Tuesday, June 14, 2016

Sanggeetham 39 | சங்கீதம் 39 | Psalms 39

என்  நாவினால்  பாவஞ்செய்யாதபடிக்கு  நான்  என்  வழிகளைக்  காத்து,  துன்மார்க்கன்  எனக்கு  முன்பாக  இருக்குமட்டும்  என்  வாயைக்  கடிவாளத்தால்  அடக்கிவைப்பேன்  என்றேன்.  (சங்கீதம்  39:1)

en  naavinaal  paavagnseyyaathapadikku  naan  en  vazhiga'laik  kaaththu,  thunmaarkkan  enakku  munbaaga  irukkumattum  en  vaayaik  kadivaa'laththaal  adakkivaippean  en’rean.  (sanggeetham  39:1)

நான்  மவுனமாகி,  ஊமையனாயிருந்தேன்,  நலமானதையும்  பேசாமல்  அமர்ந்திருந்தேன்;  ஆனாலும்  என்  துக்கம்  அதிகரித்தது;  (சங்கீதம்  39:2)

naan  mavunamaagi,  oomaiyanaayirunthean,  nalamaanathaiyum  peasaamal  amarnthirunthean;  aanaalum  en  thukkam  athigariththathu;  (sanggeetham  39:2)

என்  இருதயம்  எனக்குள்ளே  அனல்கொண்டது;  நான்  தியானிக்கையில்  அக்கினி  மூண்டது;  அப்பொழுது  என்  நாவினால்  விண்ணப்பம்  செய்தேன்.  (சங்கீதம்  39:3)

en  iruthayam  enakku'l'lea  analko'ndathu;  naan  thiyaanikkaiyil  akkini  moo'ndathu;  appozhuthu  en  naavinaal  vi'n'nappam  seythean.  (sanggeetham  39:3)

கர்த்தாவே,  நான்  எவ்வளவாய்  நிலையற்றவன்  என்று  உணரும்படி  என்  முடிவையும்,  என்  நாட்களின்  அளவு  இவ்வளவு  என்பதையும்  எனக்குத்  தெரிவியும்.  (சங்கீதம்  39:4)

karththaavea,  naan  evva'lavaay  nilaiyat’ravan  en’ru  u'narumpadi  en  mudivaiyum,  en  naadka'lin  a'lavu  ivva'lavu  enbathaiyum  enakkuth  theriviyum.  (sanggeetham  39:4)

இதோ,  என்  நாட்களை  நாலு  விரற்கடையளவாக்கினீர்;  என்  ஆயுசு  உமது  பார்வைக்கு  இல்லாததுபோலிருக்கிறது;  எந்த  மனுஷனும்  மாயையே  என்பது  நிச்சயம்.  (சேலா.)  (சங்கீதம்  39:5)

ithoa,  en  naadka'lai  naalu  vira’rkadaiya'lavaakkineer;  en  aayusu  umathu  paarvaikku  illaathathupoalirukki’rathu;  entha  manushanum  maayaiyea  enbathu  nichchayam.  (sealaa.)  (sanggeetham  39:5)

வேஷமாகவே  மனுஷன்  திரிகிறான்;  விருதாவாகவே  சஞ்சலப்படுகிறான்;  ஆஸ்தியைச்  சேர்க்கிறான்,  யார்  அதை  வாரிக்கொள்ளுவான்  என்று  அறியான்.  (சங்கீதம்  39:6)

veashamaagavea  manushan  thirigi’raan;  viruthaavaagavea  sagnchalappadugi’raan;  aasthiyaich  searkki’raan,  yaar  athai  vaarikko'l'luvaan  en’ru  a’riyaan.  (sanggeetham  39:6)

இப்போதும்  ஆண்டவரே,  நான்  எதற்கு  எதிர்பார்த்திருக்கிறேன்?  நீரே  என்  நம்பிக்கை.  (சங்கீதம்  39:7)

ippoathum  aa'ndavarea,  naan  etha’rku  ethirpaarththirukki’rean?  neerea  en  nambikkai.  (sanggeetham  39:7)

என்  மீறுதல்கள்  எல்லாவற்றிலுமிருந்து  என்னை  விடுதலையாக்கும்,  மூடனுடைய  நிந்தனைக்கு  என்னை  ஒப்புக்கொடாதேயும்.  (சங்கீதம்  39:8)

en  mee’ruthalga'l  ellaavat’rilumirunthu  ennai  viduthalaiyaakkum,  moodanudaiya  ninthanaikku  ennai  oppukkodaatheayum.  (sanggeetham  39:8)

நீரே  இதைச்  செய்தீர்  என்று  நான்  என்  வாயைத்  திறவாமல்  மவுனமாயிருந்தேன்.  (சங்கீதம்  39:9)

neerea  ithaich  seytheer  en’ru  naan  en  vaayaith  thi’ravaamal  mavunamaayirunthean.  (sanggeetham  39:9)

என்னிலிருந்து  உம்முடைய  வாதையை  எடுத்துப்போடும்;  உமது  கரத்தின்  அடிகளால்  நான்  சோர்ந்துபோனேன்.  (சங்கீதம்  39:10)

ennilirunthu  ummudaiya  vaathaiyai  eduththuppoadum;  umathu  karaththin  adiga'laal  naan  soarnthupoanean.  (sanggeetham  39:10)

அக்கிரமத்தினிமித்தம்  நீர்  மனுஷனைக்  கடிந்துகொண்டு  தண்டிக்கிறபோது,  அவன்  வடிவைப்  பொட்டரிப்பைப்போல்  அழியப்பண்ணுகிறீர்;  நிச்சயமாக  எந்த  மனுஷனும்  மாயையே.  (சேலா.)  (சங்கீதம்  39:11)

akkiramaththinimiththam  neer  manushanaik  kadinthuko'ndu  tha'ndikki’rapoathu,  avan  vadivaip  pottarippaippoal  azhiyappa'n'nugi’reer;  nichchayamaaga  entha  manushanum  maayaiyea.  (sealaa.)  (sanggeetham  39:11)

கர்த்தாவே,  என்  ஜெபத்தைக்கேட்டு,  என்  கூப்பிடுதலுக்குச்  செவிகொடும்;  என்  கண்ணீருக்கு  மவுனமாயிராதேயும்;  என்  பிதாக்களெல்லாரையும்போல  நானும்  உமக்கு  முன்பாக  அந்நியனும்  பரதேசியுமாயிருக்கிறேன்.  (சங்கீதம்  39:12)

karththaavea,  en  jebaththaikkeattu,  en  kooppiduthalukkuch  sevikodum;  en  ka'n'neerukku  mavunamaayiraatheayum;  en  pithaakka'lellaaraiyumpoala  naanum  umakku  munbaaga  anniyanum  paratheasiyumaayirukki’rean.  (sanggeetham  39:12)

நான்  இனி  இராமற்போகுமுன்னே,  தேறுதலடையும்படி  என்னிடத்தில்  பொறுமையாயிரும்.  (சங்கீதம்  39:13)

naan  ini  iraama’rpoagumunnea,  thea’ruthaladaiyumpadi  ennidaththil  po’rumaiyaayirum.  (sanggeetham  39:13)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!