Wednesday, June 22, 2016

Sanggeetham 56 | சங்கீதம் 56 | Psalms 56

தேவனே,  எனக்கு  இரங்கும்;  மனுஷன்  என்னை  விழுங்கப்பார்க்கிறான்;  நாள்தோறும்  போர்செய்து,  என்னை  ஒடுக்குகிறான்.  (சங்கீதம்  56:1)

theavanea,  enakku  iranggum;  manushan  ennai  vizhunggappaarkki’raan;  naa'lthoa’rum  poarseythu,  ennai  odukkugi’raan.  (sanggeetham  56:1)

என்  சத்துருக்கள்  நாள்தோறும்  என்னை  விழுங்கப்பார்க்கிறார்கள்;  உன்னதமானவரே,  எனக்கு  விரோதமாய்  அகங்கரித்துப்  போர்செய்கிறவர்கள்  அநேகர்.  (சங்கீதம்  56:2)

en  saththurukka'l  naa'lthoa’rum  ennai  vizhunggappaarkki’raarga'l;  unnathamaanavarea,  enakku  viroathamaay  aganggariththup  poarseygi’ravarga'l  aneagar.  (sanggeetham  56:2)

நான்  பயப்படுகிற  நாளில்  உம்மை  நம்புவேன்.  (சங்கீதம்  56:3)

naan  bayappadugi’ra  naa'lil  ummai  nambuvean.  (sanggeetham  56:3)

தேவனை  முன்னிட்டு  அவருடைய  வார்த்தையைப்  புகழுவேன்;  தேவனை  நம்பியிருக்கிறேன்,  நான்  பயப்படேன்;  மாம்சமானவன்  எனக்கு  என்ன  செய்வான்?  (சங்கீதம்  56:4)

theavanai  munnittu  avarudaiya  vaarththaiyaip  pugazhuvean;  theavanai  nambiyirukki’rean,  naan  bayappadean;  maamsamaanavan  enakku  enna  seyvaan?  (sanggeetham  56:4)

நித்தமும்  என்  வார்த்தைகளைப்  புரட்டுகிறார்கள்;  எனக்குத்  தீங்குசெய்வதே  அவர்கள்  முழு  எண்ணமாயிருக்கிறது.  (சங்கீதம்  56:5)

niththamum  en  vaarththaiga'laip  purattugi’raarga'l;  enakkuth  theengguseyvathea  avarga'l  muzhu  e'n'namaayirukki’rathu.  (sanggeetham  56:5)

அவர்கள்  ஏகமாய்க்  கூடி,  பதிவிருக்கிறார்கள்;  என்  பிராணனை  வாங்க  விரும்பி,  என்  காலடிகளைத்  தொடர்ந்துவருகிறார்கள்.  (சங்கீதம்  56:6)

avarga'l  eagamaayk  koodi,  pathivirukki’raarga'l;  en  piraa'nanai  vaangga  virumbi,  en  kaaladiga'laith  thodarnthuvarugi’raarga'l.  (sanggeetham  56:6)

அவர்கள்  தங்கள்  அக்கிரமத்தினால்  தப்புவார்களோ?  தேவனே,  கோபங்கொண்டு  ஜனங்களைக்  கீழே  தள்ளும்.  (சங்கீதம்  56:7)

avarga'l  thangga'l  akkiramaththinaal  thappuvaarga'loa?  theavanea,  koabangko'ndu  janangga'laik  keezhea  tha'l'lum.  (sanggeetham  56:7)

என்  அலைச்சல்களைத்  தேவரீர்  எண்ணியிருக்கிறீர்;  என்  கண்ணீரை  உம்முடைய  துருத்தியில்  வையும்;  அவைகள்  உம்முடைய  கணக்கில்  அல்லவோ  இருக்கிறது?  (சங்கீதம்  56:8)

en  alaichchalga'laith  theavareer  e'n'niyirukki’reer;  en  ka'n'neerai  ummudaiya  thuruththiyil  vaiyum;  avaiga'l  ummudaiya  ka'nakkil  allavoa  irukki’rathu?  (sanggeetham  56:8)

நான்  உம்மை  நோக்கிக்  கூப்பிடும்  நாளில்  என்  சத்துருக்கள்  பின்னிட்டுத்  திரும்புவார்கள்;  தேவன்  என்  பட்சத்தில்  இருக்கிறார்  என்பதை  அறிவேன்.  (சங்கீதம்  56:9)

naan  ummai  noakkik  kooppidum  naa'lil  en  saththurukka'l  pinnittuth  thirumbuvaarga'l;  theavan  en  padchaththil  irukki’raar  enbathai  a’rivean.  (sanggeetham  56:9)

தேவனை  முன்னிட்டு  அவருடைய  வார்த்தையைப்  புகழுவேன்;  கர்த்தரை  முன்னிட்டு  அவருடைய  வார்த்தையைப்  புகழுவேன்.  (சங்கீதம்  56:10)

theavanai  munnittu  avarudaiya  vaarththaiyaip  pugazhuvean;  karththarai  munnittu  avarudaiya  vaarththaiyaip  pugazhuvean.  (sanggeetham  56:10)

தேவனை  நம்பியிருக்கிறேன்,  நான்  பயப்படேன்;  மனுஷன்  எனக்கு  என்னசெய்வான்?  (சங்கீதம்  56:11)

theavanai  nambiyirukki’rean,  naan  bayappadean;  manushan  enakku  ennaseyvaan?  (sanggeetham  56:11)

தேவனே,  நான்  உமக்குப்  பண்ணின  பொருத்தனைகள்  என்மேல்  இருக்கிறது;  உமக்கு  ஸ்தோத்திரங்களைச்  செலுத்துவேன்.  (சங்கீதம்  56:12)

theavanea,  naan  umakkup  pa'n'nina  poruththanaiga'l  enmeal  irukki’rathu;  umakku  sthoaththirangga'laich  seluththuvean.  (sanggeetham  56:12)

நான்  தேவனுக்கு  முன்பாக  ஜீவனுள்ளோருடைய  வெளிச்சத்திலே  நடக்கும்படி,  நீர்  என்  ஆத்துமாவை  மரணத்துக்கும்  என்  கால்களை  இடறலுக்கும்  தப்புவியாதிருப்பீரோ?  (சங்கீதம்  56:13)

naan  theavanukku  munbaaga  jeevanu'l'loarudaiya  ve'lichchaththilea  nadakkumpadi,  neer  en  aaththumaavai  mara'naththukkum  en  kaalga'lai  ida’ralukkum  thappuviyaathiruppeeroa?  (sanggeetham  56:13)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!