Saturday, June 11, 2016

Sanggeetham 6 | சங்கீதம் 6 | Psalms 6

கர்த்தாவே,  உம்முடைய  கோபத்திலே  என்னைக்  கடிந்துகொள்ளாதேயும்,  உம்முடைய  உக்கிரத்திலே  என்னைத்  தண்டியாதேயும்.  (சங்கீதம்  6:1)

karththaavea,  ummudaiya  koabaththilea  ennaik  kadinthuko'l'laatheayum,  ummudaiya  ukkiraththilea  ennaith  tha'ndiyaatheayum.  (sanggeetham  6:1)

என்மேல்  இரக்கமாயிரும்  கர்த்தாவே,  நான்  பெலனற்றுப்போனேன்;  என்னைக்  குணமாக்கும்  கர்த்தாவே,  என்  எலும்புகள்  நடுங்குகிறது.  (சங்கீதம்  6:2)

enmeal  irakkamaayirum  karththaavea,  naan  belanat’ruppoanean;  ennaik  ku'namaakkum  karththaavea,  en  elumbuga'l  nadunggugi’rathu.  (sanggeetham  6:2)

என்  ஆத்துமா  மிகவும்  வியாகுலப்படுகிறது;  கர்த்தாவே,  எதுவரைக்கும்  இரங்காதிருப்பீர்.  (சங்கீதம்  6:3)

en  aaththumaa  migavum  viyaagulappadugi’rathu;  karththaavea,  ethuvaraikkum  iranggaathiruppeer.  (sanggeetham  6:3)

திரும்பும்  கர்த்தாவே,  என்  ஆத்துமாவை  விடுவியும்;  உம்முடைய  கிருபையினிமித்தம்  என்னை  இரட்சியும்.  (சங்கீதம்  6:4)

thirumbum  karththaavea,  en  aaththumaavai  viduviyum;  ummudaiya  kirubaiyinimiththam  ennai  iradchiyum.  (sanggeetham  6:4)

மரணத்தில்  உம்மை  நினைவுகூர்வதில்லை,  பாதாளத்தில்  உம்மைத்  துதிப்பவன்  யார்?  (சங்கீதம்  6:5)

mara'naththil  ummai  ninaivukoorvathillai,  paathaa'laththil  ummaith  thuthippavan  yaar?  (sanggeetham  6:5)

என்  பெருமூச்சினால்  இளைத்துப்போனேன்;  இராமுழுவதும்  என்  கண்ணீரால்  என்  படுக்கையை  மிகவும்  ஈரமாக்கி,  என்  கட்டிலை  நனைக்கிறேன்.  (சங்கீதம்  6:6)

en  perumoochchinaal  i'laiththuppoanean;  iraamuzhuvathum  en  ka'n'neeraal  en  padukkaiyai  migavum  eeramaakki,  en  kattilai  nanaikki’rean.  (sanggeetham  6:6)

துயரத்தினால்  என்  கண்  குழி  விழுந்துபோயிற்று,  என்  சத்துருக்கள்  அனைவர்  நிமித்தமும்  மங்கிப்போயிற்று.  (சங்கீதம்  6:7)

thuyaraththinaal  en  ka'n  kuzhi  vizhunthupoayit’ru,  en  saththurukka'l  anaivar  nimiththamum  manggippoayit’ru.  (sanggeetham  6:7)

அக்கிரமக்காரரே,  நீங்கள்  எல்லாரும்  என்னைவிட்டு  அகன்றுபோங்கள்;  கர்த்தர்  என்  அழுகையின்  சத்தத்தைக்  கேட்டார்.  (சங்கீதம்  6:8)

akkiramakkaararea,  neengga'l  ellaarum  ennaivittu  agan’rupoangga'l;  karththar  en  azhugaiyin  saththaththaik  keattaar.  (sanggeetham  6:8)

கர்த்தர்  என்  விண்ணப்பத்தைக்  கேட்டார்;  கர்த்தர்  என்  ஜெபத்தை  ஏற்றுக்கொள்ளுவார்.  (சங்கீதம்  6:9)

karththar  en  vi'n'nappaththaik  keattaar;  karththar  en  jebaththai  eat’rukko'l'luvaar.  (sanggeetham  6:9)

என்  பகைஞர்  எல்லாரும்  வெட்கி  மிகவும்  கலங்கிப்போவார்கள்;  அவர்கள்  பின்னாகத்  திரும்பிச்  சடிதியிலே  வெட்கப்படுவார்கள்.  (சங்கீதம்  6:10)

en  pagaignar  ellaarum  vedki  migavum  kalanggippoavaarga'l;  avarga'l  pinnaagath  thirumbich  sadithiyilea  vedkappaduvaarga'l.  (sanggeetham  6:10)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!