Tuesday, June 28, 2016

Sanggeetham 61 | சங்கீதம் 61 | Psalms 61

தேவனே,  என்  கூப்பிடுதலைக்  கேட்டு,  என்  விண்ணப்பத்தைக்  கவனியும்.  (சங்கீதம்  61:1)

theavanea,  en  kooppiduthalaik  keattu,  en  vi'n'nappaththaik  kavaniyum.  (sanggeetham  61:1)

என்  இருதயம்  தொய்யும்போது  பூமியின்  கடையாந்தரத்திலிருந்து  உம்மை  நோக்கிக்  கூப்பிடுவேன்;  எனக்கு  எட்டாத  உயரமான  கன்மலையில்  என்னைக்  கொண்டுபோய்விடும்.  (சங்கீதம்  61:2)

en  iruthayam  thoyyumpoathu  boomiyin  kadaiyaantharaththilirunthu  ummai  noakkik  kooppiduvean;  enakku  ettaatha  uyaramaana  kanmalaiyil  ennaik  ko'ndupoayvidum.  (sanggeetham  61:2)

நீர்  எனக்கு  அடைக்கலமும்,  சத்துருவுக்கு  எதிரே  பெலத்த  துருகமுமாயிருந்தீர்.  (சங்கீதம்  61:3)

neer  enakku  adaikkalamum,  saththuruvukku  ethirea  belaththa  thurugamumaayiruntheer.  (sanggeetham  61:3)

நான்  உம்முடைய  கூடாரத்தில்  சதாகாலமும்  தங்குவேன்;  உமது  செட்டைகளின்  மறைவிலே  வந்து  அடைவேன்.  (சேலா.)  (சங்கீதம்  61:4)

naan  ummudaiya  koodaaraththil  sathaakaalamum  thangguvean;  umathu  settaiga'lin  ma’raivilea  vanthu  adaivean.  (sealaa.)  (sanggeetham  61:4)

தேவனே,  நீர்  என்  பொருத்தனைகளைக்  கேட்டீர்;  உமது  நாமத்திற்குப்  பயப்படுகிறவர்களின்  சுதந்தரத்தை  எனக்குத்  தந்தீர்.  (சங்கீதம்  61:5)

theavanea,  neer  en  poruththanaiga'laik  keatteer;  umathu  naamaththi’rkup  bayappadugi’ravarga'lin  suthantharaththai  enakkuth  thantheer.  (sanggeetham  61:5)

ராஜாவின்  நாட்களோடே  நாட்களைக்  கூட்டுவீர்;  அவர்  வருஷங்கள்  தலைமுறை  தலைமுறையாக  இருக்கும்.  (சங்கீதம்  61:6)

raajaavin  naadka'loadea  naadka'laik  koottuveer;  avar  varushangga'l  thalaimu’rai  thalaimu’raiyaaga  irukkum.  (sanggeetham  61:6)

அவர்  தேவனுக்கு  முன்பாக  என்றென்றைக்கும்  நிலைத்திருப்பார்;  தயையும்  உண்மையும்  அவரைக்  காக்கக்  கட்டளையிடும்.  (சங்கீதம்  61:7)

avar  theavanukku  munbaaga  en’ren’raikkum  nilaiththiruppaar;  thayaiyum  u'nmaiyum  avaraik  kaakkak  katta'laiyidum.  (sanggeetham  61:7)

இப்படியே  தினமும்  என்  பொருத்தனைகளை  நான்  செலுத்தும்படியாக,  உமது  நாமத்தை  என்றைக்கும்  கீர்த்தனம்பண்ணுவேன்.  (சங்கீதம்  61:8)

ippadiyea  thinamum  en  poruththanaiga'lai  naan  seluththumpadiyaaga,  umathu  naamaththai  en’raikkum  keerththanampa'n'nuvean.  (sanggeetham  61:8)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!