Wednesday, June 22, 2016

Sanggeetham 58 | சங்கீதம் 58 | Psalms 58

மவுனமாயிருக்கிறவர்களே,  நீங்கள்  மெய்யாய்  நீதியைப்  பேசுவீர்களோ?  மனுபுத்திரரே,  நியாயமாய்த்  தீர்ப்புசெய்வீர்களோ?  (சங்கீதம்  58:1)

mavunamaayirukki’ravarga'lea,  neengga'l  meyyaay  neethiyaip  peasuveerga'loa?  manupuththirarea,  niyaayamaayth  theerppuseyveerga'loa?  (sanggeetham  58:1)

மனதார  நியாயக்கேடு  செய்கிறீர்கள்;  பூமியிலே  உங்கள்  கைகளின்  கொடுமையை  நிறுத்துக்  கொடுக்கிறீர்கள்.  (சங்கீதம்  58:2)

manathaara  niyaayakkeadu  seygi’reerga'l;  boomiyilea  ungga'l  kaiga'lin  kodumaiyai  ni’ruththuk  kodukki’reerga'l.  (sanggeetham  58:2)

துன்மார்க்கர்  கர்ப்பத்தில்  உற்பவித்ததுமுதல்  பேதலிக்கிறார்கள்;  தாயின்  வயிற்றிலிருந்து  பிறந்ததுமுதல்  பொய்  சொல்லி  வழிதப்பிப்  போகிறார்கள்.  (சங்கீதம்  58:3)

thunmaarkkar  karppaththil  u’rpaviththathumuthal  peathalikki’raarga'l;  thaayin  vayit’rilirunthu  pi’ranthathumuthal  poy  solli  vazhithappip  poagi’raarga'l.  (sanggeetham  58:3)

சர்ப்பத்தின்  விஷத்திற்கு  ஒப்பான  விஷம்  அவர்களில்  இருக்கிறது.  (சங்கீதம்  58:4)

sarppaththin  vishaththi’rku  oppaana  visham  avarga'lil  irukki’rathu.  (sanggeetham  58:4)

பாம்பாட்டிகள்  விநோதமாய்  ஊதினாலும்  அவர்கள்  ஊதும்  சத்தத்திற்குச்  செவிகொடாதபடிக்குத்  தன்  காதை  அடைக்கிற  செவிட்டு  விரியனைப்போல்  இருக்கிறார்கள்.  (சங்கீதம்  58:5)

paambaattiga'l  vinoathamaay  oothinaalum  avarga'l  oothum  saththaththi’rkuch  sevikodaathapadikkuth  than  kaathai  adaikki’ra  sevittu  viriyanaippoal  irukki’raarga'l.  (sanggeetham  58:5)

தேவனே,  அவர்கள்  வாயிலுள்ள  பற்களைத்  தகர்த்துப்போடும்;  கர்த்தாவே,  பாலசிங்கங்களின்  கடைவாய்ப்பற்களை  நொறுக்கிப்போடும்.  (சங்கீதம்  58:6)

theavanea,  avarga'l  vaayilu'l'la  pa’rka'laith  thagarththuppoadum;  karththaavea,  baalasinggangga'lin  kadaivaayppa’rka'lai  no’rukkippoadum.  (sanggeetham  58:6)

கடந்தோடுகிற  தண்ணீரைப்போல்  அவர்கள்  கழிந்துபோகட்டும்;  அவன்  தன்  அம்புகளைத்  தொடுக்கும்போது  அவைகள்  சின்னபின்னமாய்ப்  போகக்கடவது.  (சங்கீதம்  58:7)

kadanthoadugi’ra  tha'n'neeraippoal  avarga'l  kazhinthupoagattum;  avan  than  ambuga'laith  thodukkumpoathu  avaiga'l  sinnapinnamaayp  poagakkadavathu.  (sanggeetham  58:7)

கரைந்துபோகிற  நத்தையைப்போல்  ஒழிந்துபோவார்களாக;  ஸ்திரீயின்  முதிராப்  பிண்டத்தைப்போல்  சூரியனைக்  காணாதிருப்பார்களாக.  (சங்கீதம்  58:8)

karainthupoagi’ra  naththaiyaippoal  ozhinthupoavaarga'laaga;  sthireeyin  muthiraap  pi'ndaththaippoal  sooriyanaik  kaa'naathiruppaarga'laaga.  (sanggeetham  58:8)

முள்  நெருப்பினால்  உங்கள்  பானைகளில்  சூடேறுமுன்னே  பச்சையானதையும்  எரிந்துபோனதையும்  அவர்  சுழல்காற்றினால்  அடித்துக்கொண்டுபோவார்.  (சங்கீதம்  58:9)

mu'l  neruppinaal  ungga'l  paanaiga'lil  soodea’rumunnea  pachchaiyaanathaiyum  erinthupoanathaiyum  avar  suzhalkaat’rinaal  adiththukko'ndupoavaar.  (sanggeetham  58:9)

பழிவாங்குதலை  நீதிமான்  காணும்போது  மகிழுவான்;  அவன்  தன்  பாதங்களைத்  துன்மார்க்கனுடைய  இரத்தத்திலே  கழுவுவான்.  (சங்கீதம்  58:10)

pazhivaangguthalai  neethimaan  kaa'numpoathu  magizhuvaan;  avan  than  paathangga'laith  thunmaarkkanudaiya  iraththaththilea  kazhuvuvaan.  (sanggeetham  58:10)

அப்பொழுது,  மெய்யாய்  நீதிமானுக்குப்  பலன்  உண்டென்றும்,  மெய்யாய்  பூமியிலே  நியாயஞ்செய்கிற  தேவன்  உண்டென்றும்  மனுஷன்  சொல்லுவான்.  (சங்கீதம்  58:11)

appozhuthu,  meyyaay  neethimaanukkup  palan  u'nden’rum,  meyyaay  boomiyilea  niyaayagnseygi’ra  theavan  u'nden’rum  manushan  solluvaan.  (sanggeetham  58:11)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!