Tuesday, June 14, 2016

Sanggeetham 34 | சங்கீதம் 34 | Psalms 34

கர்த்தரை  நான்  எக்காலத்திலும்  ஸ்தோத்திரிப்பேன்;  அவர்  துதி  எப்போதும்  என்  வாயிலிருக்கும்.  (சங்கீதம்  34:1)

karththarai  naan  ekkaalaththilum  sthoaththirippean;  avar  thuthi  eppoathum  en  vaayilirukkum.  (sanggeetham  34:1)

கர்த்தருக்குள்  என்  ஆத்துமா  மேன்மைபாராட்டும்;  சிறுமைப்பட்டவர்கள்  அதைக்கேட்டு  மகிழுவார்கள்.  (சங்கீதம்  34:2)

karththarukku'l  en  aaththumaa  meanmaipaaraattum;  si’rumaippattavarga'l  athaikkeattu  magizhuvaarga'l.  (sanggeetham  34:2)

என்னோடேகூடக்  கர்த்தரை  மகிமைப்படுத்துங்கள்;  நாம்  ஒருமித்து  அவர்  நாமத்தை  உயர்த்துவோமாக.  (சங்கீதம்  34:3)

ennoadeakoodak  karththarai  magimaippaduththungga'l;  naam  orumiththu  avar  naamaththai  uyarththuvoamaaga.  (sanggeetham  34:3)

நான்  கர்த்தரைத்  தேடினேன்,  அவர்  எனக்குச்  செவிகொடுத்து,  என்னுடைய  எல்லாப்  பயத்துக்கும்  என்னை  நீங்கலாக்கிவிட்டார்.  (சங்கீதம்  34:4)

naan  karththaraith  theadinean,  avar  enakkuch  sevikoduththu,  ennudaiya  ellaap  bayaththukkum  ennai  neenggalaakkivittaar.  (sanggeetham  34:4)

அவர்கள்  அவரை  நோக்கிப்பார்த்துப்  பிரகாசமடைந்தார்கள்;  அவர்கள்  முகங்கள்  வெட்கப்படவில்லை.  (சங்கீதம்  34:5)

avarga'l  avarai  noakkippaarththup  piragaasamadainthaarga'l;  avarga'l  mugangga'l  vedkappadavillai.  (sanggeetham  34:5)

இந்த  ஏழை  கூப்பிட்டான்,  கர்த்தர்  கேட்டு,  அவனை  அவன்  இடுக்கண்களுக்கெல்லாம்  நீங்கலாக்கி  இரட்சித்தார்.  (சங்கீதம்  34:6)

intha  eazhai  kooppittaan,  karththar  keattu,  avanai  avan  idukka'nga'lukkellaam  neenggalaakki  iradchiththaar.  (sanggeetham  34:6)

கர்த்தருடைய  தூதன்  அவருக்குப்  பயந்தவர்களைச்  சூழப்  பாளயமிறங்கி  அவர்களை  விடுவிக்கிறார்.  (சங்கீதம்  34:7)

karththarudaiya  thoothan  avarukkup  bayanthavarga'laich  soozhap  paa'layami’ranggi  avarga'lai  viduvikki’raar.  (sanggeetham  34:7)

கர்த்தர்  நல்லவர்  என்பதை  ருசித்துப்பாருங்கள்;  அவர்மேல்  நம்பிக்கையாயிருக்கிற  மனுஷன்  பாக்கியவான்.  (சங்கீதம்  34:8)

karththar  nallavar  enbathai  rusiththuppaarungga'l;  avarmeal  nambikkaiyaayirukki’ra  manushan  baakkiyavaan.  (sanggeetham  34:8)

கர்த்தருடைய  பரிசுத்தவான்களே,  அவருக்குப்  பயந்திருங்கள்;  அவருக்குப்  பயந்தவர்களுக்குக்  குறைவில்லை.  (சங்கீதம்  34:9)

karththarudaiya  parisuththavaanga'lea,  avarukkup  bayanthirungga'l;  avarukkup  bayanthavarga'lukkuk  ku’raivillai.  (sanggeetham  34:9)

சிங்கக்குட்டிகள்  தாழ்ச்சியடைந்து  பட்டினியாயிருக்கும்;  கர்த்தரைத்  தேடுகிறவர்களுக்கோ  ஒரு  நன்மையுங்  குறைவுபடாது.  (சங்கீதம்  34:10)

singgakkuttiga'l  thaazhchchiyadainthu  pattiniyaayirukkum;  karththaraith  theadugi’ravarga'lukkoa  oru  nanmaiyung  ku’raivupadaathu.  (sanggeetham  34:10)

பிள்ளைகளே,  வந்து  எனக்குச்  செவிகொடுங்கள்;  கர்த்தருக்குப்  பயப்படுதலை  உங்களுக்குப்  போதிப்பேன்.  (சங்கீதம்  34:11)

pi'l'laiga'lea,  vanthu  enakkuch  sevikodungga'l;  karththarukkup  bayappaduthalai  ungga'lukkup  poathippean.  (sanggeetham  34:11)

நன்மையைக்  காணும்படி,  ஜீவனை  விரும்பி,  நீடித்த  நாட்களை  அபேட்சிக்கிற  மனுஷன்  யார்?  (சங்கீதம்  34:12)

nanmaiyaik  kaa'numpadi,  jeevanai  virumbi,  neediththa  naadka'lai  abeadchikki’ra  manushan  yaar?  (sanggeetham  34:12)

உன்  நாவைப்  பொல்லாப்புக்கும்,  உன்  உதடுகளைக்  கபட்டுவசனிப்புக்கும்  விலக்கிக்  காத்துக்கொள்.  (சங்கீதம்  34:13)

un  naavaip  pollaappukkum,  un  uthaduga'laik  kabattuvasanippukkum  vilakkik  kaaththukko'l.  (sanggeetham  34:13)

தீமையை  விட்டு  விலகி,  நன்மைசெய்;  சமாதானத்தைத்  தேடி,  அதைத்  தொடர்ந்துகொள்.  (சங்கீதம்  34:14)

theemaiyai  vittu  vilagi,  nanmaisey;  samaathaanaththaith  theadi,  athaith  thodarnthuko'l.  (sanggeetham  34:14)

கர்த்தருடைய  கண்கள்  நீதிமான்கள்மேல்  நோக்கமாயிருக்கிறது;  அவருடைய  செவிகள்  அவர்கள்  கூப்பிடுதலுக்குத்  திறந்திருக்கிறது.  (சங்கீதம்  34:15)

karththarudaiya  ka'nga'l  neethimaanga'lmeal  noakkamaayirukki’rathu;  avarudaiya  seviga'l  avarga'l  kooppiduthalukkuth  thi’ranthirukki’rathu.  (sanggeetham  34:15)

தீமைசெய்கிறவர்களுடைய  பேரைப்  பூமியில்  இராமல்  அற்றுப்போகப்பண்ண,  கர்த்தருடைய  முகம்  அவர்களுக்கு  விரோதமாயிருக்கிறது.  (சங்கீதம்  34:16)

theemaiseygi’ravarga'ludaiya  pearaip  boomiyil  iraamal  at’ruppoagappa'n'na,  karththarudaiya  mugam  avarga'lukku  viroathamaayirukki’rathu.  (sanggeetham  34:16)

நீதிமான்கள்  கூப்பிடும்போது  கர்த்தர்  கேட்டு,  அவர்களை  அவர்களுடைய  எல்லா  உபத்திரவங்களுக்கும்  நீங்கலாக்கிவிடுகிறார்.  (சங்கீதம்  34:17)

neethimaanga'l  kooppidumpoathu  karththar  keattu,  avarga'lai  avarga'ludaiya  ellaa  ubaththiravangga'lukkum  neenggalaakkividugi’raar.  (sanggeetham  34:17)

நொறுங்குண்ட  இருதயமுள்ளவர்களுக்குக்  கர்த்தர்  சமீபமாயிருந்து,  நருங்குண்ட  ஆவியுள்ளவர்களை  இரட்சிக்கிறார்.  (சங்கீதம்  34:18)

no’runggu'nda  iruthayamu'l'lavarga'lukkuk  karththar  sameebamaayirunthu,  narunggu'nda  aaviyu'l'lavarga'lai  iradchikki’raar.  (sanggeetham  34:18)

நீதிமானுக்கு  வரும்  துன்பங்கள்  அநேகமாயிருக்கும்,  கர்த்தர்  அவைகளெல்லாவற்றிலும்  நின்று  அவனை  விடுவிப்பார்.  (சங்கீதம்  34:19)

neethimaanukku  varum  thunbangga'l  aneagamaayirukkum,  karththar  avaiga'lellaavat’rilum  nin’ru  avanai  viduvippaar.  (sanggeetham  34:19)

அவனுடைய  எலும்புகளையெல்லாம்  காப்பாற்றுகிறார்;  அவைகளில்  ஒன்றும்  முறிக்கப்படுவதில்லை.  (சங்கீதம்  34:20)

avanudaiya  elumbuga'laiyellaam  kaappaat’rugi’raar;  avaiga'lil  on’rum  mu’rikkappaduvathillai.  (sanggeetham  34:20)

தீமை  துன்மார்க்கனைக்  கொல்லும்;  நீதிமானைப்  பகைக்கிறவர்கள்  குற்றவாளிகளாவார்கள்.  (சங்கீதம்  34:21)

theemai  thunmaarkkanaik  kollum;  neethimaanaip  pagaikki’ravarga'l  kut’ravaa'liga'laavaarga'l.  (sanggeetham  34:21)

கர்த்தர்  தமது  ஊழியக்காரரின்  ஆத்துமாவை  மீட்டுக்கொள்ளுகிறார்;  அவரை  நம்புகிற  ஒருவன்மேலும்  குற்றஞ்சுமராது.  (சங்கீதம்  34:22)

karththar  thamathu  oozhiyakkaararin  aaththumaavai  meettukko'l'lugi’raar;  avarai  nambugi’ra  oruvanmealum  kut’ragnsumaraathu.  (sanggeetham  34:22)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!