Tuesday, June 14, 2016

Sanggeetham 33 | சங்கீதம் 33 | Psalms 33

நீதிமான்களே,  கர்த்தருக்குள்  களிகூருங்கள்;  துதிசெய்வது  செம்மையானவர்களுக்குத்  தகும்.  (சங்கீதம்  33:1)

neethimaanga'lea,  karththarukku'l  ka'likoorungga'l;  thuthiseyvathu  semmaiyaanavarga'lukkuth  thagum.  (sanggeetham  33:1)

சுரமண்டலத்தினால்  கர்த்தரைத்  துதித்து,  பத்து  நரம்பு  வீணையினாலும்  அவரைக்  கீர்த்தனம்பண்ணுங்கள்.  (சங்கீதம்  33:2)

surama'ndalaththinaal  karththaraith  thuthiththu,  paththu  narambu  vee'naiyinaalum  avaraik  keerththanampa'n'nungga'l.  (sanggeetham  33:2)

அவருக்குப்  புதுப்பாட்டைப்  பாடுங்கள்;  ஆனந்தசத்தத்தோடே  வாத்தியங்களை  நேர்த்தியாய்  வாசியுங்கள்.  (சங்கீதம்  33:3)

avarukkup  puthuppaattaip  paadungga'l;  aananthasaththaththoadea  vaaththiyangga'lai  nearththiyaay  vaasiyungga'l.  (sanggeetham  33:3)

கர்த்தருடைய  வார்த்தை  உத்தமமும்,  அவருடைய  செய்கையெல்லாம்  சத்தியமுமாயிருக்கிறது.  (சங்கீதம்  33:4)

karththarudaiya  vaarththai  uththamamum,  avarudaiya  seygaiyellaam  saththiyamumaayirukki’rathu.  (sanggeetham  33:4)

அவர்  நீதியிலும்  நியாயத்திலும்  பிரியப்படுகிறார்;  பூமி  கர்த்தருடைய  காருணியத்தினால்  நிறைந்திருக்கிறது.  (சங்கீதம்  33:5)

avar  neethiyilum  niyaayaththilum  piriyappadugi’raar;  boomi  karththarudaiya  kaaru'niyaththinaal  ni’rainthirukki’rathu.  (sanggeetham  33:5)

கர்த்தருடைய  வார்த்தையினால்  வானங்களும்,  அவருடைய  வாயின்  சுவாசத்தினால்  அவைகளின்  சர்வசேனையும்  உண்டாக்கப்பட்டது.  (சங்கீதம்  33:6)

karththarudaiya  vaarththaiyinaal  vaanangga'lum,  avarudaiya  vaayin  suvaasaththinaal  avaiga'lin  sarvaseanaiyum  u'ndaakkappattathu.  (sanggeetham  33:6)

அவர்  சமுத்திர  ஜலங்களைக்  குவியலாகச்  சேர்த்து,  ஆழமான  ஜலங்களைப்  பொக்கிஷவைப்பாக  வைக்கிறார்.  (சங்கீதம்  33:7)

avar  samuththira  jalangga'laik  kuviyalaagach  searththu,  aazhamaana  jalangga'laip  pokkishavaippaaga  vaikki’raar.  (sanggeetham  33:7)

பூமியெல்லாம்  கர்த்தருக்குப்  பயப்படுவதாக;  உலகத்திலுள்ள  குடிகளெல்லாம்  அவருக்கு  அஞ்சியிருப்பதாக.  (சங்கீதம்  33:8)

boomiyellaam  karththarukkup  bayappaduvathaaga;  ulagaththilu'l'la  kudiga'lellaam  avarukku  agnchiyiruppathaaga.  (sanggeetham  33:8)

அவர்  சொல்ல  ஆகும்,  அவர்  கட்டளையிட  நிற்கும்.  (சங்கீதம்  33:9)

avar  solla  aagum,  avar  katta'laiyida  ni’rkum.  (sanggeetham  33:9)

கர்த்தர்  ஜாதிகளின்  ஆலோசனையை  விருதாவாக்கி,  ஜனங்களுடைய  நினைவுகளை  அவமாக்குகிறார்.  (சங்கீதம்  33:10)

karththar  jaathiga'lin  aaloasanaiyai  viruthaavaakki,  janangga'ludaiya  ninaivuga'lai  avamaakkugi’raar.  (sanggeetham  33:10)

கர்த்தருடைய  ஆலோசனை  நித்தியகாலமாகவும்,  அவருடைய  இருதயத்தின்  நினைவுகள்  தலைமுறை  தலைமுறையாகவும்  நிற்கும்.  (சங்கீதம்  33:11)

karththarudaiya  aaloasanai  niththiyakaalamaagavum,  avarudaiya  iruthayaththin  ninaivuga'l  thalaimu’rai  thalaimu’raiyaagavum  ni’rkum.  (sanggeetham  33:11)

கர்த்தரைத்  தங்களுக்குத்  தெய்வமாகக்கொண்ட  ஜாதியும்,  அவர்  தமக்குச்  சுதந்தரமாகத்  தெரிந்துகொண்ட  ஜனமும்  பாக்கியமுள்ளது.  (சங்கீதம்  33:12)

karththaraith  thangga'lukkuth  theyvamaagakko'nda  jaathiyum,  avar  thamakkuch  suthantharamaagath  therinthuko'nda  janamum  baakkiyamu'l'lathu.  (sanggeetham  33:12)

கர்த்தர்  வானத்திலிருந்து  நோக்கிப்பார்த்து,  எல்லா  மனுபுத்திரரையும்  காண்கிறார்.  (சங்கீதம்  33:13)

karththar  vaanaththilirunthu  noakkippaarththu,  ellaa  manupuththiraraiyum  kaa'ngi’raar.  (sanggeetham  33:13)

தாம்  வாசமாயிருக்கிற  ஸ்தானத்திலிருந்து  பூமியின்  குடிகள்  எல்லார்மேலும்  கண்ணோக்கமாயிருக்கிறார்.  (சங்கீதம்  33:14)

thaam  vaasamaayirukki’ra  sthaanaththilirunthu  boomiyin  kudiga'l  ellaarmealum  ka'n'noakkamaayirukki’raar.  (sanggeetham  33:14)

அவர்களுடைய  இருதயங்களையெல்லாம்  அவர்  உருவாக்கி,  அவர்கள்  செய்கைகளையெல்லாம்  கவனித்திருக்கிறார்.  (சங்கீதம்  33:15)

avarga'ludaiya  iruthayangga'laiyellaam  avar  uruvaakki,  avarga'l  seygaiga'laiyellaam  kavaniththirukki’raar.  (sanggeetham  33:15)

எந்த  ராஜாவும்  தன்  சேனையின்  மிகுதியால்  இரட்சிக்கப்படான்;  சவுரியவானும்  தன்  பலத்தின்  மிகுதியால்  தப்பான்.  (சங்கீதம்  33:16)

entha  raajaavum  than  seanaiyin  miguthiyaal  iradchikkappadaan;  savuriyavaanum  than  balaththin  miguthiyaal  thappaan.  (sanggeetham  33:16)

இரட்சிக்கிறதற்குக்  குதிரை  விருதா;  அது  தன்  மிகுந்த  வீரியத்தால்  தப்புவியாது.  (சங்கீதம்  33:17)

iradchikki’ratha’rkuk  kuthirai  viruthaa;  athu  than  miguntha  veeriyaththaal  thappuviyaathu.  (sanggeetham  33:17)

தமக்குப்  பயந்து,  தமது  கிருபைக்குக்  காத்திருக்கிறவர்களின்  ஆத்துமாக்களை  மரணத்திற்கு  விலக்கி  விடுவிக்கவும்;  (சங்கீதம்  33:18)

thamakkup  bayanthu,  thamathu  kirubaikkuk  kaaththirukki’ravarga'lin  aaththumaakka'lai  mara'naththi’rku  vilakki  viduvikkavum;  (sanggeetham  33:18)

பஞ்சத்தில்  அவர்களை  உயிரோடே  காக்கவும்,  கர்த்தருடைய  கண்  அவர்கள்மேல்  நோக்கமாயிருக்கிறது.  (சங்கீதம்  33:19)

pagnchaththil  avarga'lai  uyiroadea  kaakkavum,  karththarudaiya  ka'n  avarga'lmeal  noakkamaayirukki’rathu.  (sanggeetham  33:19)

நம்முடைய  ஆத்துமா  கர்த்தருக்குக்  காத்திருக்கிறது;  அவரே  நமக்குத்  துணையும்  நமக்குக்  கேடகமுமானவர்.  (சங்கீதம்  33:20)

nammudaiya  aaththumaa  karththarukkuk  kaaththirukki’rathu;  avarea  namakkuth  thu'naiyum  namakkuk  keadagamumaanavar.  (sanggeetham  33:20)

அவருடைய  பரிசுத்த  நாமத்தை  நாம்  நம்பியிருக்கிறபடியால்,  நம்முடைய  இருதயம்  அவருக்குள்  களிகூரும்.  (சங்கீதம்  33:21)

avarudaiya  parisuththa  naamaththai  naam  nambiyirukki’rapadiyaal,  nammudaiya  iruthayam  avarukku'l  ka'likoorum.  (sanggeetham  33:21)

கர்த்தாவே,  நாங்கள்  உம்மை  நம்பியிருக்கிறபடியே  உமது  கிருபை  எங்கள்மேல்  இருப்பதாக.  (சங்கீதம்  33:22)

karththaavea,  naangga'l  ummai  nambiyirukki’rapadiyea  umathu  kirubai  engga'lmeal  iruppathaaga.  (sanggeetham  33:22)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!