Monday, June 13, 2016

Sanggeetham 29 | சங்கீதம் 29 | Psalms 29

பலவான்களின்  புத்திரரே,  கர்த்தருக்கு  மகிமையையும்  வல்லமையையும்  செலுத்துங்கள்;  கர்த்தருக்கே  அதைச்  செலுத்துங்கள்.  (சங்கீதம்  29:1)

balavaanga'lin  puththirarea,  karththarukku  magimaiyaiyum  vallamaiyaiyum  seluththungga'l;  karththarukkea  athaich  seluththungga'l.  (sanggeetham  29:1)

கர்த்தருடைய  நாமத்திற்குரிய  மகிமையை  அவருக்குச்  செலுத்துங்கள்;  பரிசுத்த  அலங்காரத்துடனே  கர்த்தரைத்  தொழுதுகொள்ளுங்கள்.  (சங்கீதம்  29:2)

karththarudaiya  naamaththi’rkuriya  magimaiyai  avarukkuch  seluththungga'l;  parisuththa  alanggaaraththudanea  karththaraith  thozhuthuko'l'lungga'l.  (sanggeetham  29:2)

கர்த்தருடைய  சத்தம்  தண்ணீர்களின்மேல்  தொனிக்கிறது;  மகிமையுள்ள  தேவன்  முழங்குகிறார்;  கர்த்தர்  திரளான  தண்ணீர்களின்மேல்  இருக்கிறார்.  (சங்கீதம்  29:3)

karththarudaiya  saththam  tha'n'neerga'linmeal  thonikki’rathu;  magimaiyu'l'la  theavan  muzhanggugi’raar;  karththar  thira'laana  tha'n'neerga'linmeal  irukki’raar.  (sanggeetham  29:3)

கர்த்தருடைய  சத்தம்  வல்லமையுள்ளது;  கர்த்தருடைய  சத்தம்  மகத்துவமுள்ளது.  (சங்கீதம்  29:4)

karththarudaiya  saththam  vallamaiyu'l'lathu;  karththarudaiya  saththam  magaththuvamu'l'lathu.  (sanggeetham  29:4)

கர்த்தருடைய  சத்தம்  கேதுருமரங்களை  முறிக்கிறது;  கர்த்தர்  லீபனோனின்  கேதுருமரங்களை  முறிக்கிறார்.  (சங்கீதம்  29:5)

karththarudaiya  saththam  keathurumarangga'lai  mu’rikki’rathu;  karththar  leebanoanin  keathurumarangga'lai  mu’rikki’raar.  (sanggeetham  29:5)

அவைகளைக்  கன்றுக்குட்டிகளைப்போலவும்,  லீபனோனையும்  சீரியோனையும்  காண்டாமிருகக்  குட்டிகளைப்போலவும்  துள்ளப்பண்ணுகிறார்.  (சங்கீதம்  29:6)

avaiga'laik  kan’rukkuttiga'laippoalavum,  leebanoanaiyum  seeriyoanaiyum  kaa'ndaamirugak  kuttiga'laippoalavum  thu'l'lappa'n'nugi’raar.  (sanggeetham  29:6)

கர்த்தருடைய  சத்தம்  அக்கினிஜுவாலைகளைப்  பிளக்கும்.  (சங்கீதம்  29:7)

karththarudaiya  saththam  akkinijuvaalaiga'laip  pi'lakkum.  (sanggeetham  29:7)

கர்த்தருடைய  சத்தம்  வனாந்தரத்தை  அதிரப்பண்ணும்;  கர்த்தர்  காதேஸ்  வனாந்தரத்தை  அதிரப்பண்ணுகிறார்.  (சங்கீதம்  29:8)

karththarudaiya  saththam  vanaantharaththai  athirappa'n'num;  karththar  kaatheas  vanaantharaththai  athirappa'n'nugi’raar.  (sanggeetham  29:8)

கர்த்தருடைய  சத்தம்  பெண்மான்களை  ஈனும்படி  செய்து,  காடுகளை  வெளியாக்கும்;  அவருடைய  ஆலயத்திலுள்ள  யாவரும்  அவருடைய  மகிமையைப்  பிரஸ்தாபிக்கிறார்கள்.  (சங்கீதம்  29:9)

karththarudaiya  saththam  pe'nmaanga'lai  eenumpadi  seythu,  kaaduga'lai  ve'liyaakkum;  avarudaiya  aalayaththilu'l'la  yaavarum  avarudaiya  magimaiyaip  pirasthaabikki’raarga'l.  (sanggeetham  29:9)

கர்த்தர்  ஜலப்பிரவாகத்தின்மேல்  உட்கார்ந்திருக்கிறார்;  கர்த்தர்  என்றென்றைக்கும்  ராஜாவாக  வீற்றிருக்கிறார்.  (சங்கீதம்  29:10)

karththar  jalappiravaagaththinmeal  udkaarnthirukki’raar;  karththar  en’ren’raikkum  raajaavaaga  veet’rirukki’raar.  (sanggeetham  29:10)

கர்த்தர்  தமது  ஜனத்திற்குப்  பெலன்கொடுப்பார்;  கர்த்தர்  தமது  ஜனத்திற்குச்  சமாதானம்  அருளி,  அவர்களை  ஆசீர்வதிப்பார்.  (சங்கீதம்  29:11)

karththar  thamathu  janaththi’rkup  belankoduppaar;  karththar  thamathu  janaththi’rkuch  samaathaanam  aru'li,  avarga'lai  aaseervathippaar.  (sanggeetham  29:11)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!