaththumaa  vaadumpadi  ubavaasiththu  azhuthean;  athuvum  enakku  ninthaiyaay  mudinthathu.  (sanggeetham  69:10)

இரட்டை  என்  உடுப்பாக்கினேன்;  அப்பொழுதும்  அவர்களுக்குப்  பழமொழியானேன்.  (சங்கீதம்  69:11)

irattai  en  uduppaakkinean;  appozhuthum  avarga'lukkup  pazhamozhiyaanean.  (sanggeetham  69:11)

வாசலில்  உட்கார்ந்திருக்கிறவர்கள்  எனக்கு  விரோதமாய்ப்  பேசுகிறார்கள்;  மதுபானம்பண்ணுகிறவர்களின்  பாடலானேன்.  (சங்கீதம்  69:12)

vaasalil  udkaarnthirukki’ravarga'l  enakku  viroathamaayp  peasugi’raarga'l;  mathubaanampa'n'nugi’ravarga'lin  paadalaanean.  (sanggeetham  69:12)

ஆனாலும்  கர்த்தாவே,  அநுக்கிரககாலத்திலே  உம்மை  நோக்கி  விண்ணப்பஞ்  செய்கிறேன்;  தேவனே,  உமது  மிகுந்த  கிருபையினாலும்  உமது  இரட்சிப்பின்  சத்தியத்தினாலும்  எனக்குச்  செவிகொடுத்தருளும்.  (சங்கீதம்  69:13)

aanaalum  karththaavea,  anukkiragakaalaththilea  ummai  noakki  vi'n'nappagn  seygi’rean;  theavanea,  umathu  miguntha  kirubaiyinaalum  umathu  iradchippin  saththiyaththinaalum  enakkuch  sevikoduththaru'lum.  (sanggeetham  69:13)

நான்  அமிழ்ந்திப்போகாதபடிக்குச்  சேற்றினின்று  என்னைத்  தூக்கிவிடும்;  என்னைப்  பகைக்கிறவர்களினின்றும்  நிலையாத  ஜலத்தினின்றும்  நான்  நீங்கும்படி  செய்யும்.  (சங்கீதம்  69:14)

naan  amizhnthippoagaathapadikkuch  seat’rinin’ru  ennaith  thookkividum;  ennaip  pagaikki’ravarga'linin’rum  nilaiyaatha  jalaththinin’rum  naan  neenggumpadi  seyyum.  (sanggeetham  69:14)

ஜலப்பிரவாகங்கள்  என்மேல்  புரளாமலும்,  ஆழம்  என்னை  விழுங்காமலும்,  பாதாளம்  என்மேல்  தன்  வாயை  அடைத்துக்கொள்ளாமலும்  இருப்பதாக.  (சங்கீதம்  69:15)

jalappiravaagangga'l  enmeal  pura'laamalum,  aazham  ennai  vizhunggaamalum,  paathaa'lam  enmeal  than  vaayai  adaiththukko'l'laamalum  iruppathaaga.  (sanggeetham  69:15)

கர்த்தாவே,  என்  விண்ணப்பத்தைக்  கேட்டருளும்,  உம்முடைய  தயை  நலமாயிருக்கிறது;  உமது  உருக்கமான  இரக்கங்களின்படி  என்னைக்  கடாட்சித்தருளும்.  (சங்கீதம்  69:16)

karththaavea,  en  vi'n'nappaththaik  keattaru'lum,  ummudaiya  thayai  nalamaayirukki’rathu;  umathu  urukkamaana  irakkangga'linpadi  ennaik  kadaadchiththaru'lum.  (sanggeetham  69:16)

உமது  முகத்தை  உமது  அடியேனுக்கு  மறையாதேயும்;  நான்  வியாகுலப்படுகிறேன்,  எனக்குத்  தீவிரமாய்ச்  செவிகொடுத்தருளும்.  (சங்கீதம்  69:17)

umathu  mugaththai  umathu  adiyeanukku  ma’raiyaatheayum;  naan  viyaagulappadugi’rean,  enakkuth  theeviramaaych  sevikoduththaru'lum.  (sanggeetham  69:17)

நீர்  என்  ஆத்துமாவினிடத்தில்  வந்து  அதை  விடுதலைபண்ணும்;  என்  சத்துருக்களினிமித்தம்  என்னை  மீட்டுவிடும்.  (சங்கீதம்  69:18)

neer  en  aaththumaavinidaththil  vanthu  athai  viduthalaipa'n'num;  en  saththurukka'linimiththam  ennai  meettuvidum.  (sanggeetham  69:18)

தேவரீர்  என்  நிந்தையையும்  என்  வெட்கத்தையும்  என்  அவமானத்தையும்  அறிந்திருக்கிறீர்;  என்  சத்துருக்கள்  எல்லாரும்  உமக்கு  முன்பாக  இருக்கிறார்கள்.  (சங்கீதம்  69:19)

theavareer  en  ninthaiyaiyum  en  vedkaththaiyum  en  avamaanaththaiyum  a’rinthirukki’reer;  en  saththurukka'l  ellaarum  umakku  munbaaga  irukki’raarga'l.  (sanggeetham  69:19)

நிந்தை  என்  இருதயத்தைப்  பிளந்தது;  நான்  மிகவும்  வேதனைப்படுகிறேன்;  எனக்காக  பரிதபிக்கிறவனுண்டோ  என்று  காத்திருந்தேன்,  ஒருவனும்  இல்லை;  தேற்றுகிறவர்களுக்குக்  காத்திருந்தேன்,  ஒருவனையும்  காணேன்.  (சங்கீதம்  69:20)

ninthai  en  iruthayaththaip  pi'lanthathu;  naan  migavum  veathanaippadugi’rean;  enakkaaga  parithabikki’ravanu'ndoa  en’ru  kaaththirunthean,  oruvanum  illai;  theat’rugi’ravarga'lukkuk  kaaththirunthean,  oruvanaiyum  kaa'nean.  (sanggeetham  69:20)

என்  ஆகாரத்தில்  கசப்புக்  கலந்து  கொடுத்தார்கள்,  என்  தாகத்துக்குக்  காடியைக்  குடிக்கக்கொடுத்தார்கள்.  (சங்கீதம்  69:21)

en  aagaaraththil  kasappuk  kalanthu  koduththaarga'l,  en  thaagaththukkuk  kaadiyaik  kudikkakkoduththaarga'l.  (sanggeetham  69:21)

அவர்களுடைய  பந்தி  அவர்களுக்குக்  கண்ணியும்,  அவர்களுடைய  செல்வம்  அவர்களுக்கு  வலையுமாயிருக்கக்கடவது.  (சங்கீதம்  69:22)

avarga'ludaiya  panthi  avarga'lukkuk  ka'n'niyum,  avarga'ludaiya  selvam  avarga'lukku  valaiyumaayirukkakkadavathu.  (sanggeetham  69:22)

அவர்களுடைய  கண்கள்  காணாதபடி  அந்தகாரப்படக்கடவது;  அவர்கள்  இடுப்புகளை  எப்போதும்  தள்ளாடப்பண்ணும்.  (சங்கீதம்  69:23)

avarga'ludaiya  ka'nga'l  kaa'naathapadi  anthagaarappadakkadavathu;  avarga'l  iduppuga'lai  eppoathum  tha'l'laadappa'n'num.  (sanggeetham  69:23)

உம்முடைய  உக்கிரத்தை  அவர்கள்மேல்  ஊற்றும்;  உம்முடைய  கோபாக்கினி  அவர்களைத்  தொடர்ந்து  பிடிப்பதாக.  (சங்கீதம்  69:24)

ummudaiya  ukkiraththai  avarga'lmeal  oot’rum;  ummudaiya  koabaakkini  avarga'laith  thodarnthu  pidippathaaga.  (sanggeetham  69:24)

அவர்கள்  வாசஸ்தலம்  பாழாகக்கடவது;  அவர்களுடைய  கூடாரங்களில்  குடியில்லாமற்போவதாக.  (சங்கீதம்  69:25)

avarga'l  vaasasthalam  paazhaagakkadavathu;  avarga'ludaiya  koodaarangga'lil  kudiyillaama’rpoavathaaga.  (sanggeetham  69:25)

தேவரீர்  அடித்தவனை  அவர்கள்  துன்பப்படுத்தி,  நீர்  காயப்படுத்தினவர்களை  நோகப்  பேசுகிறார்களே.  (சங்கீதம்  69:26)

theavareer  adiththavanai  avarga'l  thunbappaduththi,  neer  kaayappaduththinavarga'lai  noagap  peasugi’raarga'lea.  (sanggeetham  69:26)

அக்கிரமத்தின்மேல்  அக்கிரமத்தை  அவர்கள்மேல்  சுமத்தும்,  அவர்கள்  உமது  நீதிக்கு  வந்தெட்டாதிருப்பார்களாக.  (சங்கீதம்  69:27)

akkiramaththinmeal  akkiramaththai  avarga'lmeal  sumaththum,  avarga'l  umathu  neethikku  vanthettaathiruppaarga'laaga.  (sanggeetham  69:27)

ஜீவபுஸ்தகத்திலிருந்து  அவர்கள்பேர்  கிறுக்கப்பட்டுப்போவதாக;  நீதிமான்கள்  பேரோடே  அவர்கள்  பேர்  எழுதப்படாதிருப்பதாக.  (சங்கீதம்  69:28)

jeevapusthagaththilirunthu  avarga'lpear  ki’rukkappattuppoavathaaga;  neethimaanga'l  pearoadea  avarga'l  pear  ezhuthappadaathiruppathaaga.  (sanggeetham  69:28)

நானோ  சிறுமையும்  துயரமுமுள்ளவன்;  தேவனே,  உம்முடைய  இரட்சிப்பு  எனக்கு  உயர்ந்த  அடைக்கலமாவதாக.  (சங்கீதம்  69:29)

naanoa  si’rumaiyum  thuyaramumu'l'lavan;  theavanea,  ummudaiya  iradchippu  enakku  uyarntha  adaikkalamaavathaaga.  (sanggeetham  69:29)

தேவனுடைய  நாமத்தைப்  பாட்டினால்  துதித்து,  அவரை  ஸ்தோத்திரத்தினால்  மகிமைப்படுத்துவேன்.  (சங்கீதம்  69:30)

theavanudaiya  naamaththaip  paattinaal  thuthiththu,  avarai  sthoaththiraththinaal  magimaippaduththuvean.  (sanggeetham  69:30)

கொம்பும்  விரிகுளம்புமுள்ள  காளையெருதைப்பார்க்கிலும்,  இதுவே  கர்த்தருக்குப்  பிரியமாயிருக்கும்.  (சங்கீதம்  69:31)

kombum  viriku'lambumu'l'la  kaa'laiyeruthaippaarkkilum,  ithuvea  karththarukkup  piriyamaayirukkum.  (sanggeetham  69:31)

சாந்தகுணமுள்ளவர்கள்  இதைக்  கண்டு  சந்தோஷப்படுவார்கள்;  தேவனைத்  தேடுகிறவர்களே,  உங்கள்  இருதயம்  வாழும்.  (சங்கீதம்  69:32)

saanthaku'namu'l'lavarga'l  ithaik  ka'ndu  santhoashappaduvaarga'l;  theavanaith  theadugi’ravarga'lea,  ungga'l  iruthayam  vaazhum.  (sanggeetham  69:32)

கர்த்தர்  எளியவர்களின்  விண்ணப்பத்தைக்  கேட்கிறார்,  கட்டுண்ட  தம்முடையவர்களை  அவர்  புறக்கணியார்.  (சங்கீதம்  69:33)

karththar  e'liyavarga'lin  vi'n'nappaththaik  keadki’raar,  kattu'nda  thammudaiyavarga'lai  avar  pu’rakka'niyaar.  (sanggeetham  69:33)

வானமும்  பூமியும்  சமுத்திரங்களும்  அவைகளில்  சஞ்சரிக்கிற  யாவும்  அவரைத்  துதிக்கக்கடவது.  (சங்கீதம்  69:34)

vaanamum  boomiyum  samuththirangga'lum  avaiga'lil  sagncharikki’ra  yaavum  avaraith  thuthikkakkadavathu.  (sanggeetham  69:34)

தேவன்  சீயோனை  இரட்சித்து,  யூதாவின்  பட்டணங்களைக்  கட்டுவார்;  அப்பொழுது  அங்கே  குடியிருந்து  அதைச்  சுதந்தரித்துக்கொள்வார்கள்.  (சங்கீதம்  69:35)

theavan  seeyoanai  iradchiththu,  yoothaavin  patta'nangga'laik  kattuvaar;  appozhuthu  anggea  kudiyirunthu  athaich  suthanthariththukko'lvaarga'l.  (sanggeetham  69:35)

அவருடைய  ஊழியக்காரரின்  சந்ததியார்  அதைச்  சுதந்தரித்துக்கொள்வார்கள்;  அவருடைய  நாமத்தை  நேசிக்கிறவர்கள்  அதில்  வாசமாயிருப்பார்கள்.  (சங்கீதம்  69:36)

avarudaiya  oozhiyakkaararin  santhathiyaar  athaich  suthanthariththukko'lvaarga'l;  avarudaiya  naamaththai  neasikki’ravarga'l  athil  vaasamaayiruppaarga'l.  (sanggeetham  69:36)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!