Monday, June 13, 2016

Sanggeetham 30 | சங்கீதம் 30 | Psalms 30

கர்த்தாவே,  என்  சத்துருக்கள்  என்னை  மேற்கொண்டு  மகிழவொட்டாமல்,  நீர்  என்னைக்  கைதூக்கி  எடுத்தபடியினால்,  நான்  உம்மைப்  போற்றுவேன்.  (சங்கீதம்  30:1)

karththaavea,  en  saththurukka'l  ennai  mea’rko'ndu  magizhavottaamal,  neer  ennaik  kaithookki  eduththapadiyinaal,  naan  ummaip  poat’ruvean.  (sanggeetham  30:1)

என்  தேவனாகிய  கர்த்தாவே,  உம்மை  நோக்கிக்  கூப்பிட்டேன்,  என்னை  நீர்  குணமாக்கினீர்.  (சங்கீதம்  30:2)

en  theavanaagiya  karththaavea,  ummai  noakkik  kooppittean,  ennai  neer  ku'namaakkineer.  (sanggeetham  30:2)

கர்த்தாவே,  நீர்  என்  ஆத்துமாவைப்  பாதாளத்திலிருந்து  ஏறப்பண்ணி,  நான்  குழியில்  இறங்காதபடி  என்னை  உயிரோடே  காத்தீர்.  (சங்கீதம்  30:3)

karththaavea,  neer  en  aaththumaavaip  paathaa'laththilirunthu  ea’rappa'n'ni,  naan  kuzhiyil  i’ranggaathapadi  ennai  uyiroadea  kaaththeer.  (sanggeetham  30:3)

கர்த்தருடைய  பரிசுத்தவான்களே,  அவரைக்  கீர்த்தனம்பண்ணி,  அவருடைய  பரிசுத்தத்தின்  நினைவுகூருதலைக்  கொண்டாடுங்கள்.  (சங்கீதம்  30:4)

karththarudaiya  parisuththavaanga'lea,  avaraik  keerththanampa'n'ni,  avarudaiya  parisuththaththin  ninaivukooruthalaik  ko'ndaadungga'l.  (sanggeetham  30:4)

அவருடைய  கோபம்  ஒரு  நிமிஷம்,  அவருடைய  தயவோ  நீடிய  வாழ்வு;  சாயங்காலத்தில்  அழுகை  தங்கும்,  விடியற்காலத்திலே  களிப்புண்டாகும்.  (சங்கீதம்  30:5)

avarudaiya  koabam  oru  nimisham,  avarudaiya  thayavoa  neediya  vaazhvu;  saayanggaalaththil  azhugai  thanggum,  vidiya’rkaalaththilea  ka'lippu'ndaagum.  (sanggeetham  30:5)

நான்  ஒருக்காலும்  அசைக்கப்படுவதில்லையென்று,  என்  வாழ்விலே  சொன்னேன்.  (சங்கீதம்  30:6)

naan  orukkaalum  asaikkappaduvathillaiyen’ru,  en  vaazhvilea  sonnean.  (sanggeetham  30:6)

கர்த்தாவே,  உம்முடைய  தயவினால்  நீர்  என்  பர்வதத்தைத்  திடமாய்  நிற்கப்பண்ணியிருந்தீர்;  உமது  முகத்தை  நீர்  மறைத்துக்கொண்டபோதோ  நான்  கலங்கினவனானேன்.  (சங்கீதம்  30:7)

karththaavea,  ummudaiya  thayavinaal  neer  en  parvathaththaith  thidamaay  ni’rkappa'n'niyiruntheer;  umathu  mugaththai  neer  ma’raiththukko'ndapoathoa  naan  kalangginavanaanean.  (sanggeetham  30:7)

நான்  குழியில்  இறங்குகையில்  என்  இரத்தத்தால்  என்ன  லாபமுண்டு?  புழுதி  உம்மைத்  துதித்து,  உமது  சத்தியத்தை  அறிவிக்குமோ?  (சங்கீதம்  30:8)

naan  kuzhiyil  i’ranggugaiyil  en  iraththaththaal  enna  laabamu'ndu?  puzhuthi  ummaith  thuthiththu,  umathu  saththiyaththai  a’rivikkumoa?  (sanggeetham  30:8)

கர்த்தாவே,  நீர்  எனக்குச்  செவிகொடுத்து  என்மேல்  இரக்கமாயிரும்;  கர்த்தாவே,  நீர்  எனக்குச்  சகாயராயிரும்  என்று  சொல்லி;  (சங்கீதம்  30:9)

karththaavea,  neer  enakkuch  sevikoduththu  enmeal  irakkamaayirum;  karththaavea,  neer  enakkuch  sagaayaraayirum  en’ru  solli;  (sanggeetham  30:9)

கர்த்தாவே,  உம்மை  நோக்கிக்  கூப்பிட்டேன்;  கர்த்தரை  நோக்கிக்  கெஞ்சினேன்.  (சங்கீதம்  30:10)

karththaavea,  ummai  noakkik  kooppittean;  karththarai  noakkik  kegnchinean.  (sanggeetham  30:10)

என்  புலம்பலை  ஆனந்தக்  களிப்பாக  மாறப்பண்ணினீர்;  என்  மகிமை  அமர்ந்திராமல்  உம்மைக்  கீர்த்தனம்பண்ணும்படியாக  நீர்  என்  இரட்டைக்  களைந்துபோட்டு,  மகிழ்ச்சியென்னும்  கட்டினால்  என்னை  இடைகட்டினீர்.  (சங்கீதம்  30:11)

en  pulambalai  aananthak  ka'lippaaga  maa’rappa'n'nineer;  en  magimai  amarnthiraamal  ummaik  keerththanampa'n'numpadiyaaga  neer  en  irattaik  ka'lainthupoattu,  magizhchchiyennum  kattinaal  ennai  idaikattineer.  (sanggeetham  30:11)

என்  தேவனாகிய  கர்த்தாவே,  உம்மை  என்றென்றைக்கும்  துதிப்பேன்.  (சங்கீதம்  30:12)

en  theavanaagiya  karththaavea,  ummai  en’ren’raikkum  thuthippean.  (sanggeetham  30:12)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!