Tuesday, June 28, 2016

Sanggeetham 66 | சங்கீதம் 66 | Psalms 66

பூமியின்  குடிகளே,  நீங்கள்  எல்லாரும்  தேவனுக்கு  முன்பாகக்  கெம்பீரமாய்ப்  பாடுங்கள்.  (சங்கீதம்  66:1)

boomiyin  kudiga'lea,  neengga'l  ellaarum  theavanukku  munbaagak  kembeeramaayp  paadungga'l.  (sanggeetham  66:1)

அவர்  நாமத்தின்  மகத்துவத்தைக்  கீர்த்தனம்பண்ணி,  அவருடைய  துதியின்  மகிமையைக்  கொண்டாடுங்கள்.  (சங்கீதம்  66:2)

avar  naamaththin  magaththuvaththaik  keerththanampa'n'ni,  avarudaiya  thuthiyin  magimaiyaik  ko'ndaadungga'l.  (sanggeetham  66:2)

தேவனை  நோக்கி:  உமது  கிரியைகளில்  எவ்வளவு  பயங்கரமாயிருக்கிறீர்;  உமது  மகத்துவமான  வல்லமையினிமித்தம்  உம்முடைய  சத்துருக்கள்  உமக்கு  இச்சகம்பேசி  அடங்குவார்கள்.  (சங்கீதம்  66:3)

theavanai  noakki:  umathu  kiriyaiga'lil  evva'lavu  bayanggaramaayirukki’reer;  umathu  magaththuvamaana  vallamaiyinimiththam  ummudaiya  saththurukka'l  umakku  ichchagampeasi  adangguvaarga'l.  (sanggeetham  66:3)

பூமியின்மீதெங்கும்  உம்மைப்  பணிந்துகொண்டு  உம்மைத்  துதித்துப்  பாடுவார்கள்;  அவர்கள்  உம்முடைய  நாமத்தைத்  துதித்துப்  பாடுவார்கள்  என்று  சொல்லுங்கள்.  (சேலா.)  (சங்கீதம்  66:4)

boomiyinmeethenggum  ummaip  pa'ninthuko'ndu  ummaith  thuthiththup  paaduvaarga'l;  avarga'l  ummudaiya  naamaththaith  thuthiththup  paaduvaarga'l  en’ru  sollungga'l.  (sealaa.)  (sanggeetham  66:4)

தேவனுடைய  செய்கைகளை  வந்து  பாருங்கள்;  அவர்  மனுபுத்திரரிடத்தில்  நடப்பிக்குங்  கிரியையில்  பயங்கரமானவர்.  (சங்கீதம்  66:5)

theavanudaiya  seygaiga'lai  vanthu  paarungga'l;  avar  manupuththiraridaththil  nadappikkung  kiriyaiyil  bayanggaramaanavar.  (sanggeetham  66:5)

கடலை  உலர்ந்த  தரையாக  மாற்றினார்;  ஆற்றைக்  கால்நடையாய்க்  கடந்தார்கள்;  அங்கே  அவரில்  களிகூர்ந்தோம்.  (சங்கீதம்  66:6)

kadalai  ularntha  tharaiyaaga  maat’rinaar;  aat’raik  kaalnadaiyaayk  kadanthaarga'l;  anggea  avaril  ka'likoornthoam.  (sanggeetham  66:6)

அவர்  தம்முடைய  வல்லமையினால்  என்றென்றைக்கும்  அரசாளுகிறார்;  அவருடைய  கண்கள்  ஜாதிகள்மேல்  நோக்கமாயிருக்கிறது;  துரோகிகள்  தங்களை  உயர்த்தாதிருப்பார்களாக.  (சேலா.)  (சங்கீதம்  66:7)

avar  thammudaiya  vallamaiyinaal  en’ren’raikkum  arasaa'lugi’raar;  avarudaiya  ka'nga'l  jaathiga'lmeal  noakkamaayirukki’rathu;  thuroagiga'l  thangga'lai  uyarththaathiruppaarga'laaga.  (sealaa.)  (sanggeetham  66:7)

ஜனங்களே,  நம்முடைய  தேவனை  ஸ்தோத்திரித்து,  அவரைத்  துதிக்குஞ்சத்தத்தைக்  கேட்கப்பண்ணுங்கள்.  (சங்கீதம்  66:8)

janangga'lea,  nammudaiya  theavanai  sthoaththiriththu,  avaraith  thuthikkugnsaththaththaik  keadkappa'n'nungga'l.  (sanggeetham  66:8)

அவர்  நம்முடைய  கால்களைத்  தள்ளாடவொட்டாமல்,  நம்முடைய  ஆத்துமாவை  உயிரோடே  வைக்கிறார்.  (சங்கீதம்  66:9)

avar  nammudaiya  kaalga'laith  tha'l'laadavottaamal,  nammudaiya  aaththumaavai  uyiroadea  vaikki’raar.  (sanggeetham  66:9)

தேவனே,  எங்களைச்  சோதித்தீர்;  வெள்ளியைப்  புடமிடுகிறதுபோல  எங்களைப்  புடமிட்டீர்.  (சங்கீதம்  66:10)

theavanea,  engga'laich  soathiththeer;  ve'l'liyaip  pudamidugi’rathupoala  engga'laip  pudamitteer.  (sanggeetham  66:10)

எங்களை  வலையில்  அகப்படுத்தி,  எங்கள்  இடுப்புகளின்மேல்  வருத்தமான  பாரத்தை  ஏற்றினீர்.  (சங்கீதம்  66:11)

engga'lai  valaiyil  agappaduththi,  engga'l  iduppuga'linmeal  varuththamaana  baaraththai  eat’rineer.  (sanggeetham  66:11)

மனுஷரை  எங்கள்  தலையின்மேல்  ஏறிப்போகப்பண்ணினீர்;  தீயையும்  தண்ணீரையும்  கடந்துவந்தோம்;  செழிப்பான  இடத்தில்  எங்களைக்  கொண்டுவந்து  விட்டீர்.  (சங்கீதம்  66:12)

manusharai  engga'l  thalaiyinmeal  ea’rippoagappa'n'nineer;  theeyaiyum  tha'n'neeraiyum  kadanthuvanthoam;  sezhippaana  idaththil  engga'laik  ko'nduvanthu  vitteer.  (sanggeetham  66:12)

சர்வாங்க  தகனபலிகளோடே  உமது  ஆலயத்திற்குள்  பிரவேசிப்பேன்;  (சங்கீதம்  66:13)

sarvaangga  thaganabaliga'loadea  umathu  aalayaththi’rku'l  piraveasippean;  (sanggeetham  66:13)

என்  இக்கட்டில்  நான்  என்  உதடுகளைத்  திறந்து,  என்  வாயினால்  சொல்லிய  என்  பொருத்தனைகளை  உமக்குச்  செலுத்துவேன்.  (சங்கீதம்  66:14)

en  ikkattil  naan  en  uthaduga'laith  thi’ranthu,  en  vaayinaal  solliya  en  poruththanaiga'lai  umakkuch  seluththuvean.  (sanggeetham  66:14)

ஆட்டுக்கடாக்களின்  நிணப்புகையுடனே  கொழுமையானவைகளை  உமக்குத்  தகனபலியாக  இடுவேன்;  காளைகளையும்  செம்மறியாட்டுக்  கடாக்களையும்  உமக்குப்  பலியிடுவேன்.  (சேலா.)  (சங்கீதம்  66:15)

aattukkadaakka'lin  ni'nappugaiyudanea  kozhumaiyaanavaiga'lai  umakkuth  thaganabaliyaaga  iduvean;  kaa'laiga'laiyum  semma’riyaattuk  kadaakka'laiyum  umakkup  baliyiduvean.  (sealaa.)  (sanggeetham  66:15)

தேவனுக்குப்  பயந்தவர்களே,  நீங்கள்  எல்லாரும்  வந்து  கேளுங்கள்;  அவர்  என்  ஆத்துமாவுக்குச்  செய்ததைச்  சொல்லுவேன்.  (சங்கீதம்  66:16)

theavanukkup  bayanthavarga'lea,  neengga'l  ellaarum  vanthu  kea'lungga'l;  avar  en  aaththumaavukkuch  seythathaich  solluvean.  (sanggeetham  66:16)

அவரை  நோக்கி  என்  வாயினால்  கூப்பிட்டேன்,  என்  நாவினால்  அவர்  புகழப்பட்டார்.  (சங்கீதம்  66:17)

avarai  noakki  en  vaayinaal  kooppittean,  en  naavinaal  avar  pugazhappattaar.  (sanggeetham  66:17)

என்  இருதயத்தில்  அக்கிரமசிந்தை  கொண்டிருந்தேனானால்,  ஆண்டவர்  எனக்குச்  செவிகொடார்.  (சங்கீதம்  66:18)

en  iruthayaththil  akkiramasinthai  ko'ndiruntheanaanaal,  aa'ndavar  enakkuch  sevikodaar.  (sanggeetham  66:18)

மெய்யாய்  தேவன்  எனக்குச்  செவிகொடுத்தார்,  என்  ஜெபத்தின்  சத்தத்தைக்  கேட்டார்.  (சங்கீதம்  66:19)

meyyaay  theavan  enakkuch  sevikoduththaar,  en  jebaththin  saththaththaik  keattaar.  (sanggeetham  66:19)

என்  ஜெபத்தைத்  தள்ளாமலும்,  தமது  கிருபையை  என்னைவிட்டு  விலக்காமலும்  இருந்த  தேவனுக்கு  ஸ்தோத்திரமுண்டாவதாக.  (சங்கீதம்  66:20)

en  jebaththaith  tha'l'laamalum,  thamathu  kirubaiyai  ennaivittu  vilakkaamalum  iruntha  theavanukku  sthoaththiramu'ndaavathaaga.  (sanggeetham  66:20)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!