Wednesday, June 15, 2016

Sanggeetham 46 | சங்கீதம் 46 | Psalms 46

தேவன்  நமக்கு  அடைக்கலமும்  பெலனும்,  ஆபத்துக்காலத்தில்  அநுகூலமான  துணையுமானவர்.  (சங்கீதம்  46:1)

theavan  namakku  adaikkalamum  belanum,  aabaththukkaalaththil  anugoolamaana  thu'naiyumaanavar.  (sanggeetham  46:1)

ஆகையால்  பூமி  நிலைமாறினாலும்,  மலைகள்  நடுச்சமுத்திரத்தில்  சாய்ந்துபோனாலும்,  (சங்கீதம்  46:2)

aagaiyaal  boomi  nilaimaa’rinaalum,  malaiga'l  naduchsamuththiraththil  saaynthupoanaalum,  (sanggeetham  46:2)

அதின்  ஜலங்கள்  கொந்தளித்துப்  பொங்கி,  அதின்  பெருக்கினால்  பர்வதங்கள்  அதிர்ந்தாலும்,  நாம்  பயப்படோம்.  (சேலா.)  (சங்கீதம்  46:3)

athin  jalangga'l  kontha'liththup  ponggi,  athin  perukkinaal  parvathangga'l  athirnthaalum,  naam  bayappadoam.  (sealaa.)  (sanggeetham  46:3)

ஒரு  நதியுண்டு,  அதின்  நீர்க்கால்கள்  தேவனுடைய  நகரத்தையும்,  உன்னதமானவர்  வாசம்பண்ணும்  பரிசுத்த  ஸ்தலத்தையும்  சந்தோஷிப்பிக்கும்.  (சங்கீதம்  46:4)

oru  nathiyu'ndu,  athin  neerkkaalga'l  theavanudaiya  nagaraththaiyum,  unnathamaanavar  vaasampa'n'num  parisuththa  sthalaththaiyum  santhoashippikkum.  (sanggeetham  46:4)

தேவன்  அதின்  நடுவில்  இருக்கிறார்,  அது  அசையாது;  அதிகாலையிலே  தேவன்  அதற்குச்  சகாயம்பண்ணுவார்.  (சங்கீதம்  46:5)

theavan  athin  naduvil  irukki’raar,  athu  asaiyaathu;  athikaalaiyilea  theavan  atha’rkuch  sagaayampa'n'nuvaar.  (sanggeetham  46:5)

ஜாதிகள்  கொந்தளித்தது,  ராஜ்யங்கள்  தத்தளித்தது;  அவர்  தமது  சத்தத்தை  முழங்கப்பண்ணினார்,  பூமி  உருகிப்போயிற்று.  (சங்கீதம்  46:6)

jaathiga'l  kontha'liththathu,  raajyangga'l  thaththa'liththathu;  avar  thamathu  saththaththai  muzhanggappa'n'ninaar,  boomi  urugippoayit’ru.  (sanggeetham  46:6)

சேனைகளின்  கர்த்தர்  நம்மோடிருக்கிறார்;  யாக்கோபின்  தேவன்  நமக்கு  உயர்ந்த  அடைக்கலமானவர்.  (சேலா.)  (சங்கீதம்  46:7)

seanaiga'lin  karththar  nammoadirukki’raar;  yaakkoabin  theavan  namakku  uyarntha  adaikkalamaanavar.  (sealaa.)  (sanggeetham  46:7)

பூமியிலே  பாழ்க்கடிப்புகளை  நடப்பிக்கிற  கர்த்தருடைய  செய்கைகளை  வந்து  பாருங்கள்.  (சங்கீதம்  46:8)

boomiyilea  paazhkkadippuga'lai  nadappikki’ra  karththarudaiya  seygaiga'lai  vanthu  paarungga'l.  (sanggeetham  46:8)

அவர்  பூமியின்  கடைமுனைமட்டும்  யுத்தங்களை  ஓயப்பண்ணுகிறார்;  வில்லை  ஒடித்து,  ஈட்டியை  முறிக்கிறார்;  இரதங்களை  நெருப்பினால்  சுட்டெரிக்கிறார்.  (சங்கீதம்  46:9)

avar  boomiyin  kadaimunaimattum  yuththangga'lai  oayappa'n'nugi’raar;  villai  odiththu,  eettiyai  mu’rikki’raar;  irathangga'lai  neruppinaal  sutterikki’raar.  (sanggeetham  46:9)

நீங்கள்  அமர்ந்திருந்து,  நானே  தேவனென்று  அறிந்துகொள்ளுங்கள்;  ஜாதிகளுக்குள்ளே  உயர்ந்திருப்பேன்,  பூமியிலே  உயர்ந்திருப்பேன்.  (சங்கீதம்  46:10)

neengga'l  amarnthirunthu,  naanea  theavanen’ru  a’rinthuko'l'lungga'l;  jaathiga'lukku'l'lea  uyarnthiruppean,  boomiyilea  uyarnthiruppean.  (sanggeetham  46:10)

சேனைகளின்  கர்த்தர்  நம்மோடிருக்கிறார்,  யாக்கோபின்  தேவன்  நமக்கு  உயர்ந்த  அடைக்கலமானவர்.  (சேலா.)  (சங்கீதம்  46:11)

seanaiga'lin  karththar  nammoadirukki’raar,  yaakkoabin  theavan  namakku  uyarntha  adaikkalamaanavar.  (sealaa.)  (sanggeetham  46:11)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!