Saturday, June 11, 2016

Sanggeetham 4 | சங்கீதம் 4 | Psalms 4

என்  நீதியின்  தேவனே,  நான்  கூப்பிடுகையில்  எனக்குச்  செவிகொடும்;  நெருக்கத்தில்  இருந்த  எனக்கு  விசாலமுண்டாக்கினீர்;  எனக்கு  இரங்கி,  என்  விண்ணப்பத்தைக்  கேட்டருளும்.  (சங்கீதம்  4:1)

en  neethiyin  theavanea,  naan  kooppidugaiyil  enakkuch  sevikodum;  nerukkaththil  iruntha  enakku  visaalamu'ndaakkineer;  enakku  iranggi,  en  vi'n'nappaththaik  keattaru'lum.  (sanggeetham  4:1)

மனுபுத்திரரே,  எதுவரைக்கும்  என்  மகிமையை  அவமானப்படுத்தி,  வீணானதை  விரும்பி,  பொய்யை  நாடுவீர்கள்.  (சேலா.)  (சங்கீதம்  4:2)

manupuththirarea,  ethuvaraikkum  en  magimaiyai  avamaanappaduththi,  vee'naanathai  virumbi,  poyyai  naaduveerga'l.  (sealaa.)  (sanggeetham  4:2)

பக்தியுள்ளவனைக்  கர்த்தர்  தமக்காகத்  தெரிந்துகொண்டாரென்று  அறியுங்கள்;  நான்  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிடுகையில்  அவர்  கேட்பார்.  (சங்கீதம்  4:3)

bakthiyu'l'lavanaik  karththar  thamakkaagath  therinthuko'ndaaren’ru  a’riyungga'l;  naan  karththarai  noakkik  kooppidugaiyil  avar  keadpaar.  (sanggeetham  4:3)

நீங்கள்  கோபங்கொண்டாலும்,  பாவஞ்செய்யாதிருங்கள்;  உங்கள்  படுக்கையிலே  உங்கள்  இருதயத்தில்  பேசிக்கொண்டு  அமர்ந்திருங்கள்.  (சேலா.)  (சங்கீதம்  4:4)

neengga'l  koabangko'ndaalum,  paavagnseyyaathirungga'l;  ungga'l  padukkaiyilea  ungga'l  iruthayaththil  peasikko'ndu  amarnthirungga'l.  (sealaa.)  (sanggeetham  4:4)

நீதியின்  பலிகளைச்  செலுத்தி,  கர்த்தர்மேல்  நம்பிக்கையாயிருங்கள்.  (சங்கீதம்  4:5)

neethiyin  baliga'laich  seluththi,  karththarmeal  nambikkaiyaayirungga'l.  (sanggeetham  4:5)

எங்களுக்கு  நன்மை  காண்பிப்பவன்  யார்  என்று  சொல்லுகிறவர்கள்  அநேகர்;  கர்த்தாவே,  உம்முடைய  முகத்தின்  ஒளியை  எங்கள்மேல்  பிரகாசிக்கப்பண்ணும்.  (சங்கீதம்  4:6)

engga'lukku  nanmai  kaa'nbippavan  yaar  en’ru  sollugi’ravarga'l  aneagar;  karththaavea,  ummudaiya  mugaththin  o'liyai  engga'lmeal  piragaasikkappa'n'num.  (sanggeetham  4:6)

அவர்களுக்குத்  தானியமும்  திராட்சரசமும்  பெருகியிருக்கிறகாலத்தின்  சந்தோஷத்தைப்பார்க்கிலும்,  அதிக  சந்தோஷத்தை  என்  இருதயத்தில்  தந்தீர்.  (சங்கீதம்  4:7)

avarga'lukkuth  thaaniyamum  thiraadcharasamum  perugiyirukki’rakaalaththin  santhoashaththaippaarkkilum,  athiga  santhoashaththai  en  iruthayaththil  thantheer.  (sanggeetham  4:7)

சமாதானத்தோடே  படுத்துக்கொண்டு  நித்திரைசெய்வேன்;  கர்த்தாவே,  நீர்  ஒருவரே  என்னைச்  சுகமாய்த்  தங்கப்பண்ணுகிறீர்.  (சங்கீதம்  4:8)

samaathaanaththoadea  paduththukko'ndu  niththiraiseyvean;  karththaavea,  neer  oruvarea  ennaich  sugamaayth  thanggappa'n'nugi’reer.  (sanggeetham  4:8)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!