கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும்,
என் தியானத்தைக் கவனியும்.
(சங்கீதம் 5:1)
karththaavea, en vaarththaiga'lukkuch sevikodum, en thiyaanaththaik kavaniyum.
(sanggeetham 5:1)
நான்
உம்மிடத்தில் விண்ணப்பம்பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக்
கேட்டருளும். (சங்கீதம் 5:2)
naan ummidaththil vi'n'nappampa'n'nuvean; en raajaavea, en theavanea, en vea'nduthalin saththaththaik keattaru'lum. (sanggeetham
5:2)
கர்த்தாவே, காலையிலே
என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே
உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன். (சங்கீதம்
5:3)
karththaavea, kaalaiyilea en saththaththaik keattaru'luveer; kaalaiyilea umakku
nearea vanthu aayaththamaagi, kaaththiruppean. (sanggeetham
5:3)
நீர்
துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை.
(சங்கீதம் 5:4)
neer thunmaarkkaththil piriyappadugi’ra theavan
alla; theemai ummidaththil
searvathillai. (sanggeetham
5:4)
வீம்புக்காரர் உம்முடைய
கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும்
வெறுக்கிறீர். (சங்கீதம் 5:5)
veembukkaarar ummudaiya
ka'nga'lukku munbaaga nilaini’rkamaattaarga'l; akkiramakkaarar yaavaraiyum
ve’rukki’reer. (sanggeetham
5:5)
பொய்
பேசுகிறவர்களை அழிப்பீர்; இரத்தப்பிரியனையும் சூதுள்ள
மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார். (சங்கீதம்
5:6)
poy peasugi’ravarga'lai azhippeer; iraththappiriyanaiyum soothu'l'la manushanaiyum
karththar aruvarukki’raar.
(sanggeetham 5:6)
நானோ
உமது மிகுந்த கிருபையினாலே
உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து,
உமது பரிசுத்த சந்நிதிக்கு
நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன். (சங்கீதம்
5:7)
naanoa umathu miguntha kirubaiyinaalea umathu
aalayaththukku'l piraveasiththu, umathu parisuththa sannithikku nearea
bayabakthiyudan pa'ninthuko'l'luvean. (sanggeetham
5:7)
கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே
நடத்தி, எனக்குமுன்பாக உம்முடைய
வழியைச் செவ்வைப்படுத்தும். (சங்கீதம்
5:8)
karththaavea, en saththurukka'linimiththam ennai ummudaiya neethiyilea
nadaththi, enakkumunbaaga ummudaiya vazhiyaich sevvaippaduththum. (sanggeetham
5:8)
அவர்கள் வாயில்
உண்மை இல்லை, அவர்கள்
உள்ளம் கேடுபாடுள்ளது; அவர்கள்
தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி;
தங்கள் நாவினால் இச்சகம்
பேசுகிறார்கள். (சங்கீதம் 5:9)
avarga'l
vaayil u'nmai illai,
avarga'l
u'l'lam keadupaadu'l'lathu; avarga'l tho'ndai
thi’rakkappatta pireathakkuzhi; thangga'l naavinaal
ichchagam
peasugi’raarga'l. (sanggeetham
5:9)
தேவனே,
அவர்களைக் குற்றவாளிகளாகத் தீரும்;
அவர்கள் தங்கள் ஆலோசனைகளாலேயே
விழும்படி செய்யும்; அவர்கள்
துரோகங்களினுடைய திரட்சியினிமித்தம் அவர்களைத்
தள்ளிவிடும்; உமக்கு விரோதமாய்க்
கலகம்பண்ணினார்களே. (சங்கீதம் 5:10)
theavanea, avarga'laik kut’ravaa'liga'laagath theerum; avarga'l thangga'l aaloasanaiga'laaleayea vizhumpadi seyyum; avarga'l thuroagangga'linudaiya thiradchiyinimiththam
avarga'laith tha'l'lividum; umakku
viroathamaayk kalagampa'n'ninaarga'lea. (sanggeetham
5:10)
உம்மை
நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து,
எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய
நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில்
களிகூருவார்களாக. (சங்கீதம் 5:11)
ummai nambugi’ravarga'l yaavarum
santhoashiththu, ennaa'lum
kembeerippaarga'laaga; neer avarga'laik kaappaat’ruveer; ummudaiya
naamaththai neasikki’ravarga'l ummil ka'likooruvaarga'laaga.
(sanggeetham 5:11)
கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து,
காருணியம் என்னுங் கேடகத்தினால்
அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர். (சங்கீதம்
5:12)
karththaavea, neer neethimaanai
aaseervathiththu, kaaru'niyam
ennung keadagaththinaal avanaich soozhnthuko'l'luveer.
(sanggeetham 5:12)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!