Tuesday, June 14, 2016

Sanggeetham 32 | சங்கீதம் 32 | Psalms 32

எவனுடைய  மீறுதல்  மன்னிக்கப்பட்டதோ,  எவனுடைய  பாவம்  மூடப்பட்டதோ,  அவன்  பாக்கியவான்.  (சங்கீதம்  32:1)

evanudaiya  mee’ruthal  mannikkappattathoa,  evanudaiya  paavam  moodappattathoa,  avan  baakkiyavaan.  (sanggeetham  32:1)

எவனுடைய  அக்கிரமத்தைக்  கர்த்தர்  எண்ணாதிருக்கிறாரோ,  எவனுடைய  ஆவியில்  கபடமில்லாதிருக்கிறதோ,  அவன்  பாக்கியவான்.  (சங்கீதம்  32:2)

evanudaiya  akkiramaththaik  karththar  e'n'naathirukki’raaroa,  evanudaiya  aaviyil  kabadamillaathirukki’rathoa,  avan  baakkiyavaan.  (sanggeetham  32:2)

நான்  அடக்கிவைத்தமட்டும்,  நித்தம்  என்  கதறுதலினாலே  என்  எலும்புகள்  உலர்ந்துபோயிற்று.  (சங்கீதம்  32:3)

naan  adakkivaiththamattum,  niththam  en  katha’ruthalinaalea  en  elumbuga'l  ularnthupoayit’ru.  (sanggeetham  32:3)

இரவும்  பகலும்  என்மேல்  உம்முடைய  கை  பாரமாயிருந்ததினால்,  என்  சாரம்  உஷ்ணகால  வறட்சிபோல  வறண்டுபோயிற்று.  (சேலா.)  (சங்கீதம்  32:4)

iravum  pagalum  enmeal  ummudaiya  kai  baaramaayirunthathinaal,  en  saaram  ush'nakaala  va’radchipoala  va’ra'ndupoayit’ru.  (sealaa.)  (sanggeetham  32:4)

நான்  என்  அக்கிரமத்தை  மறைக்காமல்,  என்  பாவத்தை  உமக்கு  அறிவித்தேன்;  என்  மீறுதல்களைக்  கர்த்தருக்கு  அறிக்கையிடுவேன்  என்றேன்;  தேவரீர்  என்  பாவத்தின்  தோஷத்தை  மன்னித்தீர்.  (சேலா.)  (சங்கீதம்  32:5)

naan  en  akkiramaththai  ma’raikkaamal,  en  paavaththai  umakku  a’riviththean;  en  mee’ruthalga'laik  karththarukku  a’rikkaiyiduvean  en’rean;  theavareer  en  paavaththin  thoashaththai  manniththeer.  (sealaa.)  (sanggeetham  32:5)

இதற்காகச்  சகாயங்கிடைக்குங்  காலத்தில்  பக்தியுள்ளவனெவனும்  உம்மை  நோக்கி  விண்ணப்பஞ்செய்வான்;  அப்பொழுது  மிகுந்த  ஜலப்பிரவாகம்  வந்தாலும்  அது  அவனை  அணுகாது.  (சங்கீதம்  32:6)

itha’rkaagach  sagaayangkidaikkung  kaalaththil  bakthiyu'l'lavanevanum  ummai  noakki  vi'n'nappagnseyvaan;  appozhuthu  miguntha  jalappiravaagam  vanthaalum  athu  avanai  a'nugaathu.  (sanggeetham  32:6)

நீர்  எனக்கு  மறைவிடமாயிருக்கிறீர்;  என்னை  நீர்  இக்கட்டுக்கு  விலக்கிக்காத்து,  இரட்சணியப்  பாடல்கள்  என்னைச்  சூழ்ந்துகொள்ளும்படி  செய்வீர்.  (சேலா.)  (சங்கீதம்  32:7)

neer  enakku  ma’raividamaayirukki’reer;  ennai  neer  ikkattukku  vilakkikkaaththu,  iradcha'niyap  paadalga'l  ennaich  soozhnthuko'l'lumpadi  seyveer.  (sealaa.)  (sanggeetham  32:7)

நான்  உனக்குப்  போதித்து,  நீ  நடக்கவேண்டிய  வழியை  உனக்குக்  காட்டுவேன்;  உன்மேல்  என்  கண்ணை  வைத்து,  உனக்கு  ஆலோசனை  சொல்லுவேன்.  (சங்கீதம்  32:8)

naan  unakkup  poathiththu,  nee  nadakkavea'ndiya  vazhiyai  unakkuk  kaattuvean;  unmeal  en  ka'n'nai  vaiththu,  unakku  aaloasanai  solluvean.  (sanggeetham  32:8)

வாரினாலும்  கடிவாளத்தினாலும்  வாய்கட்டப்பட்டாலொழிய,  உன்  கிட்டச்  சேராத  புத்தியில்லாக்  குதிரையைப்போலவும்  கோவேறு  கழுதையைப்போலவும்  இருக்கவேண்டாம்.  (சங்கீதம்  32:9)

vaarinaalum  kadivaa'laththinaalum  vaaykattappattaalozhiya,  un  kittach  searaatha  buththiyillaak  kuthiraiyaippoalavum  koavea’ru  kazhuthaiyaippoalavum  irukkavea'ndaam.  (sanggeetham  32:9)

துன்மார்க்கனுக்கு  அநேக  வேதனைகளுண்டு;  கர்த்தரை  நம்பியிருக்கிறவனையோ  கிருபை  சூழ்ந்துகொள்ளும்.  (சங்கீதம்  32:10)

thunmaarkkanukku  aneaga  veathanaiga'lu'ndu;  karththarai  nambiyirukki’ravanaiyoa  kirubai  soozhnthuko'l'lum.  (sanggeetham  32:10)

நீதிமான்களே,  கர்த்தருக்குள்  மகிழ்ந்து  களிகூருங்கள்;  செம்மையான  இருதயமுள்ளவர்களே,  நீங்கள்  எல்லாரும்  ஆனந்தமுழக்கமிடுங்கள்.  (சங்கீதம்  32:11)

neethimaanga'lea,  karththarukku'l  magizhnthu  ka'likoorungga'l;  semmaiyaana  iruthayamu'l'lavarga'lea,  neengga'l  ellaarum  aananthamuzhakkamidungga'l.  (sanggeetham  32:11)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!