Saturday, June 11, 2016

Sanggeetham 3 | சங்கீதம் 3 | Psalms 3

கர்த்தாவே,  என்  சத்துருக்கள்  எவ்வளவாய்ப்  பெருகியிருக்கிறார்கள்!  எனக்கு  விரோதமாய்  எழும்புகிறவர்கள்  அநேகர்.  (சங்கீதம்  3:1)

karththaavea,  en  saththurukka'l  evva'lavaayp  perugiyirukki’raarga'l!  enakku  viroathamaay  ezhumbugi’ravarga'l  aneagar.  (sanggeetham  3:1)

தேவனிடத்தில்  அவனுக்கு  இரட்சிப்பு  இல்லையென்று,  என்  ஆத்துமாவைக்  குறித்துச்  சொல்லுகிறவர்கள்  அநேகராயிருக்கிறார்கள்.  (சேலா.)  (சங்கீதம்  3:2)

theavanidaththil  avanukku  iradchippu  illaiyen’ru,  en  aaththumaavaik  ku’riththuch  sollugi’ravarga'l  aneagaraayirukki’raarga'l.  (sealaa.)  (sanggeetham  3:2)

ஆனாலும்  கர்த்தாவே,  நீர்  என்  கேடகமும்,  என்  மகிமையும்,  என்  தலையை  உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.  (சங்கீதம்  3:3)

aanaalum  karththaavea,  neer  en  keadagamum,  en  magimaiyum,  en  thalaiyai  uyarththugi’ravarumaayirukki’reer.  (sanggeetham  3:3)

நான்  கர்த்தரை  நோக்கிச்  சத்தமிட்டுக்  கூப்பிட்டேன்;  அவர்  தமது  பரிசுத்த  பர்வதத்திலிருந்து  எனக்குச்  செவிகொடுத்தார்.  (சேலா.)  (சங்கீதம்  3:4)

naan  karththarai  noakkich  saththamittuk  kooppittean;  avar  thamathu  parisuththa  parvathaththilirunthu  enakkuch  sevikoduththaar.  (sealaa.)  (sanggeetham  3:4)

நான்  படுத்து  நித்திரை  செய்தேன்;  விழித்துக்கொண்டேன்;  கர்த்தர்  என்னைத்  தாங்குகிறார்.  (சங்கீதம்  3:5)

naan  paduththu  niththirai  seythean;  vizhiththukko'ndean;  karththar  ennaith  thaanggugi’raar.  (sanggeetham  3:5)

எனக்கு  விரோதமாகச்  சுற்றிலும்  படையெடுத்து  வருகிற  பதினாயிரம்பேருக்கும்  நான்  பயப்படேன்.  (சங்கீதம்  3:6)

enakku  viroathamaagach  sut’rilum  padaiyeduththu  varugi’ra  pathinaayirampearukkum  naan  bayappadean.  (sanggeetham  3:6)

கர்த்தாவே,  எழுந்தருளும்;  என்  தேவனே,  என்னை  இரட்சியும்.  நீர்  என்  பகைஞர்  எல்லாரையும்  தாடையிலே  அடித்து,  துன்மார்க்கருடைய  பற்களைத்  தகர்த்துப்போட்டீர்.  (சங்கீதம்  3:7)

karththaavea,  ezhuntharu'lum;  en  theavanea,  ennai  iradchiyum.  neer  en  pagaignar  ellaaraiyum  thaadaiyilea  adiththu,  thunmaarkkarudaiya  pa’rka'laith  thagarththuppoatteer.  (sanggeetham  3:7)

இரட்சிப்பு  கர்த்தருடையது;  தேவரீருடைய  ஆசீர்வாதம்  உம்முடைய  ஜனத்தின்மேல்  இருப்பதாக.  (சேலா.)  (சங்கீதம்  3:8)

iradchippu  karththarudaiyathu;  theavareerudaiya  aaseervaatham  ummudaiya  janaththinmeal  iruppathaaga.  (sealaa.)  (sanggeetham  3:8)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!