கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே
வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும். (சங்கீதம்
35:1)
karththaavea, neer en vazhakkaa'liga'loadea vazhakkaadi,
ennoadu yuththampa'n'nugi’ravarga'loadea yuththampa'n'num. (sanggeetham
35:1)
நீர் கேடகத்தையும்
பரிசையையும் பிடித்து, எனக்கு
ஒத்தாசையாக எழுந்துநில்லும். (சங்கீதம்
35:2)
neer keadagaththaiyum parisaiyaiyum pidiththu,
enakku oththaasaiyaaga ezhunthunillum. (sanggeetham
35:2)
என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்துநின்று, ஈட்டியையோங்கி
அவர்களை மறித்து: நான் உன் இரட்சிப்பு
என்று என் ஆத்துமாவுக்குச் சொல்லும்.
(சங்கீதம் 35:3)
ennaith thunbappaduththugi’ravarga'loadu ethirththunin’ru, eettiyaiyoanggi avarga'lai ma’riththu: naan un iradchippu en’ru en aaththumaavukkuch
sollum. (sanggeetham
35:3)
என் பிராணனை
வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக; எனக்குத்
தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் நாணமடைவார்களாக. (சங்கீதம்
35:4)
en piraa'nanai
vaanggaththeadugi’ravarga'l vedkappattuk kalangguvaarga'laaga; enakkuth theengguseyya ninaikki’ravarga'l naa'namadaivaarga'laaga. (sanggeetham
35:4)
அவர்கள் காற்றுமுகத்தில் பறக்கும்
பதரைப்போலாவார்களாக; கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக.
(சங்கீதம் 35:5)
avarga'l kaat’rumugaththil pa’rakkum patharaippoalaavaarga'laaga; karththarudaiya thoothan
avarga'laith thuraththuvaanaaga. (sanggeetham
35:5)
அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாயிருப்பதாக; கர்த்தருடைய
தூதன் அவர்களைப் பின்தொடருவானாக. (சங்கீதம்
35:6)
avarga'ludaiya vazhi iru'lum sa’rukkalumaayiruppathaaga; karththarudaiya thoothan
avarga'laip pinthodaruvaanaaga. (sanggeetham
35:6)
முகாந்தரமில்லாமல் எனக்காகத்
தங்கள் வலையைக் குழியில்
ஒளித்துவைத்தார்கள்; முகாந்தரமில்லாமல் என் ஆத்துமாவுக்குப் படுகுழி
வெட்டினார்கள். (சங்கீதம் 35:7)
mugaantharamillaamal
enakkaagath thangga'l valaiyaik
kuzhiyil o'liththuvaiththaarga'l; mugaantharamillaamal
en aaththumaavukkup padukuzhi
vettinaarga'l. (sanggeetham
35:7)
அவன் நினையாத
அழிவு அவனுக்கு வரவும்,
அவன் மறைவாய் வைத்த வலை அவனையே
பிடிக்கவுங்கடவது; அவனே அந்தக்
குழியில் விழுந்து அழிவானாக.
(சங்கீதம் 35:8)
avan ninaiyaatha
azhivu avanukku varavum,
avan ma’raivaay vaiththa
valai avanaiyea pidikkavungkadavathu; avanea
anthak kuzhiyil vizhunthu
azhivaanaaga. (sanggeetham
35:8)
என் ஆத்துமா
கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய
இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும். (சங்கீதம்
35:9)
en aaththumaa
karththaril ka'likoornthu, avarudaiya
iradchippil magizhnthirukkum. (sanggeetham
35:9)
சிறுமைப்பட்டவனை அவனிலும்
பலவானுடைய கைக்கும், சிறுமையும்
எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும்
தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும்.
(சங்கீதம் 35:10)
si’rumaippattavanai avanilum
balavaanudaiya kaikkum, si’rumaiyum e'limaiyumaanavanaik ko'l'laiyidugi’ravanudaiya kaikkum
thappuvikki’ra umakkoppaanavar yaar karththaavea, en’ru en elumbuga'lellaam sollum.
(sanggeetham 35:10)
கொடுமையான சாட்சிகள்
எழும்பி, நான் அறியாததை
என்னிடத்தில் கேட்கிறார்கள். (சங்கீதம்
35:11)
kodumaiyaana saadchiga'l ezhumbi, naan a’riyaathathai ennidaththil
keadki’raarga'l. (sanggeetham
35:11)
நான் செய்த நன்மைக்குப் பதிலாகத்
தீமைசெய்கிறார்கள்; என் ஆத்துமா
திக்கற்றுப்போகப் பார்க்கிறார்கள். (சங்கீதம்
35:12)
naan seytha nanmaikkup
bathilaagath theemaiseygi’raarga'l; en aaththumaa thikkat’ruppoagap paarkki’raarga'l. (sanggeetham
35:12)
அவர்கள் வியாதியாயிருந்தபோது இரட்டு
என் உடுப்பாயிருந்தது; நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரப்படுத்தினேன்; என் ஜெபமும் என் மடியிலே திரும்பவந்தது. (சங்கீதம்
35:13)
avarga'l viyaathiyaayirunthapoathu irattu en uduppaayirunthathu; naan ubavaasaththaal en aaththumaavai ubaththirappaduththinean; en jebamum en madiyilea
thirumbavanthathu. (sanggeetham
35:13)
நான் அவனை என் சிநேகிதனாகவும் சகோதரனாகவும்
பாவித்து நடந்துகொண்டேன்; தாய்க்காகத்
துக்கிக்கிறவனைப்போல் துக்கவஸ்திரம் தரித்துத்
தலைகவிழ்ந்து நடந்தேன். (சங்கீதம்
35:14)
naan avanai
en sineagithanaagavum sagoatharanaagavum paaviththu nadanthuko'ndean; thaaykkaagath thukkikki’ravanaippoal thukkavasthiram thariththuth
thalaikavizhnthu nadanthean. (sanggeetham
35:14)
ஆனாலும் எனக்கு
ஆபத்துண்டானபோது அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; நீசரும்
நான் அறியாதவர்களும் எனக்கு
விரோதமாய்க் கூட்டங்கூடி, ஓயாமல்
என்னை நிந்தித்தார்கள். (சங்கீதம்
35:15)
aanaalum enakku
aabaththu'ndaanapoathu avarga'l santhoashappattuk koottangkoodinaarga'l; neesarum naan a’riyaathavarga'lum enakku
viroathamaayk koottangkoodi, oayaamal ennai ninthiththaarga'l. (sanggeetham 35:15)
அப்பத்திற்காக இச்சகம்பேசுகிற பரியாசக்காரரோடே சேர்ந்துகொண்டு என்பேரில்
பற்கடிக்கிறார்கள். (சங்கீதம் 35:16)
appaththi’rkaaga ichchagampeasugi’ra pariyaasakkaararoadea searnthuko'ndu enpearil
pa’rkadikki’raarga'l. (sanggeetham 35:16)
ஆண்டவரே, எதுவரைக்கும்
இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? என் ஆத்துமாவை அழிவுக்கும்,
எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும்.
(சங்கீதம் 35:17)
aa'ndavarea, ethuvaraikkum
ithaip paarththukko'ndiruppeer? en aaththumaavai azhivukkum,
enakku arumaiyaanathaich singgakkuttiga'lukkum thappuviyum. (sanggeetham
35:17)
மகா சபையிலே
உம்மைத் துதிப்பேன்; திரளான
ஜனங்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன்.
(சங்கீதம் 35:18)
mahaa sabaiyilea ummaith
thuthippean; thira'laana janangga'lukku'l'lea ummaip
pugazhuvean. (sanggeetham
35:18)
வீணாய் எனக்குச்
சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும், முகாந்தரமில்லாமல் என்னைப்
பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும்
இருப்பார்களாக. (சங்கீதம் 35:19)
vee'naay enakkuch saththurukka'laanavarga'l ennimiththam
santhoashiyaamalum, mugaantharamillaamal ennaip
pagaikki’ravarga'l ka'n simittaamalum iruppaarga'laaga. (sanggeetham
35:19)
அவர்கள் சமாதானமாய்ப்
பேசாமல், தேசத்திலே அமைதலாயிருக்கிறவர்களுக்கு விரோதமாய்
வஞ்சகமான காரியங்களைக் கருதுகிறார்கள். (சங்கீதம்
35:20)
avarga'l samaathaanamaayp peasaamal, theasaththilea amaithalaayirukki’ravarga'lukku viroathamaay vagnchagamaana kaariyangga'laik karuthugi’raarga'l. (sanggeetham 35:20)
எனக்கு விரோதமாகத்
தங்கள் வாயை விரிவாய்த்
திறந்து, ஆ ஆ, ஆ ஆ, எங்கள் கண் கண்டது என்கிறார்கள்.
(சங்கீதம் 35:21)
enakku viroathamaagath thangga'l vaayai
virivaayth thi’ranthu, aa aa, aa aa, engga'l ka'n ka'ndathu
engi’raarga'l. (sanggeetham
35:21)
கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர்,
மவுனமாயிராதேயும்; ஆண்டவரே, எனக்குத்
தூரமாகாதேயும். (சங்கீதம் 35:22)
karththaavea, neer ithaik ka'ndeer,
mavunamaayiraatheayum; aa'ndavarea, enakkuth
thooramaagaatheayum. (sanggeetham
35:22)
என் தேவனே,
என் ஆண்டவரே, எனக்கு
நியாயஞ்செய்யவும் என் வழக்கைத்
தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும்.
(சங்கீதம் 35:23)
en theavanea,
en aa'ndavarea, enakku
niyaayagnseyyavum en vazhakkaith theerkkavum
vizhiththukko'ndu ezhuntharu'lum. (sanggeetham
35:23)
என் தேவனாகிய
கர்த்தாவே, உம்முடைய நீதியின்படி
என்னை நியாயம் விசாரியும்,
என்னைக்குறித்து அவர்களை மகிழவொட்டாதிரும். (சங்கீதம்
35:24)
en theavanaagiya karththaavea,
ummudaiya neethiyinpadi ennai niyaayam visaariyum, ennaikku’riththu avarga'lai magizhavottaathirum. (sanggeetham 35:24)
அவர்கள் தங்கள்
இருதயத்திலே: ஆ ஆ, இதுவே நாங்கள்
விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், அவனை விழுங்கிவிட்டோம் என்று பேசாதபடிக்கும் செய்யும்.
(சங்கீதம் 35:25)
avarga'l thangga'l iruthayaththilea: aa aa, ithuvea
naangga'l
virumbinathu en’ru sollaathapadikkum, avanai
vizhunggivittoam en’ru peasaathapadikkum
seyyum. (sanggeetham
35:25)
எனக்கு நேரிட்ட
ஆபத்துக்காகச் சந்தோஷிக்கிறவர்கள் ஏகமாய்
வெட்கி நாணி, எனக்கு
விரோதமாய்ப் பெருமைபாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும்
இலச்சையாலும் மூடப்படக்கடவர்கள். (சங்கீதம்
35:26)
enakku nearitta aabaththukkaagach santhoashikki’ravarga'l eagamaay vedki naa'ni,
enakku viroathamaayp perumaipaaraattugi’ravarga'l vedkaththaalum ilachchaiyaalum moodappadakkadavarga'l. (sanggeetham
35:26)
என் நீதிவிளங்க
விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து,
தமது ஊழியக்காரனுடைய சுகத்தை
விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள். (சங்கீதம்
35:27)
en neethivi'langga virumbugi’ravarga'l kembeeriththu magizhnthu, thamathu oozhiyakkaaranudaiya sugaththai virumbugi’ra karththarukku
magimai
u'ndaavathaaga en’ru eppoathum sollakkadavarga'l. (sanggeetham
35:27)
என் நாவு உமது நீதியையும்,
நாள்முழுதும் உமது துதியையும்
சொல்லிக்கொண்டிருக்கும். (சங்கீதம் 35:28)
en naavu umathu neethiyaiyum,
naa'lmuzhuthum umathu thuthiyaiyum sollikko'ndirukkum. (sanggeetham
35:28)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!