Tuesday, June 14, 2016

Sanggeetham 31 | சங்கீதம் 31 | Psalms 31

கர்த்தாவே,  உம்மை  நம்பியிருக்கிறேன்;  நான்  ஒருக்காலும்  வெட்கமடையாதபடி  செய்யும்;  உமது  நீதியினிமித்தம்  என்னை  விடுவியும்.  (சங்கீதம்  31:1)

karththaavea,  ummai  nambiyirukki’rean;  naan  orukkaalum  vedkamadaiyaathapadi  seyyum;  umathu  neethiyinimiththam  ennai  viduviyum.  (sanggeetham  31:1)

உமது  செவியை  எனக்குச்  சாய்த்து,  சீக்கிரமாய்  என்னைத்  தப்புவியும்;  நீர்  எனக்குப்  பலத்த  துருகமும்,  எனக்கு  அடைக்கலமான  அரணுமாயிரும்.  (சங்கீதம்  31:2)

umathu  seviyai  enakkuch  saayththu,  seekkiramaay  ennaith  thappuviyum;  neer  enakkup  balaththa  thurugamum,  enakku  adaikkalamaana  ara'numaayirum.  (sanggeetham  31:2)

என்  கன்மலையும்  என்  கோட்டையும்  நீரே;  உமது  நாமத்தினிமித்தம்  எனக்கு  வழிகாட்டி,  என்னை  நடத்தியருளும்.  (சங்கீதம்  31:3)

en  kanmalaiyum  en  koattaiyum  neerea;  umathu  naamaththinimiththam  enakku  vazhikaatti,  ennai  nadaththiyaru'lum.  (sanggeetham  31:3)

அவர்கள்  எனக்கு  மறைவாய்  வைத்த  வலைக்கு  என்னை  நீங்கலாக்கிவிடும்;  தேவரீரே  எனக்கு  அரண்.  (சங்கீதம்  31:4)

avarga'l  enakku  ma’raivaay  vaiththa  valaikku  ennai  neenggalaakkividum;  theavareerea  enakku  ara'n.  (sanggeetham  31:4)

உமது  கையில்  என்  ஆவியை  ஒப்புவிக்கிறேன்;  சத்தியபரனாகிய  கர்த்தாவே,  நீர்  என்னை  மீட்டுக்கொண்டீர்.  (சங்கீதம்  31:5)

umathu  kaiyil  en  aaviyai  oppuvikki’rean;  saththiyaparanaagiya  karththaavea,  neer  ennai  meettukko'ndeer.  (sanggeetham  31:5)

வீண்மாயைகளைப்  பற்றிக்கொள்ளுகிறவர்களை  நான்  வெறுத்து,  கர்த்தரையே  நம்பியிருக்கிறேன்.  (சங்கீதம்  31:6)

vee'nmaayaiga'laip  pat’rikko'l'lugi’ravarga'lai  naan  ve’ruththu,  karththaraiyea  nambiyirukki’rean.  (sanggeetham  31:6)

உமது  கிருபையிலே  களிகூர்ந்து  மகிழுவேன்;  நீர்  என்  உபத்திரவத்தைப்  பார்த்து,  என்  ஆத்துமவியாகுலங்களை  அறிந்திருக்கிறீர்.  (சங்கீதம்  31:7)

umathu  kirubaiyilea  ka'likoornthu  magizhuvean;  neer  en  ubaththiravaththaip  paarththu,  en  aaththumaviyaagulangga'lai  a’rinthirukki’reer.  (sanggeetham  31:7)

சத்துருவின்  கையில்  என்னை  ஒப்புக்கொடாமல்,  என்  பாதங்களை  விசாலத்திலே  நிறுத்தினீர்.  (சங்கீதம்  31:8)

saththuruvin  kaiyil  ennai  oppukkodaamal,  en  paathangga'lai  visaalaththilea  ni’ruththineer.  (sanggeetham  31:8)

எனக்கு  இரங்கும்  கர்த்தாவே,  நான்  நெருக்கப்படுகிறேன்;  துக்கத்தினால்  என்  கண்ணும்  என்  ஆத்துமாவும்  என்  வயிறுங்கூடக்  கருகிப்போயிற்று.  (சங்கீதம்  31:9)

enakku  iranggum  karththaavea,  naan  nerukkappadugi’rean;  thukkaththinaal  en  ka'n'num  en  aaththumaavum  en  vayi’rungkoodak  karugippoayit’ru.  (sanggeetham  31:9)

என்  பிராணன்  சஞ்சலத்தினாலும்,  என்  வருஷங்கள்  தவிப்பினாலும்  கழிந்து  போயிற்று;  என்  அக்கிரமத்தினாலே  என்  பெலன்  குறைந்து,  என்  எலும்புகள்  உலர்ந்துபோயிற்று.  (சங்கீதம்  31:10)

en  piraa'nan  sagnchalaththinaalum,  en  varushangga'l  thavippinaalum  kazhinthu  poayit’ru;  en  akkiramaththinaalea  en  belan  ku’rainthu,  en  elumbuga'l  ularnthupoayit’ru.  (sanggeetham  31:10)

என்  சத்துருக்களாகிய  யாவர்  நிமித்தமும்,  நான்  என்  அயலாருக்கு  நிந்தையும்,  எனக்கு  அறிமுகமானவர்களுக்கு  அருக்களிப்புமானேன்;  வீதியிலே  என்னைக்  கண்டவர்கள்  எனக்கு  விலகி  ஓடிப்போனார்கள்.  (சங்கீதம்  31:11)

en  saththurukka'laagiya  yaavar  nimiththamum,  naan  en  ayalaarukku  ninthaiyum,  enakku  a’rimugamaanavarga'lukku  arukka'lippumaanean;  veethiyilea  ennaik  ka'ndavarga'l  enakku  vilagi  oadippoanaarga'l.  (sanggeetham  31:11)

செத்தவனைப்போல  எல்லாராலும்  முழுவதும்  மறக்கப்பட்டேன்;  உடைந்த  பாத்திரத்தைப்போலானேன்.  (சங்கீதம்  31:12)

seththavanaippoala  ellaaraalum  muzhuvathum  ma’rakkappattean;  udaintha  paaththiraththaippoalaanean.  (sanggeetham  31:12)

அநேகர்  சொல்லும்  அவதூறைக்  கேட்டேன்;  எனக்கு  விரோதமாக  அவர்கள்  ஏகமாய்  ஆலோசனைபண்ணுகிறதினால்  திகில்  என்னைச்  சூழ்ந்துகொண்டது;  என்  பிராணனை  வாங்கத்  தேடுகிறார்கள்.  (சங்கீதம்  31:13)

aneagar  sollum  avathoo’raik  keattean;  enakku  viroathamaaga  avarga'l  eagamaay  aaloasanaipa'n'nugi’rathinaal  thigil  ennaich  soozhnthuko'ndathu;  en  piraa'nanai  vaanggath  theadugi’raarga'l.  (sanggeetham  31:13)

நானோ,  கர்த்தாவே,  உம்மை  நம்பியிருக்கிறேன்;  நீரே  என்  தேவன்  என்று  சொன்னேன்.  (சங்கீதம்  31:14)

naanoa,  karththaavea,  ummai  nambiyirukki’rean;  neerea  en  theavan  en’ru  sonnean.  (sanggeetham  31:14)

என்  காலங்கள்  உமது  கரத்திலிருக்கிறது;  என்  சத்துருக்களின்  கைக்கும்  என்னைத்  துன்பப்படுத்துகிறவர்களின்  கைக்கும்  என்னைத்  தப்புவியும்.  (சங்கீதம்  31:15)

en  kaalangga'l  umathu  karaththilirukki’rathu;  en  saththurukka'lin  kaikkum  ennaith  thunbappaduththugi’ravarga'lin  kaikkum  ennaith  thappuviyum.  (sanggeetham  31:15)

நீர்  உமது  முகத்தை  உமது  ஊழியக்காரன்மேல்  பிரகாசிக்கப்பண்ணி,  உமது  கிருபையினாலே  என்னை  இரட்சியும்.  (சங்கீதம்  31:16)

neer  umathu  mugaththai  umathu  oozhiyakkaaranmeal  piragaasikkappa'n'ni,  umathu  kirubaiyinaalea  ennai  iradchiyum.  (sanggeetham  31:16)

கர்த்தாவே,  உம்மை  நோக்கிக்  கூப்பிட்டேன்;  நான்  வெட்கப்பட்டுப்  போகாதபடி  செய்யும்;  துன்மார்க்கர்  வெட்கப்பட்டுப்  பாதாளத்தில்  மவுனமாயிருக்கட்டும்.  (சங்கீதம்  31:17)

karththaavea,  ummai  noakkik  kooppittean;  naan  vedkappattup  poagaathapadi  seyyum;  thunmaarkkar  vedkappattup  paathaa'laththil  mavunamaayirukkattum.  (sanggeetham  31:17)

நீதிமானுக்கு  விரோதமாய்ப்  பெருமையோடும்  இகழ்ச்சியோடும்  கடினமாய்ப்  பேசுகிற  பொய்  உதடுகள்  கட்டப்பட்டுப்போவதாக.  (சங்கீதம்  31:18)

neethimaanukku  viroathamaayp  perumaiyoadum  igazhchchiyoadum  kadinamaayp  peasugi’ra  poy  uthaduga'l  kattappattuppoavathaaga.  (sanggeetham  31:18)

உமக்குப்  பயந்தவர்களுக்கும்,  மனுபுத்திரருக்கு  முன்பாக  உம்மை  நம்புகிறவர்களுக்கும்,  நீர்  உண்டு  பண்ணிவைத்திருக்கிற  உம்முடைய  நன்மை  எவ்வளவு  பெரிதாயிருக்கிறது!  (சங்கீதம்  31:19)

umakkup  bayanthavarga'lukkum,  manupuththirarukku  munbaaga  ummai  nambugi’ravarga'lukkum,  neer  u'ndu  pa'n'nivaiththirukki’ra  ummudaiya  nanmai  evva'lavu  perithaayirukki’rathu!  (sanggeetham  31:19)

மனுஷருடைய  அகங்காரத்துக்கு  அவர்களை  உமது  சமுகத்தின்  மறைவிலே  மறைத்து,  நாவுகளின்  சண்டைக்கு  அவர்களை  விலக்கி,  உமது  கூடாரத்திலே  ஒளித்துவைத்துக்  காப்பாற்றுகிறீர்.  (சங்கீதம்  31:20)

manusharudaiya  aganggaaraththukku  avarga'lai  umathu  samugaththin  ma’raivilea  ma’raiththu,  naavuga'lin  sa'ndaikku  avarga'lai  vilakki,  umathu  koodaaraththilea  o'liththuvaiththuk  kaappaat’rugi’reer.  (sanggeetham  31:20)

கர்த்தர்  அரணான  நகரத்தில்  எனக்குத்  தமது  கிருபையை  அதிசயமாய்  விளங்கப்பண்ணினபடியால்,  அவருக்கு  ஸ்தோத்திரம்.  (சங்கீதம்  31:21)

karththar  ara'naana  nagaraththil  enakkuth  thamathu  kirubaiyai  athisayamaay  vi'langgappa'n'ninapadiyaal,  avarukku  sthoaththiram.  (sanggeetham  31:21)

உம்முடைய  கண்களுக்கு  முன்பாக  இராதபடிக்கு  வெட்டுண்டேன்  என்று  நான்  என்  மனக்கலக்கத்திலே  சொன்னேன்;  ஆனாலும்  நான்  உம்மை  நோக்கிக்  கூப்பிட்டபோது,  என்  விண்ணப்பங்களின்  சத்தத்தைக்  கேட்டீர்.  (சங்கீதம்  31:22)

ummudaiya  ka'nga'lukku  munbaaga  iraathapadikku  vettu'ndean  en’ru  naan  en  manakkalakkaththilea  sonnean;  aanaalum  naan  ummai  noakkik  kooppittapoathu,  en  vi'n'nappangga'lin  saththaththaik  keatteer.  (sanggeetham  31:22)

கர்த்தருடைய  பரிசுத்தவான்களே,  நீங்களெல்லாரும்  அவரில்  அன்புகூருங்கள்;  உண்மையானவனைக்  கர்த்தர்  தற்காத்து,  இடும்புசெய்கிறவனுக்குப்  பூரணமாய்ப்  பதிலளிப்பார்.  (சங்கீதம்  31:23)

karththarudaiya  parisuththavaanga'lea,  neengga'lellaarum  avaril  anbukoorungga'l;  u'nmaiyaanavanaik  karththar  tha’rkaaththu,  idumbuseygi’ravanukkup  poora'namaayp  bathila'lippaar.  (sanggeetham  31:23)

கர்த்தருக்குக்  காத்திருக்கிறவர்களே,  நீங்களெல்லாரும்  திடமனதாயிருங்கள்,  அவர்  உங்கள்  இருதயத்தை  ஸ்திரப்படுத்துவார்.  (சங்கீதம்  31:24)

karththarukkuk  kaaththirukki’ravarga'lea,  neengga'lellaarum  thidamanathaayirungga'l,  avar  ungga'l  iruthayaththai  sthirappaduththuvaar.  (sanggeetham  31:24)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!