Wednesday, June 22, 2016

Sanggeetham 59 | சங்கீதம் 59 | Psalms 59

என்  தேவனே,  என்  சத்துருக்களுக்கு  என்னைத்  தப்புவியும்;  என்மேல்  எழும்புகிறவர்களுக்கு  என்னை  விலக்கி  உயர்ந்த  அடைக்கலத்திலே  வையும்.  (சங்கீதம்  59:1)

en  theavanea,  en  saththurukka'lukku  ennaith  thappuviyum;  enmeal  ezhumbugi’ravarga'lukku  ennai  vilakki  uyarntha  adaikkalaththilea  vaiyum.  (sanggeetham  59:1)

அக்கிரமக்காரருக்கு  என்னைத்  தப்புவித்து,  இரத்தப்பிரியரான  மனுஷருக்கு  என்னை  விலக்கி  இரட்சியும்.  (சங்கீதம்  59:2)

akkiramakkaararukku  ennaith  thappuviththu,  iraththappiriyaraana  manusharukku  ennai  vilakki  iradchiyum.  (sanggeetham  59:2)

இதோ,  என்  பிராணனுக்குப்  பதிவிருக்கிறார்கள்;  கர்த்தாவே,  என்னிடத்தில்  மீறுதலும்  பாவமும்  இல்லாதிருந்தும்,  பலவான்கள்  எனக்கு  விரோதமாய்க்  கூட்டங்கூடுகிறார்கள்.  (சங்கீதம்  59:3)

ithoa,  en  piraa'nanukkup  pathivirukki’raarga'l;  karththaavea,  ennidaththil  mee’ruthalum  paavamum  illaathirunthum,  balavaanga'l  enakku  viroathamaayk  koottangkoodugi’raarga'l.  (sanggeetham  59:3)

என்னிடத்தில்  அக்கிரமம்  இல்லாதிருந்தும்,  ஓடித்திரிந்து  யுத்தத்துக்கு  ஆயத்தமாகிறார்கள்;  எனக்குத்  துணைசெய்ய  விழித்து  என்னை  நோக்கிப்பாரும்.  (சங்கீதம்  59:4)

ennidaththil  akkiramam  illaathirunthum,  oadiththirinthu  yuththaththukku  aayaththamaagi’raarga'l;  enakkuth  thu'naiseyya  vizhiththu  ennai  noakkippaarum.  (sanggeetham  59:4)

சேனைகளின்  தேவனாகிய  கர்த்தாவே,  இஸ்ரவேலின்  தேவனே,  நீர்  சகல  ஜாதிகளையும்  விசாரிக்க  விழித்தெழும்பும்;  வஞ்சகமாய்த்  துரோகஞ்செய்கிற  ஒருவருக்கும்  தயை  செய்யாதேயும்.  (சேலா.)  (சங்கீதம்  59:5)

seanaiga'lin  theavanaagiya  karththaavea,  isravealin  theavanea,  neer  sagala  jaathiga'laiyum  visaarikka  vizhiththezhumbum;  vagnchagamaayth  thuroagagnseygi’ra  oruvarukkum  thayai  seyyaatheayum.  (sealaa.)  (sanggeetham  59:5)

அவர்கள்  சாயங்காலத்தில்  திரும்பிவந்து,  நாய்களைப்போல  ஊளையிட்டு,  ஊரைச்சுற்றித்  திரிகிறார்கள்.  (சங்கீதம்  59:6)

avarga'l  saayanggaalaththil  thirumbivanthu,  naayga'laippoala  oo'laiyittu,  ooraichsut’rith  thirigi’raarga'l.  (sanggeetham  59:6)

இதோ,  தங்கள்  வார்த்தைகளைக்  கக்குகிறார்கள்;  அவர்கள்  உதடுகளில்  பட்டயங்கள்  இருக்கிறது,  கேட்கிறவன்  யார்  என்கிறார்கள்.  (சங்கீதம்  59:7)

ithoa,  thangga'l  vaarththaiga'laik  kakkugi’raarga'l;  avarga'l  uthaduga'lil  pattayangga'l  irukki’rathu,  keadki’ravan  yaar  engi’raarga'l.  (sanggeetham  59:7)

ஆனாலும்  கர்த்தாவே,  நீர்  அவர்களைப்  பார்த்து  நகைப்பீர்;  புறஜாதிகள்  யாவரையும்  இகழுவீர்.  (சங்கீதம்  59:8)

aanaalum  karththaavea,  neer  avarga'laip  paarththu  nagaippeer;  pu’rajaathiga'l  yaavaraiyum  igazhuveer.  (sanggeetham  59:8)

அவன்  வல்லமையை  நான்  கண்டு,  உமக்குக்  காத்திருப்பேன்;  தேவனே  எனக்கு  உயர்ந்த  அடைக்கலம்.  (சங்கீதம்  59:9)

avan  vallamaiyai  naan  ka'ndu,  umakkuk  kaaththiruppean;  theavanea  enakku  uyarntha  adaikkalam.  (sanggeetham  59:9)

என்  தேவன்  தம்முடைய  கிருபையினால்  என்னைச்  சந்திப்பார்;  தேவன்  என்  சத்துருக்களுக்குவரும்  நீதிசரிக்கட்டுதலை  நான்  காணும்படி  செய்வார்.  (சங்கீதம்  59:10)

en  theavan  thammudaiya  kirubaiyinaal  ennaich  santhippaar;  theavan  en  saththurukka'lukkuvarum  neethisarikkattuthalai  naan  kaa'numpadi  seyvaar.  (sanggeetham  59:10)

அவர்களைக்  கொன்றுபோடாதேயும்,  என்  ஜனங்கள்  மறந்துபோவார்களே;  எங்கள்  கேடகமாகிய  ஆண்டவரே,  உமது  வல்லமையினால்  அவர்களைச்  சிதறடித்து,  அவர்களைத்  தாழ்த்திப்போடும்.  (சங்கீதம்  59:11)

avarga'laik  kon’rupoadaatheayum,  en  janangga'l  ma’ranthupoavaarga'lea;  engga'l  keadagamaagiya  aa'ndavarea,  umathu  vallamaiyinaal  avarga'laich  sitha’radiththu,  avarga'laith  thaazhththippoadum.  (sanggeetham  59:11)

அவர்கள்  உதடுகளின்  பேச்சு  அவர்கள்  வாயின்  பாவமாயிருக்கிறது;  அவர்கள்  இட்ட  சாபமும்  சொல்லிய  பொய்யும்  ஆகிய  இவைகளினிமித்தம்  தங்கள்  பெருமையில்  அகப்படுவார்களாக.  (சங்கீதம்  59:12)

avarga'l  uthaduga'lin  peachchu  avarga'l  vaayin  paavamaayirukki’rathu;  avarga'l  itta  saabamum  solliya  poyyum  aagiya  ivaiga'linimiththam  thangga'l  perumaiyil  agappaduvaarga'laaga.  (sanggeetham  59:12)

தேவன்  பூமியின்  எல்லைவரைக்கும்  யாக்கோபிலே  அரசாளுகிறவர்  என்று  அவர்கள்  அறியும்பொருட்டு,  அவர்களை  உம்முடைய  உக்கிரத்திலே  நிர்மூலமாக்கும்;  இனி  இராதபடிக்கு  அவர்களை  நிர்மூலமாக்கும்.  (சேலா.)  (சங்கீதம்  59:13)

theavan  boomiyin  ellaivaraikkum  yaakkoabilea  arasaa'lugi’ravar  en’ru  avarga'l  a’riyumporuttu,  avarga'lai  ummudaiya  ukkiraththilea  nirmoolamaakkum;  ini  iraathapadikku  avarga'lai  nirmoolamaakkum.  (sealaa.)  (sanggeetham  59:13)

அவர்கள்  சாயங்காலத்தில்  திரும்பிவந்து,  நாய்களைப்போல  ஊளையிட்டு,  ஊரைச்சுற்றித்  திரிகிறார்கள்.  (சங்கீதம்  59:14)

avarga'l  saayanggaalaththil  thirumbivanthu,  naayga'laippoala  oo'laiyittu,  ooraichsut’rith  thirigi’raarga'l.  (sanggeetham  59:14)

அவர்கள்  உணவுக்காக  அலைந்து  திரிந்து  திருப்தியடையாமல்,  முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள்.  (சங்கீதம்  59:15)

avarga'l  u'navukkaaga  alainthu  thirinthu  thirupthiyadaiyaamal,  mu’rumu’ruththukko'ndiruppaarga'l.  (sanggeetham  59:15)

நானோ  உம்முடைய  வல்லமையைப்  பாடி,  காலையிலே  உம்முடைய  கிருபையை  மகிழ்ச்சியோடு  புகழுவேன்;  எனக்கு  நெருக்கமுண்டான  நாளிலே  நீர்  எனக்குத்  தஞ்சமும்  உயர்ந்த  அடைக்கலமுமானீர்.  (சங்கீதம்  59:16)

naanoa  ummudaiya  vallamaiyaip  paadi,  kaalaiyilea  ummudaiya  kirubaiyai  magizhchchiyoadu  pugazhuvean;  enakku  nerukkamu'ndaana  naa'lilea  neer  enakkuth  thagnchamum  uyarntha  adaikkalamumaaneer.  (sanggeetham  59:16)

என்  பெலனே,  உம்மைக்  கீர்த்தனம்பண்ணுவேன்;  தேவன்  எனக்கு  உயர்ந்த  அடைக்கலமும்,  கிருபையுள்ள  என்  தேவனுமாயிருக்கிறார்.  (சங்கீதம்  59:17)

en  belanea,  ummaik  keerththanampa'n'nuvean;  theavan  enakku  uyarntha  adaikkalamum,  kirubaiyu'l'la  en  theavanumaayirukki’raar.  (sanggeetham  59:17)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!