Wednesday, June 22, 2016

Sanggeetham 53 | சங்கீதம் 53 | Psalms 53

தேவன்  இல்லை  என்று  மதிகேடன்  தன்  இருதயத்தில்  சொல்லிக்கொள்ளுகிறான்;  அவர்கள்  தங்களைக்  கெடுத்து,  அருவருப்பான  அக்கிரமங்களைச்  செய்துவருகிறார்கள்;  நன்மைசெய்கிறவன்  ஒருவனும்  இல்லை.  (சங்கீதம்  53:1)

theavan  illai  en’ru  mathikeadan  than  iruthayaththil  sollikko'l'lugi’raan;  avarga'l  thangga'laik  keduththu,  aruvaruppaana  akkiramangga'laich  seythuvarugi’raarga'l;  nanmaiseygi’ravan  oruvanum  illai.  (sanggeetham  53:1)

தேவனைத்  தேடுகிற  உணர்வுள்ளவன்  உண்டோ  என்று  பார்க்க,  தேவன்  பரலோகத்திலிருந்து  மனுபுத்திரரைக்  கண்ணோக்கினார்.  (சங்கீதம்  53:2)

theavanaith  theadugi’ra  u'narvu'l'lavan  u'ndoa  en’ru  paarkka,  theavan  paraloagaththilirunthu  manupuththiraraik  ka'n'noakkinaar.  (sanggeetham  53:2)

அவர்கள்  எல்லாரும்  வழிவிலகி,  ஏகமாய்க்  கெட்டுப்போனார்கள்;  நன்மைசெய்கிறவன்  இல்லை,  ஒருவனாகிலும்  இல்லை.  (சங்கீதம்  53:3)

avarga'l  ellaarum  vazhivilagi,  eagamaayk  kettuppoanaarga'l;  nanmaiseygi’ravan  illai,  oruvanaagilum  illai.  (sanggeetham  53:3)

அக்கிரமக்காரருக்கு  அறிவு  இல்லையா?  அப்பத்தைப்  பட்சிக்கிறதுபோல்  என்  ஜனத்தைப்  பட்சிக்கிறார்களே;  அவர்கள்  தேவனைத்  தொழுதுகொள்ளுகிறதில்லை.  (சங்கீதம்  53:4)

akkiramakkaararukku  a’rivu  illaiyaa?  appaththaip  padchikki’rathupoal  en  janaththaip  padchikki’raarga'lea;  avarga'l  theavanaith  thozhuthuko'l'lugi’rathillai.  (sanggeetham  53:4)

உனக்கு  விரோதமாய்ப்  பாளயமிறங்கினவனுடைய  எலும்புகளைத்  தேவன்  சிதறப்பண்ணினபடியால்,  பயமில்லாத  இடத்தில்  மிகவும்  பயந்தார்கள்;  தேவன்  அவர்களை  வெறுத்தபடியினால்  நீ  அவர்களை  வெட்கப்படுத்தினாய்.  (சங்கீதம்  53:5)

unakku  viroathamaayp  paa'layami’rangginavanudaiya  elumbuga'laith  theavan  sitha’rappa'n'ninapadiyaal,  bayamillaatha  idaththil  migavum  bayanthaarga'l;  theavan  avarga'lai  ve’ruththapadiyinaal  nee  avarga'lai  vedkappaduththinaay.  (sanggeetham  53:5)

சீயோனிலிருந்து  இஸ்ரவேலுக்கு  இரட்சிப்பு  வருவதாக;  தேவன்  தம்முடைய  ஜனத்தின்  சிறையிருப்பைத்  திருப்பும்போது,  யாக்கோபுக்குக்  களிப்பும்  இஸ்ரவேலுக்கு  மகிழ்ச்சியும்  உண்டாகும்.  (சங்கீதம்  53:6)

seeyoanilirunthu  isravealukku  iradchippu  varuvathaaga;  theavan  thammudaiya  janaththin  si’raiyiruppaith  thiruppumpoathu,  yaakkoabukkuk  ka'lippum  isravealukku  magizhchchiyum  u'ndaagum.  (sanggeetham  53:6)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!