Tuesday, June 14, 2016

Sanggeetham 38 | சங்கீதம் 38 | Psalms 38

கர்த்தாவே,  உம்முடைய  கோபத்தில்  என்னைக்  கடிந்துகொள்ளாதேயும்;  உம்முடைய  உக்கிரத்தில்  என்னைத்  தண்டியாதேயும்.  (சங்கீதம்  38:1)

karththaavea,  ummudaiya  koabaththil  ennaik  kadinthuko'l'laatheayum;  ummudaiya  ukkiraththil  ennaith  tha'ndiyaatheayum.  (sanggeetham  38:1)

உம்முடைய  அம்புகள்  எனக்குள்ளே  தைத்திருக்கிறது;  உமது  கை  என்னை  இருத்துகிறது.  (சங்கீதம்  38:2)

ummudaiya  ambuga'l  enakku'l'lea  thaiththirukki’rathu;  umathu  kai  ennai  iruththugi’rathu.  (sanggeetham  38:2)

உமது  கோபத்தினால்  என்  மாம்சத்தில்  ஆரோக்கியமில்லை;  என்  பாவத்தினால்  என்  எலும்புகளில்  சவுக்கியமில்லை.  (சங்கீதம்  38:3)

umathu  koabaththinaal  en  maamsaththil  aaroakkiyamillai;  en  paavaththinaal  en  elumbuga'lil  savukkiyamillai.  (sanggeetham  38:3)

என்  அக்கிரமங்கள்  என்  தலைக்கு  மேலாகப்  பெருகிற்று,  அவைகள்  பாரச்சுமையைப்போல  என்னால்  தாங்கக்கூடாத  பாரமாயிற்று.  (சங்கீதம்  38:4)

en  akkiramangga'l  en  thalaikku  mealaagap  perugit’ru,  avaiga'l  baarachsumaiyaippoala  ennaal  thaanggakkoodaatha  baaramaayit’ru.  (sanggeetham  38:4)

என்  மதிகேட்டினிமித்தம்  என்  புண்கள்  அழுகி  நாற்றமெடுத்தது.  (சங்கீதம்  38:5)

en  mathikeattinimiththam  en  pu'nga'l  azhugi  naat’rameduththathu.  (sanggeetham  38:5)

நான்  வேதனைப்பட்டு  ஒடுங்கினேன்;  நாள்முழுதும்  துக்கப்பட்டுத்  திரிகிறேன்.  (சங்கீதம்  38:6)

naan  veathanaippattu  odungginean;  naa'lmuzhuthum  thukkappattuth  thirigi’rean.  (sanggeetham  38:6)

என்  குடல்கள்  எரிபந்தமாய்  எரிகிறது;  என்  மாம்சத்தில்  ஆரோக்கியம்  இல்லை.  (சங்கீதம்  38:7)

en  kudalga'l  eripanthamaay  erigi’rathu;  en  maamsaththil  aaroakkiyam  illai.  (sanggeetham  38:7)

நான்  பெலனற்றுப்போய்,  மிகவும்  நொறுக்கப்பட்டேன்;  என்  இருதயத்தின்  கொந்தளிப்பினால்  கதறுகிறேன்.  (சங்கீதம்  38:8)

naan  belanat’ruppoay,  migavum  no’rukkappattean;  en  iruthayaththin  kontha'lippinaal  katha’rugi’rean.  (sanggeetham  38:8)

ஆண்டவரே,  என்  ஏங்கலெல்லாம்  உமக்கு  முன்பாக  இருக்கிறது;  என்  தவிப்பு  உமக்கு  மறைவாயிருக்கவில்லை.  (சங்கீதம்  38:9)

aa'ndavarea,  en  eanggalellaam  umakku  munbaaga  irukki’rathu;  en  thavippu  umakku  ma’raivaayirukkavillai.  (sanggeetham  38:9)

என்  உள்ளம்  குழம்பி  அலைகிறது;  என்  பெலன்  என்னை  விட்டு  விலகி,  என்  கண்களின்  ஒளி  முதலாய்  இல்லாமற்போயிற்று.  (சங்கீதம்  38:10)

en  u'l'lam  kuzhambi  alaigi’rathu;  en  belan  ennai  vittu  vilagi,  en  ka'nga'lin  o'li  muthalaay  illaama’rpoayit’ru.  (sanggeetham  38:10)

என்  சிநேகிதரும்  என்  தோழரும்  என்  வாதையைக்  கண்டு  விலகுகிறார்கள்;  என்  இனத்தாரும்  தூரத்திலே  நிற்கிறார்கள்.  (சங்கீதம்  38:11)

en  sineagitharum  en  thoazharum  en  vaathaiyaik  ka'ndu  vilagugi’raarga'l;  en  inaththaarum  thooraththilea  ni’rki’raarga'l.  (sanggeetham  38:11)

என்  பிராணனை  வாங்கத்தேடுகிறவர்கள்  எனக்குக்  கண்ணிகளை  வைக்கிறார்கள்;  எனக்குப்  பொல்லாங்கு  தேடுகிறவர்கள்  கேடானவைகளைப்  பேசி,  நாள்முழுதும்  வஞ்சனைகளை  யோசிக்கிறார்கள்.  (சங்கீதம்  38:12)

en  piraa'nanai  vaanggaththeadugi’ravarga'l  enakkuk  ka'n'niga'lai  vaikki’raarga'l;  enakkup  pollaanggu  theadugi’ravarga'l  keadaanavaiga'laip  peasi,  naa'lmuzhuthum  vagnchanaiga'lai  yoasikki’raarga'l.  (sanggeetham  38:12)

நானோ  செவிடனைப்போலக்  கேளாதவனாகவும்,  ஊமையனைப்போல  வாய்திறவாதவனாகவும்  இருக்கிறேன்.  (சங்கீதம்  38:13)

naanoa  sevidanaippoalak  kea'laathavanaagavum,  oomaiyanaippoala  vaaythi’ravaathavanaagavum  irukki’rean.  (sanggeetham  38:13)

காதுகேளாதவனும்,  தன்  வாயில்  மறுஉத்தரவுகள்  இல்லாதவனுமாயிருக்கிற  மனுஷனைப்போலானேன்.  (சங்கீதம்  38:14)

kaathukea'laathavanum,  than  vaayil  ma’ruuththaravuga'l  illaathavanumaayirukki’ra  manushanaippoalaanean.  (sanggeetham  38:14)

கர்த்தாவே,  உமக்குக்  காத்திருக்கிறேன்;  என்  தேவனாகிய  ஆண்டவரே,  நீர்  மறுஉத்தரவு  கொடுப்பீர்.  (சங்கீதம்  38:15)

karththaavea,  umakkuk  kaaththirukki’rean;  en  theavanaagiya  aa'ndavarea,  neer  ma’ruuththaravu  koduppeer.  (sanggeetham  38:15)

அவர்கள்  என்னிமித்தம்  சந்தோஷப்படாதபடிக்கு  இப்படிச்  சொன்னேன்;  என்  கால்  தவறும்போது  என்மேல்  பெருமைபாராட்டுவார்களே.  (சங்கீதம்  38:16)

avarga'l  ennimiththam  santhoashappadaathapadikku  ippadich  sonnean;  en  kaal  thava’rumpoathu  enmeal  perumaipaaraattuvaarga'lea.  (sanggeetham  38:16)

நான்  தடுமாறி  விழ  ஏதுவாயிருக்கிறேன்;  என்  துக்கம்  எப்பொழுதும்  என்  முன்பாக  இருக்கிறது.  (சங்கீதம்  38:17)

naan  thadumaa’ri  vizha  eathuvaayirukki’rean;  en  thukkam  eppozhuthum  en  munbaaga  irukki’rathu.  (sanggeetham  38:17)

என்  அக்கிரமத்தை  நான்  அறிக்கையிட்டு,  என்  பாவத்தினிமித்தம்  விசாரப்படுகிறேன்.  (சங்கீதம்  38:18)

en  akkiramaththai  naan  a’rikkaiyittu,  en  paavaththinimiththam  visaarappadugi’rean.  (sanggeetham  38:18)

என்  சத்துருக்கள்  வாழ்ந்து  பலத்திருக்கிறார்கள்;  முகாந்தரமில்லாமல்  என்னைப்  பகைக்கிறவர்கள்  பெருகியிருக்கிறார்கள்.  (சங்கீதம்  38:19)

en  saththurukka'l  vaazhnthu  balaththirukki’raarga'l;  mugaantharamillaamal  ennaip  pagaikki’ravarga'l  perugiyirukki’raarga'l.  (sanggeetham  38:19)

நான்  நன்மையைப்  பின்பற்றுகிறபடியால்,  நன்மைக்குத்  தீமை  செய்கிறவர்கள்  என்னை  விரோதிக்கிறார்கள்.  (சங்கீதம்  38:20)

naan  nanmaiyaip  pinpat’rugi’rapadiyaal,  nanmaikkuth  theemai  seygi’ravarga'l  ennai  viroathikki’raarga'l.  (sanggeetham  38:20)

கர்த்தாவே,  என்னைக்  கைவிடாதேயும்;  என்  தேவனே,  எனக்குத்  தூரமாயிராதேயும்.  (சங்கீதம்  38:21)

karththaavea,  ennaik  kaividaatheayum;  en  theavanea,  enakkuth  thooramaayiraatheayum.  (sanggeetham  38:21)

என்  இரட்சிப்பாகிய  ஆண்டவரே,  எனக்குச்  சகாயஞ்செய்யத்  தீவிரியும்.  (சங்கீதம்  38:22)

en  iradchippaagiya  aa'ndavarea,  enakkuch  sagaayagnseyyath  theeviriyum.  (sanggeetham  38:22)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!