Tuesday, June 14, 2016

Sanggeetham 40 | சங்கீதம் 40 | Psalms 40

கர்த்தருக்காகப்  பொறுமையுடன்  காத்திருந்தேன்;  அவர்  என்னிடமாய்ச்  சாய்ந்து,  என்  கூப்பிடுதலைக்  கேட்டார்.  (சங்கீதம்  40:1)

karththarukkaagap  po’rumaiyudan  kaaththirunthean;  avar  ennidamaaych  saaynthu,  en  kooppiduthalaik  keattaar.  (sanggeetham  40:1)

பயங்கரமான  குழியிலும்  உளையான  சேற்றிலுமிருந்து  என்னைத்  தூக்கியெடுத்து,  என்  கால்களைக்  கன்மலையின்மேல்  நிறுத்தி,  என்  அடிகளை  உறுதிப்படுத்தி,  (சங்கீதம்  40:2)

bayanggaramaana  kuzhiyilum  u'laiyaana  seat’rilumirunthu  ennaith  thookkiyeduththu,  en  kaalga'laik  kanmalaiyinmeal  ni’ruththi,  en  adiga'lai  u’ruthippaduththi,  (sanggeetham  40:2)

நமது  தேவனைத்  துதிக்கும்  புதுப்பாட்டை  அவர்  என்  வாயிலே  கொடுத்தார்;  அநேகர்  அதைக்  கண்டு,  பயந்து,  கர்த்தரை  நம்புவார்கள்.  (சங்கீதம்  40:3)

namathu  theavanaith  thuthikkum  puthuppaattai  avar  en  vaayilea  koduththaar;  aneagar  athaik  ka'ndu,  bayanthu,  karththarai  nambuvaarga'l.  (sanggeetham  40:3)

அகங்காரிகளையும்  பொய்யைச்  சார்ந்திருக்கிறவர்களையும்  நோக்காமல்,  கர்த்தரையே  தன்  நம்பிக்கையாக  வைக்கிற  மனுஷன்  பாக்கியவான்.  (சங்கீதம்  40:4)

aganggaariga'laiyum  poyyaich  saarnthirukki’ravarga'laiyum  noakkaamal,  karththaraiyea  than  nambikkaiyaaga  vaikki’ra  manushan  baakkiyavaan.  (sanggeetham  40:4)

என்  தேவனாகிய  கர்த்தாவே,  நீர்  எங்கள்  நிமித்தஞ்செய்த  உம்முடைய  அதிசயங்களும்  உம்முடைய  யோசனைகளும்  அநேகமாயிருக்கிறது;  ஒருவரும்  அவைகளை  உமக்கு  விவரித்துச்  சொல்லிமுடியாது;  நான்  அவைகளைச்  சொல்லி  அறிவிக்கவேண்டுமானால்  அவைகள்  எண்ணிக்கைக்கு  மேலானவைகள்.  (சங்கீதம்  40:5)

en  theavanaagiya  karththaavea,  neer  engga'l  nimiththagnseytha  ummudaiya  athisayangga'lum  ummudaiya  yoasanaiga'lum  aneagamaayirukki’rathu;  oruvarum  avaiga'lai  umakku  vivariththuch  sollimudiyaathu;  naan  avaiga'laich  solli  a’rivikkavea'ndumaanaal  avaiga'l  e'n'nikkaikku  mealaanavaiga'l.  (sanggeetham  40:5)

பலியையும்  காணிக்கையையும்  நீர்  விரும்பாமல்,  என்  செவிகளைத்  திறந்தீர்;  சர்வாங்க  தகனபலியையும்  பாவநிவாரணபலியையும்  நீர்  கேட்கவில்லை.  (சங்கீதம்  40:6)

baliyaiyum  kaa'nikkaiyaiyum  neer  virumbaamal,  en  seviga'laith  thi’rantheer;  sarvaangga  thaganabaliyaiyum  paavanivaara'nabaliyaiyum  neer  keadkavillai.  (sanggeetham  40:6)

அப்பொழுது  நான்:  இதோ,  வருகிறேன்,  புஸ்தகச்சுருளில்  என்னைக்குறித்து  எழுதியிருக்கிறது;  (சங்கீதம்  40:7)

appozhuthu  naan:  ithoa,  varugi’rean,  pusthagachsuru'lil  ennaikku’riththu  ezhuthiyirukki’rathu;  (sanggeetham  40:7)

என்  தேவனே,  உமக்குப்  பிரியமானதைச்  செய்ய  விரும்புகிறேன்;  உமது  நியாயப்பிரமாணம்  என்  உள்ளத்திற்குள்  இருக்கிறது  என்று  சொன்னேன்.  (சங்கீதம்  40:8)

en  theavanea,  umakkup  piriyamaanathaich  seyya  virumbugi’rean;  umathu  niyaayappiramaa'nam  en  u'l'laththi’rku'l  irukki’rathu  en’ru  sonnean.  (sanggeetham  40:8)

மகா  சபையிலே  நீதியைப்  பிரசங்கித்தேன்;  என்  உதடுகளை  மூடேன்,  கர்த்தாவே,  நீர்  அதை  அறிவீர்.  (சங்கீதம்  40:9)

mahaa  sabaiyilea  neethiyaip  pirasanggiththean;  en  uthaduga'lai  moodean,  karththaavea,  neer  athai  a’riveer.  (sanggeetham  40:9)

உம்முடைய  நீதியை  நான்  என்  இருதயத்திற்குள்  மறைத்துவைக்கவில்லை;  உமது  சத்தியத்தையும்  உமது  இரட்சிப்பையும்  சொல்லியிருக்கிறேன்;  உமது  கிருபையையும்  உமது  உண்மையையும்  மகா  சபைக்கு  அறிவியாதபடிக்கு  நான்  ஒளித்துவைக்கவில்லை.  (சங்கீதம்  40:10)

ummudaiya  neethiyai  naan  en  iruthayaththi’rku'l  ma’raiththuvaikkavillai;  umathu  saththiyaththaiyum  umathu  iradchippaiyum  solliyirukki’rean;  umathu  kirubaiyaiyum  umathu  u'nmaiyaiyum  mahaa  sabaikku  a’riviyaathapadikku  naan  o'liththuvaikkavillai.  (sanggeetham  40:10)

கர்த்தாவே  நீர்  உம்முடைய  இரக்கங்களை  எனக்குக்  கிடையாமற்  போகப்பண்ணாதேயும்;  உமது  கிருபையும்  உமது  உண்மையும்  எப்பொழுதும்  என்னைக்  காக்கக்கடவது.  (சங்கீதம்  40:11)

karththaavea  neer  ummudaiya  irakkangga'lai  enakkuk  kidaiyaama’r  poagappa'n'naatheayum;  umathu  kirubaiyum  umathu  u'nmaiyum  eppozhuthum  ennaik  kaakkakkadavathu.  (sanggeetham  40:11)

எண்ணிக்கைக்கு  அடங்காத  தீமைகள்  என்னைச்  சூழ்ந்துகொண்டது,  என்  அக்கிரமங்கள்  என்னைத்  தொடர்ந்துபிடித்தது,  நான்  நிமிர்ந்து  பார்க்கக்கூடாதிருக்கிறது,  அவைகள்  என்  தலைமயிரிலும்  அதிகமாயிருக்கிறது,  என்  இருதயம்  சோர்ந்துபோகிறது.  (சங்கீதம்  40:12)

e'n'nikkaikku  adanggaatha  theemaiga'l  ennaich  soozhnthuko'ndathu,  en  akkiramangga'l  ennaith  thodarnthupidiththathu,  naan  nimirnthu  paarkkakkoodaathirukki’rathu,  avaiga'l  en  thalaimayirilum  athigamaayirukki’rathu,  en  iruthayam  soarnthupoagi’rathu.  (sanggeetham  40:12)

கர்த்தாவே,  என்னை  விடுவித்தருளும்;  கர்த்தாவே,  எனக்குச்  சகாயம்பண்ணத்  தீவிரியும்.  (சங்கீதம்  40:13)

karththaavea,  ennai  viduviththaru'lum;  karththaavea,  enakkuch  sagaayampa'n'nath  theeviriyum.  (sanggeetham  40:13)

என்  பிராணனை  அழிக்கத்  தேடுகிறவர்கள்  ஏகமாய்  வெட்கி  நாணி,  எனக்குத்  தீங்குசெய்ய  விரும்புகிறவர்கள்  பின்னிட்டு  இலச்சையடைவார்களாக.  (சங்கீதம்  40:14)

en  piraa'nanai  azhikkath  theadugi’ravarga'l  eagamaay  vedki  naa'ni,  enakkuth  theengguseyya  virumbugi’ravarga'l  pinnittu  ilachchaiyadaivaarga'laaga.  (sanggeetham  40:14)

என்பேரில்    ஆ!    ஆ!  என்று  சொல்லுகிறவர்கள்,  தங்கள்  வெட்கத்தின்  பலனையடைந்து  கைவிடப்படுவார்களாக.  (சங்கீதம்  40:15)

enpearil  aa  aa!  aa  aa!  en’ru  sollugi’ravarga'l,  thangga'l  vedkaththin  palanaiyadainthu  kaividappaduvaarga'laaga.  (sanggeetham  40:15)

உம்மைத்  தேடுகிற  அனைவரும்  உமக்குள்  மகிழ்ந்து  சந்தோஷப்படுவார்களாக;  உம்முடைய  இரட்சிப்பை  விரும்புகிறவர்கள்  கர்த்தருக்கு  மகிமை  உண்டாவதாக  என்று  எப்பொழுதும்  சொல்வார்களாக.  (சங்கீதம்  40:16)

ummaith  theadugi’ra  anaivarum  umakku'l  magizhnthu  santhoashappaduvaarga'laaga;  ummudaiya  iradchippai  virumbugi’ravarga'l  karththarukku  magimai  u'ndaavathaaga  en’ru  eppozhuthum  solvaarga'laaga.  (sanggeetham  40:16)

நான்  சிறுமையும்  எளிமையுமானவன்,  கர்த்தரோ  என்மேல்  நினைவாயிருக்கிறார்;  தேவரீர்  என்  துணையும்  என்னை  விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்;  என்  தேவனே,  தாமதியாதேயும்.  (சங்கீதம்  40:17)

naan  si’rumaiyum  e'limaiyumaanavan,  karththaroa  enmeal  ninaivaayirukki’raar;  theavareer  en  thu'naiyum  ennai  viduvikki’ravarumaayirukki’reer;  en  theavanea,  thaamathiyaatheayum.  (sanggeetham  40:17)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!