Wednesday, June 22, 2016

Sanggeetham 55 | சங்கீதம் 55 | Psalms 55

தேவனே,  என்  ஜெபத்தைக்  கேட்டருளும்;  என்  விண்ணப்பத்திற்கு  மறைந்திராதேயும்.  (சங்கீதம்  55:1)

theavanea,  en  jebaththaik  keattaru'lum;  en  vi'n'nappaththi’rku  ma’rainthiraatheayum.  (sanggeetham  55:1)

எனக்குச்  செவிகொடுத்து,  உத்தரவு  அருளிச்செய்யும்;  சத்துருவினுடைய  கூக்குரலினிமித்தமும்,  துன்மார்க்கர்  செய்யும்  இடுக்கத்தினிமித்தமும்  என்  தியானத்தில்  முறையிடுகிறேன்.  (சங்கீதம்  55:2)

enakkuch  sevikoduththu,  uththaravu  aru'lichseyyum;  saththuruvinudaiya  kookkuralinimiththamum,  thunmaarkkar  seyyum  idukkaththinimiththamum  en  thiyaanaththil  mu’raiyidugi’rean.  (sanggeetham  55:2)

அவர்கள்  என்மேல்  பழிசாட்டி,  குரோதங்கொண்டு,  என்னைப்  பகைக்கிறார்கள்.  (சங்கீதம்  55:3)

avarga'l  enmeal  pazhisaatti,  kuroathangko'ndu,  ennaip  pagaikki’raarga'l.  (sanggeetham  55:3)

என்  இருதயம்  எனக்குள்  வியாகுலப்படுகிறது;  மரணத்திகில்  என்மேல்  விழுந்தது.  (சங்கீதம்  55:4)

en  iruthayam  enakku'l  viyaagulappadugi’rathu;  mara'naththigil  enmeal  vizhunthathu.  (sanggeetham  55:4)

பயமும்  நடுக்கமும்  என்னைப்  பிடித்தது;  அருக்களிப்பு  என்னை  மூடிற்று.  (சங்கீதம்  55:5)

bayamum  nadukkamum  ennaip  pidiththathu;  arukka'lippu  ennai  moodit’ru.  (sanggeetham  55:5)

அப்பொழுது  நான்:  ஆ,  எனக்குப்  புறாவைப்போல்  சிறகுகள்  இருந்தால்,  நான்  பறந்துபோய்  இளைப்பாறுவேன்.  (சங்கீதம்  55:6)

appozhuthu  naan:  aa,  enakkup  pu’raavaippoal  si’raguga'l  irunthaal,  naan  pa’ranthupoay  i'laippaa’ruvean.  (sanggeetham  55:6)

நான்  தூரத்தில்  அலைந்து  திரிந்து  வனாந்தரத்தில்  தங்கியிருப்பேன்.  (சேலா.)  (சங்கீதம்  55:7)

naan  thooraththil  alainthu  thirinthu  vanaantharaththil  thanggiyiruppean.  (sealaa.)  (sanggeetham  55:7)

பெருங்காற்றுக்கும்  புசலுக்கும்  தப்பத்  தீவிரித்துக்கொள்ளுவேன்  என்றேன்.  (சங்கீதம்  55:8)

perungkaat’rukkum  pusalukkum  thappath  theeviriththukko'l'luvean  en’rean.  (sanggeetham  55:8)

ஆண்டவரே,  அவர்களை  அழித்து,  அவர்கள்  பாஷையைப்  பிரிந்துபோகப்பண்ணும்;  கொடுமையையும்  சண்டையையும்  நகரத்திலே  கண்டேன்;  (சங்கீதம்  55:9)

aa'ndavarea,  avarga'lai  azhiththu,  avarga'l  baashaiyaip  pirinthupoagappa'n'num;  kodumaiyaiyum  sa'ndaiyaiyum  nagaraththilea  ka'ndean;  (sanggeetham  55:9)

அவைகள்  இரவும்  பகலும்  அதின்  மதில்கள்மேல்  சுற்றித்திரிகிறது;  அக்கிரமமும்  வாதையும்  அதின்  நடுவில்  இருக்கிறது;  (சங்கீதம்  55:10)

avaiga'l  iravum  pagalum  athin  mathilga'lmeal  sut’riththirigi’rathu;  akkiramamum  vaathaiyum  athin  naduvil  irukki’rathu;  (sanggeetham  55:10)

கேடுபாடுகள்  அதின்  நடுவில்  இருக்கிறது;  கொடுமையும்  கபடும்  அதின்  வீதியை  விட்டு  விலகிப்போகிறதில்லை.  (சங்கீதம்  55:11)

keadupaaduga'l  athin  naduvil  irukki’rathu;  kodumaiyum  kabadum  athin  veethiyai  vittu  vilagippoagi’rathillai.  (sanggeetham  55:11)

என்னை  நிந்தித்தவன்  சத்துரு  அல்ல,  அப்படியிருந்தால்  சகிப்பேன்;  எனக்கு  விரோதமாய்ப்  பெருமைபாராட்டினவன்  என்  பகைஞன்  அல்ல,  அப்படியிருந்தால்  அவனுக்கு  மறைந்திருப்பேன்.  (சங்கீதம்  55:12)

ennai  ninthiththavan  saththuru  alla,  appadiyirunthaal  sagippean;  enakku  viroathamaayp  perumaipaaraattinavan  en  pagaignan  alla,  appadiyirunthaal  avanukku  ma’rainthiruppean.  (sanggeetham  55:12)

எனக்குச்  சமமான  மனுஷனும்,  என்  வழிகாட்டியும்,  என்  தோழனுமாகிய  நீயே  அவன்.  (சங்கீதம்  55:13)

enakkuch  samamaana  manushanum,  en  vazhikaattiyum,  en  thoazhanumaagiya  neeyea  avan.  (sanggeetham  55:13)

நாம்  ஒருமித்து,  இன்பமான  ஆலோசனைபண்ணி,  கூட்டத்தோடே  தேவாலயத்துக்குப்  போனோம்.  (சங்கீதம்  55:14)

naam  orumiththu,  inbamaana  aaloasanaipa'n'ni,  koottaththoadea  theavaalayaththukkup  poanoam.  (sanggeetham  55:14)

மரணம்  அவர்களைத்  தொடர்ந்து  பிடிப்பதாக;  அவர்கள்  உயிரோடே  பாதாளத்தில்  இறங்குவார்களாக;  அவர்கள்  வாசஸ்தலங்களிலும்  அவர்கள்  உள்ளத்திலும்  பொல்லாங்கு  இருக்கிறது.  (சங்கீதம்  55:15)

mara'nam  avarga'laith  thodarnthu  pidippathaaga;  avarga'l  uyiroadea  paathaa'laththil  i’rangguvaarga'laaga;  avarga'l  vaasasthalangga'lilum  avarga'l  u'l'laththilum  pollaanggu  irukki’rathu.  (sanggeetham  55:15)

நானோ  தேவனை  நோக்கிக்  கூப்பிடுவேன்;  கர்த்தர்  என்னை  இரட்சிப்பார்.  (சங்கீதம்  55:16)

naanoa  theavanai  noakkik  kooppiduvean;  karththar  ennai  iradchippaar.  (sanggeetham  55:16)

அந்திசந்தி  மத்தியான  வேளைகளிலும்  நான்  தியானம்பண்ணி  முறையிடுவேன்;  அவர்  என்  சத்தத்தைக்  கேட்பார்.  (சங்கீதம்  55:17)

anthisanthi  maththiyaana  vea'laiga'lilum  naan  thiyaanampa'n'ni  mu’raiyiduvean;  avar  en  saththaththaik  keadpaar.  (sanggeetham  55:17)

திரளான  கூட்டமாய்க்  கூடி  என்னோடு  எதிர்த்தார்கள்;  அவரோ  எனக்கு  நேரிட்ட  போரை  நீக்கி,  என்  ஆத்துமாவைச்  சமாதானத்துடன்  மீட்டுவிட்டார்.  (சங்கீதம்  55:18)

thira'laana  koottamaayk  koodi  ennoadu  ethirththaarga'l;  avaroa  enakku  nearitta  poarai  neekki,  en  aaththumaavaich  samaathaanaththudan  meettuvittaar.  (sanggeetham  55:18)

ஆதிமுதலாய்  வீற்றிருக்கிற  தேவன்  கேட்டு,  அவர்களுக்குப்  பதிலளிப்பார்;  அவர்களுக்கு  மாறுதல்கள்  நேரிடாததினால்,  அவர்கள்  தேவனுக்குப்  பயப்படாமற்போகிறார்கள்.  (சேலா.)  (சங்கீதம்  55:19)

aathimuthalaay  veet’rirukki’ra  theavan  keattu,  avarga'lukkup  bathila'lippaar;  avarga'lukku  maa’ruthalga'l  nearidaathathinaal,  avarga'l  theavanukkup  bayappadaama’rpoagi’raarga'l.  (sealaa.)  (sanggeetham  55:19)

அவன்  தன்னோடே  சமாதானமாயிருந்தவர்களுக்கு  விரோதமாய்  தன்  கையை  நீட்டி,  தன்  உடன்படிக்கையை  மீறி  நடந்தான்.  (சங்கீதம்  55:20)

avan  thannoadea  samaathaanamaayirunthavarga'lukku  viroathamaay  than  kaiyai  neetti,  than  udanpadikkaiyai  mee’ri  nadanthaan.  (sanggeetham  55:20)

அவன்  வாயின்  சொற்கள்  வெண்ணெயைப்போல  மெதுவானவைகள்,  அவன்  இருதயமோ  யுத்தம்;  அவன்  வார்த்தைகள்  எண்ணெயிலும்  மிருதுவானவைகள்,  ஆனாலும்  அவைகள்  உருவின  பட்டயங்கள்.  (சங்கீதம்  55:21)

avan  vaayin  so’rka'l  ve'n'neyaippoala  methuvaanavaiga'l,  avan  iruthayamoa  yuththam;  avan  vaarththaiga'l  e'n'neyilum  miruthuvaanavaiga'l,  aanaalum  avaiga'l  uruvina  pattayangga'l.  (sanggeetham  55:21)

கர்த்தர்மேல்  உன்  பாரத்தை  வைத்துவிடு,  அவர்  உன்னை  ஆதரிப்பார்;  நீதிமானை  ஒருபோதும்  தள்ளாடவொட்டார்.  (சங்கீதம்  55:22)

karththarmeal  un  baaraththai  vaiththuvidu,  avar  unnai  aatharippaar;  neethimaanai  orupoathum  tha'l'laadavottaar.  (sanggeetham  55:22)

தேவனே,  நீர்  அவர்களை  அழிவின்  குழியில்  இறங்கப்பண்ணுவீர்;  இரத்தப்பிரியரும்  சூதுள்ள  மனுஷரும்  தங்கள்  ஆயுளின்  நாட்களில்  பாதிவரையிலாகிலும்  பிழைத்திருக்கமாட்டார்கள்;  நானோ  உம்மை  நம்பியிருக்கிறேன்.  (சங்கீதம்  55:23)

theavanea,  neer  avarga'lai  azhivin  kuzhiyil  i’ranggappa'n'nuveer;  iraththappiriyarum  soothu'l'la  manusharum  thangga'l  aayu'lin  naadka'lil  paathivaraiyilaagilum  pizhaiththirukkamaattaarga'l;  naanoa  ummai  nambiyirukki’rean.  (sanggeetham  55:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!