Tuesday, June 14, 2016

Sanggeetham 41 | சங்கீதம் 41 | Psalms 41

சிறுமைப்பட்டவன்மேல்  சிந்தையுள்ளவன்  பாக்கியவான்;  தீங்குநாளில்  கர்த்தர்  அவனை  விடுவிப்பார்.  (சங்கீதம்  41:1)

si’rumaippattavanmeal  sinthaiyu'l'lavan  baakkiyavaan;  theenggunaa'lil  karththar  avanai  viduvippaar.  (sanggeetham  41:1)

கர்த்தர்  அவனைப்  பாதுகாத்து  அவனை  உயிரோடே  வைப்பார்;  பூமியில்  அவன்  பாக்கியவானாயிருப்பான்;  அவன்  சத்துருக்களின்  இஷ்டத்திற்கு  நீர்  அவனை  ஒப்புக்கொடீர்.  (சங்கீதம்  41:2)

karththar  avanaip  paathukaaththu  avanai  uyiroadea  vaippaar;  boomiyil  avan  baakkiyavaanaayiruppaan;  avan  saththurukka'lin  ishdaththi’rku  neer  avanai  oppukkodeer.  (sanggeetham  41:2)

படுக்கையின்மேல்  வியாதியாய்க்கிடக்கிற  அவனைக்  கர்த்தர்  தாங்குவார்;  அவனுடைய  வியாதியிலே  அவன்  படுக்கை  முழுவதையும்  மாற்றிப்போடுவீர்.  (சங்கீதம்  41:3)

padukkaiyinmeal  viyaathiyaaykkidakki’ra  avanaik  karththar  thaangguvaar;  avanudaiya  viyaathiyilea  avan  padukkai  muzhuvathaiyum  maat’rippoaduveer.  (sanggeetham  41:3)

கர்த்தாவே,  என்மேல்  இரக்கமாயிரும்;  உமக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்தேன்,  என்  ஆத்துமாவைக்  குணமாக்கும்  என்று  நான்  சொன்னேன்.  (சங்கீதம்  41:4)

karththaavea,  enmeal  irakkamaayirum;  umakku  viroathamaayp  paavagnseythean,  en  aaththumaavaik  ku'namaakkum  en’ru  naan  sonnean.  (sanggeetham  41:4)

அவன்  எப்பொழுது  சாவான்,  அவன்  பேர்  எப்பொழுது  அழியும்?  என்று  என்  சத்துருக்கள்  எனக்கு  விரோதமாய்ச்  சொல்லுகிறார்கள்.  (சங்கீதம்  41:5)

avan  eppozhuthu  saavaan,  avan  pear  eppozhuthu  azhiyum?  en’ru  en  saththurukka'l  enakku  viroathamaaych  sollugi’raarga'l.  (sanggeetham  41:5)

ஒருவன்  என்னைப்  பார்க்கவந்தால்  வஞ்சனையாய்ப்  பேசுகிறான்;  அவன்  தன்  இருதயத்தில்  அக்கிரமத்தைச்  சேகரித்துக்கொண்டு,  தெருவிலேபோய்,  அதைத்  தூற்றுகிறான்.  (சங்கீதம்  41:6)

oruvan  ennaip  paarkkavanthaal  vagnchanaiyaayp  peasugi’raan;  avan  than  iruthayaththil  akkiramaththaich  seagariththukko'ndu,  theruvileapoay,  athaith  thoot’rugi’raan.  (sanggeetham  41:6)

என்  பகைஞரெல்லாரும்  என்மேல்  ஏகமாய்  முணுமுணுத்து,  எனக்கு  விரோதமாயிருந்து,  எனக்குப்  பொல்லாங்கு  நினைத்து,  (சங்கீதம்  41:7)

en  pagaignarellaarum  enmeal  eagamaay  mu'numu'nuththu,  enakku  viroathamaayirunthu,  enakkup  pollaanggu  ninaiththu,  (sanggeetham  41:7)

தீராவியாதி  அவனைப்  பிடித்துக்கொண்டது;  படுக்கையில்  கிடக்கிற  அவன்  இனி  எழுந்திருப்பதில்லை  என்கிறார்கள்.  (சங்கீதம்  41:8)

theeraaviyaathi  avanaip  pidiththukko'ndathu;  padukkaiyil  kidakki’ra  avan  ini  ezhunthiruppathillai  engi’raarga'l.  (sanggeetham  41:8)

என்  பிராணசிநேகிதனும்,  நான்  நம்பினவனும்,  என்  அப்பம்  புசித்தவனுமாகிய  மனுஷனும்,  என்மேல்  தன்  குதிகாலைத்  தூக்கினான்.  (சங்கீதம்  41:9)

en  piraa'nasineagithanum,  naan  nambinavanum,  en  appam  pusiththavanumaagiya  manushanum,  enmeal  than  kuthikaalaith  thookkinaan.  (sanggeetham  41:9)

கர்த்தாவே,  நீர்  எனக்கு  இரங்கி,  நான்  அவர்களுக்குச்  சரிக்கட்ட  என்னை  எழுந்திருக்கப்பண்ணும்.  (சங்கீதம்  41:10)

karththaavea,  neer  enakku  iranggi,  naan  avarga'lukkuch  sarikkatta  ennai  ezhunthirukkappa'n'num.  (sanggeetham  41:10)

என்  சத்துரு  என்மேல்  ஜெயங்கொள்ளாததினால்,  நீர்  என்மேல்  பிரியமாயிருக்கிறீரென்று  அறிவேன்.  (சங்கீதம்  41:11)

en  saththuru  enmeal  jeyangko'l'laathathinaal,  neer  enmeal  piriyamaayirukki’reeren’ru  a’rivean.  (sanggeetham  41:11)

நீர்  என்  உத்தமத்திலே  என்னைத்தாங்கி,  என்றென்றைக்கும்  உம்முடைய  சமுகத்தில்  என்னை  நிலைநிறுத்துவீர்.  (சங்கீதம்  41:12)

neer  en  uththamaththilea  ennaiththaanggi,  en’ren’raikkum  ummudaiya  samugaththil  ennai  nilaini’ruththuveer.  (sanggeetham  41:12)

இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  அநாதியாய்  என்றென்றைக்குமுள்ள  சதாகாலங்களிலும்  ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்.  ஆமென்,  ஆமென்.  (சங்கீதம்  41:13)

isravealin  theavanaagiya  karththar  anaathiyaay  en’ren’raikkumu'l'la  sathaakaalangga'lilum  sthoaththirikkappadaththakkavar.  aamen,  aamen.  (sanggeetham  41:13)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!