Tuesday, June 14, 2016

Sanggeetham 37 | சங்கீதம் 37 | Psalms 37

பொல்லாதவர்களைக்குறித்து  எரிச்சலடையாதே;  நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல்  பொறாமைகொள்ளாதே.  (சங்கீதம்  37:1)

pollaathavarga'laikku’riththu  erichchaladaiyaathea;  niyaayakkeaduseygi’ravarga'lmeal  po’raamaiko'l'laathea.  (sanggeetham  37:1)

அவர்கள்  புல்லைப்போல்  சீக்கிரமாய்  அறுப்புண்டு,  பசும்பூண்டைப்போல்  வாடிப்போவார்கள்.  (சங்கீதம்  37:2)

avarga'l  pullaippoal  seekkiramaay  a’ruppu'ndu,  pasumpoo'ndaippoal  vaadippoavaarga'l.  (sanggeetham  37:2)

கர்த்தரை  நம்பி  நன்மைசெய்;  தேசத்தில்  குடியிருந்து  சத்தியத்தை  மேய்ந்துகொள்.  (சங்கீதம்  37:3)

karththarai  nambi  nanmaisey;  theasaththil  kudiyirunthu  saththiyaththai  meaynthuko'l.  (sanggeetham  37:3)

கர்த்தரிடத்தில்  மனமகிழ்ச்சியாயிரு;  அவர்  உன்  இருதயத்தின்  வேண்டுதல்களை  உனக்கு  அருள்செய்வார்.  (சங்கீதம்  37:4)

karththaridaththil  manamagizhchchiyaayiru;  avar  un  iruthayaththin  vea'nduthalga'lai  unakku  aru'lseyvaar.  (sanggeetham  37:4)

உன்  வழியைக்  கர்த்தருக்கு  ஒப்புவித்து,  அவர்மேல்  நம்பிக்கையாயிரு;  அவரே  காரியத்தை  வாய்க்கப்பண்ணுவார்.  (சங்கீதம்  37:5)

un  vazhiyaik  karththarukku  oppuviththu,  avarmeal  nambikkaiyaayiru;  avarea  kaariyaththai  vaaykkappa'n'nuvaar.  (sanggeetham  37:5)

உன்  நீதியை  வெளிச்சத்தைப்போலவும்,  உன்  நியாயத்தைப்  பட்டப்பகலைப்போலவும்  விளங்கப்பண்ணுவார்.  (சங்கீதம்  37:6)

un  neethiyai  ve'lichchaththaippoalavum,  un  niyaayaththaip  pattappagalaippoalavum  vi'langgappa'n'nuvaar.  (sanggeetham  37:6)

கர்த்தரை  நோக்கி  அமர்ந்து,  அவருக்குக்  காத்திரு;  காரியசித்தியுள்ளவன்மேலும்  தீவினைகளைச்  செய்கிற  மனுஷன்மேலும்  எரிச்சலாகாதே.  (சங்கீதம்  37:7)

karththarai  noakki  amarnthu,  avarukkuk  kaaththiru;  kaariyasiththiyu'l'lavanmealum  theevinaiga'laich  seygi’ra  manushanmealum  erichchalaagaathea.  (sanggeetham  37:7)

கோபத்தை  நெகிழ்ந்து,  உக்கிரத்தை  விட்டுவிடு;  பொல்லாப்புச்செய்ய  ஏதுவான  எரிச்சல்  உனக்கு  வேண்டாம்.  (சங்கீதம்  37:8)

koabaththai  negizhnthu,  ukkiraththai  vittuvidu;  pollaappuchseyya  eathuvaana  erichchal  unakku  vea'ndaam.  (sanggeetham  37:8)

பொல்லாதவர்கள்  அறுப்புண்டுபோவார்கள்;  கர்த்தருக்குக்  காத்திருக்கிறவர்களோ  பூமியைச்  சுதந்தரித்துக்கொள்வார்கள்.  (சங்கீதம்  37:9)

pollaathavarga'l  a’ruppu'ndupoavaarga'l;  karththarukkuk  kaaththirukki’ravarga'loa  boomiyaich  suthanthariththukko'lvaarga'l.  (sanggeetham  37:9)

இன்னுங்  கொஞ்சநேரந்தான்,  அப்போது  துன்மார்க்கன்  இரான்;  அவன்  ஸ்தானத்தை  உற்று  விசாரித்தாயானால்  அவன்  இல்லை.  (சங்கீதம்  37:10)

innung  kognchanearanthaan,  appoathu  thunmaarkkan  iraan;  avan  sthaanaththai  ut’ru  visaariththaayaanaal  avan  illai.  (sanggeetham  37:10)

சாந்தகுணமுள்ளவர்கள்  பூமியைச்  சுதந்தரித்து,  மிகுந்த  சமாதானத்தினால்  மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.  (சங்கீதம்  37:11)

saanthaku'namu'l'lavarga'l  boomiyaich  suthanthariththu,  miguntha  samaathaanaththinaal  manamagizhchchiyaayiruppaarga'l.  (sanggeetham  37:11)

துன்மார்க்கன்  நீதிமானுக்கு  விரோதமாய்த்  தீங்கு  நினைத்து,  அவன்பேரில்  பற்கடிக்கிறான்.  (சங்கீதம்  37:12)

thunmaarkkan  neethimaanukku  viroathamaayth  theenggu  ninaiththu,  avanpearil  pa’rkadikki’raan.  (sanggeetham  37:12)

ஆண்டவர்  அவனைப்பார்த்து  நகைக்கிறார்;  அவனுடைய  நாள்  வருகிறதென்று  காண்கிறார்.  (சங்கீதம்  37:13)

aa'ndavar  avanaippaarththu  nagaikki’raar;  avanudaiya  naa'l  varugi’rathen’ru  kaa'ngi’raar.  (sanggeetham  37:13)

சிறுமையும்  எளிமையுமானவனை  மடிவிக்கவும்,  செம்மை  மார்க்கத்தாரை  விழப்பண்ணவும்,  துன்மார்க்கர்  பட்டயத்தை  உருவி,  தங்கள்  வில்லை  நாணேற்றுகிறார்கள்.  (சங்கீதம்  37:14)

si’rumaiyum  e'limaiyumaanavanai  madivikkavum,  semmai  maarkkaththaarai  vizhappa'n'navum,  thunmaarkkar  pattayaththai  uruvi,  thangga'l  villai  naa'neat’rugi’raarga'l.  (sanggeetham  37:14)

ஆனாலும்  அவர்கள்  பட்டயம்  அவர்களுடைய  இருதயத்திற்குள்  உருவிப்போம்;  அவர்கள்  வில்லுகள்  முறியும்.  (சங்கீதம்  37:15)

aanaalum  avarga'l  pattayam  avarga'ludaiya  iruthayaththi’rku'l  uruvippoam;  avarga'l  villuga'l  mu’riyum.  (sanggeetham  37:15)

அநேக  துன்மார்க்கருக்குள்ள  செல்வத்திரட்சியைப்பார்க்கிலும்,  நீதிமானுக்குள்ள  கொஞ்சமே  நல்லது.  (சங்கீதம்  37:16)

aneaga  thunmaarkkarukku'l'la  selvaththiradchiyaippaarkkilum,  neethimaanukku'l'la  kognchamea  nallathu.  (sanggeetham  37:16)

துன்மார்க்கருடைய  புயங்கள்  முறியும்;  நீதிமான்களையோ  கர்த்தர்  தாங்குகிறார்.  (சங்கீதம்  37:17)

thunmaarkkarudaiya  puyangga'l  mu’riyum;  neethimaanga'laiyoa  karththar  thaanggugi’raar.  (sanggeetham  37:17)

உத்தமர்களின்  நாட்களைக்  கர்த்தர்  அறிந்திருக்கிறார்;  அவர்கள்  சுதந்தரம்  என்றென்றைக்கும்  இருக்கும்.  (சங்கீதம்  37:18)

uththamarga'lin  naadka'laik  karththar  a’rinthirukki’raar;  avarga'l  suthantharam  en’ren’raikkum  irukkum.  (sanggeetham  37:18)

அவர்கள்  ஆபத்துக்காலத்திலே  வெட்கப்பட்டுப்போகாதிருந்து,  பஞ்சகாலத்திலே  திருப்தியடைவார்கள்.  (சங்கீதம்  37:19)

avarga'l  aabaththukkaalaththilea  vedkappattuppoagaathirunthu,  pagnchakaalaththilea  thirupthiyadaivaarga'l.  (sanggeetham  37:19)

துன்மார்க்கரோ  அழிந்துபோவார்கள்,  கர்த்தருடைய  சத்துருக்கள்  ஆட்டுக்குட்டிகளின்  நிணத்தைப்போல்  புகைந்துபோவார்கள்,  அவர்கள்  புகையாய்ப்  புகைந்துபோவார்கள்.  (சங்கீதம்  37:20)

thunmaarkkaroa  azhinthupoavaarga'l,  karththarudaiya  saththurukka'l  aattukkuttiga'lin  ni'naththaippoal  pugainthupoavaarga'l,  avarga'l  pugaiyaayp  pugainthupoavaarga'l.  (sanggeetham  37:20)

துன்மார்க்கன்  கடன்வாங்கிச்  செலுத்தாமற்போகிறான்;  நீதிமானோ  இரங்கிக்கொடுக்கிறான்.  (சங்கீதம்  37:21)

thunmaarkkan  kadanvaanggich  seluththaama’rpoagi’raan;  neethimaanoa  iranggikkodukki’raan.  (sanggeetham  37:21)

அவரால்  ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்  பூமியைச்  சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்;  அவரால்  சபிக்கப்பட்டவர்களோ  அறுப்புண்டுபோவார்கள்.  (சங்கீதம்  37:22)

avaraal  aaseervathikkappattavarga'l  boomiyaich  suthanthariththukko'l'luvaarga'l;  avaraal  sabikkappattavarga'loa  a’ruppu'ndupoavaarga'l.  (sanggeetham  37:22)

நல்ல  மனுஷனுடைய  நடைகள்  கர்த்தரால்  உறுதிப்படும்,  அவனுடைய  வழியின்மேல்  அவர்  பிரியமாயிருக்கிறார்.  (சங்கீதம்  37:23)

nalla  manushanudaiya  nadaiga'l  karththaraal  u’ruthippadum,  avanudaiya  vazhiyinmeal  avar  piriyamaayirukki’raar.  (sanggeetham  37:23)

அவன்  விழுந்தாலும்  தள்ளுண்டு  போவதில்லை;  கர்த்தர்  தமது  கையினால்  அவனைத்  தாங்குகிறார்.  (சங்கீதம்  37:24)

avan  vizhunthaalum  tha'l'lu'ndu  poavathillai;  karththar  thamathu  kaiyinaal  avanaith  thaanggugi’raar.  (sanggeetham  37:24)

நான்  இளைஞனாயிருந்தேன்,  முதிர்வயதுள்ளவனுமானேன்;  ஆனாலும்  நீதிமான்  கைவிடப்பட்டதையும்,  அவன்  சந்ததி  அப்பத்துக்கு  இரந்துதிரிகிறதையும்  நான்  காணவில்லை.  (சங்கீதம்  37:25)

naan  i'laignanaayirunthean,  muthirvayathu'l'lavanumaanean;  aanaalum  neethimaan  kaividappattathaiyum,  avan  santhathi  appaththukku  iranthuthirigi’rathaiyum  naan  kaa'navillai.  (sanggeetham  37:25)

அவன்  நித்தம்  இரங்கிக்  கடன்  கொடுக்கிறான்,  அவன்  சந்ததி  ஆசீர்வதிக்கப்படும்.  (சங்கீதம்  37:26)

avan  niththam  iranggik  kadan  kodukki’raan,  avan  santhathi  aaseervathikkappadum.  (sanggeetham  37:26)

தீமையை  விட்டு  விலகி,  நன்மைசெய்;  என்றென்றைக்கும்  நிலைத்திருப்பாய்.  (சங்கீதம்  37:27)

theemaiyai  vittu  vilagi,  nanmaisey;  en’ren’raikkum  nilaiththiruppaay.  (sanggeetham  37:27)

கர்த்தர்  நியாயத்தை  விரும்புகிறவர்;  அவர்  தமது  பரிசுத்தவான்களைக்  கைவிடுவதில்லை;  அவர்கள்  என்றைக்கும்  காக்கப்படுவார்கள்;  துன்மார்க்கருடைய  சந்ததியோ  அறுப்புண்டுபோம்.  (சங்கீதம்  37:28)

karththar  niyaayaththai  virumbugi’ravar;  avar  thamathu  parisuththavaanga'laik  kaividuvathillai;  avarga'l  en’raikkum  kaakkappaduvaarga'l;  thunmaarkkarudaiya  santhathiyoa  a’ruppu'ndupoam.  (sanggeetham  37:28)

நீதிமான்கள்  பூமியைச்  சுதந்தரித்துக்கொண்டு,  என்றைக்கும்  அதிலே  வாசமாயிருப்பார்கள்.  (சங்கீதம்  37:29)

neethimaanga'l  boomiyaich  suthanthariththukko'ndu,  en’raikkum  athilea  vaasamaayiruppaarga'l.  (sanggeetham  37:29)

நீதிமானுடைய  வாய்  ஞானத்தை  உரைத்து,  அவனுடைய  நாவு  நியாயத்தைப்  பேசும்.  (சங்கீதம்  37:30)

neethimaanudaiya  vaay  gnaanaththai  uraiththu,  avanudaiya  naavu  niyaayaththaip  peasum.  (sanggeetham  37:30)

அவனுடைய  தேவன்  அருளிய  வேதம்  அவன்  இருதயத்தில்  இருக்கிறது;  அவன்  நடைகளில்  ஒன்றும்  பிசகுவதில்லை.  (சங்கீதம்  37:31)

avanudaiya  theavan  aru'liya  veatham  avan  iruthayaththil  irukki’rathu;  avan  nadaiga'lil  on’rum  pisaguvathillai.  (sanggeetham  37:31)

துன்மார்க்கன்  நீதிமான்மேல்  கண்வைத்து,  அவனைக்  கொல்ல  வகைதேடுகிறான்.  (சங்கீதம்  37:32)

thunmaarkkan  neethimaanmeal  ka'nvaiththu,  avanaik  kolla  vagaitheadugi’raan.  (sanggeetham  37:32)

கர்த்தரோ  அவனை  இவன்  கையில்  விடுவதில்லை;  அவன்  நியாயம்  விசாரிக்கப்படுகையில்,  அவனை  ஆக்கினைக்குள்ளாகத்  தீர்ப்பதுமில்லை.  (சங்கீதம்  37:33)

karththaroa  avanai  ivan  kaiyil  viduvathillai;  avan  niyaayam  visaarikkappadugaiyil,  avanai  aakkinaikku'l'laagath  theerppathumillai.  (sanggeetham  37:33)

நீ  கர்த்தருக்குக்  காத்திருந்து,  அவருடைய  வழியைக்  கைக்கொள்;  அப்பொழுது  நீ  பூமியைச்  சுதந்தரித்துக்கொள்வதற்கு  அவர்  உன்னை  உயர்த்துவார்;  துன்மார்க்கர்  அறுப்புண்டுபோவதை  நீ  காண்பாய்.  (சங்கீதம்  37:34)

nee  karththarukkuk  kaaththirunthu,  avarudaiya  vazhiyaik  kaikko'l;  appozhuthu  nee  boomiyaich  suthanthariththukko'lvatha’rku  avar  unnai  uyarththuvaar;  thunmaarkkar  a’ruppu'ndupoavathai  nee  kaa'nbaay.  (sanggeetham  37:34)

கொடிய  பலவந்தனான  ஒரு  துன்மார்க்கனைக்  கண்டேன்,  அவன்  தனக்கேற்ற  நிலத்தில்  முளைத்திருக்கிற  பச்சைமரத்தைப்போல்  தழைத்தவனாயிருந்தான்.  (சங்கீதம்  37:35)

kodiya  balavanthanaana  oru  thunmaarkkanaik  ka'ndean,  avan  thanakkeat’ra  nilaththil  mu'laiththirukki’ra  pachchaimaraththaippoal  thazhaiththavanaayirunthaan.  (sanggeetham  37:35)

ஆனாலும்  அவன்  ஒழிந்துபோனான்;  பாருங்கள்,  அவன்  இல்லை;  அவனைத்  தேடினேன்,  அவன்  காணப்படவில்லை.  (சங்கீதம்  37:36)

aanaalum  avan  ozhinthupoanaan;  paarungga'l,  avan  illai;  avanaith  theadinean,  avan  kaa'nappadavillai.  (sanggeetham  37:36)

நீ  உத்தமனை  நோக்கி,  செம்மையானவனைப்  பார்த்திரு;  அந்த  மனுஷனுடைய  முடிவு  சமாதானம்.  (சங்கீதம்  37:37)

nee  uththamanai  noakki,  semmaiyaanavanaip  paarththiru;  antha  manushanudaiya  mudivu  samaathaanam.  (sanggeetham  37:37)

அக்கிரமக்காரர்  ஏகமாய்  அழிக்கப்படுவார்கள்;  அறுப்புண்டுபோவதே  துன்மார்க்கரின்  முடிவு.  (சங்கீதம்  37:38)

akkiramakkaarar  eagamaay  azhikkappaduvaarga'l;  a’ruppu'ndupoavathea  thunmaarkkarin  mudivu.  (sanggeetham  37:38)

நீதிமான்களுடைய  இரட்சிப்பு  கர்த்தரால்  வரும்;  இக்கட்டுக்காலத்தில்  அவரே  அவர்கள்  அடைக்கலம்.  (சங்கீதம்  37:39)

neethimaanga'ludaiya  iradchippu  karththaraal  varum;  ikkattukkaalaththil  avarea  avarga'l  adaikkalam.  (sanggeetham  37:39)

கர்த்தர்  அவர்களுக்கு  உதவிசெய்து,  அவர்களை  விடுவிப்பார்;  அவர்கள்  அவரை  நம்பியிருக்கிறபடியால்,  அவர்களைத்  துன்மார்க்கருடைய  கைக்குத்  தப்புவித்து  இரட்சிப்பார்.  (சங்கீதம்  37:40)

karththar  avarga'lukku  uthaviseythu,  avarga'lai  viduvippaar;  avarga'l  avarai  nambiyirukki’rapadiyaal,  avarga'laith  thunmaarkkarudaiya  kaikkuth  thappuviththu  iradchippaar.  (sanggeetham  37:40)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!