Monday, June 13, 2016

Sanggeetham 28 | சங்கீதம் 28 | Psalms 28

என்  கன்மலையாகிய  கர்த்தாவே,  உம்மை  நோக்கிக்  கூப்பிடுகிறேன்;  நீர்  கேளாதவர்போல  மவுனமாயிராதேயும்;  நீர்  மவுனமாயிருந்தால்  நான்  குழியில்  இறங்குகிறவர்களுக்கு  ஒப்பாவேன்.  (சங்கீதம்  28:1)

en  kanmalaiyaagiya  karththaavea,  ummai  noakkik  kooppidugi’rean;  neer  kea'laathavarpoala  mavunamaayiraatheayum;  neer  mavunamaayirunthaal  naan  kuzhiyil  i’ranggugi’ravarga'lukku  oppaavean.  (sanggeetham  28:1)

நான்  உம்மை  நோக்கிச்  சத்தமிட்டு,  உம்முடைய  பரிசுத்த  சந்நிதிக்கு  நேராகக்  கையெடுக்கையில்,  என்  விண்ணப்பங்களின்  சத்தத்தைக்  கேட்டருளும்.  (சங்கீதம்  28:2)

naan  ummai  noakkich  saththamittu,  ummudaiya  parisuththa  sannithikku  nearaagak  kaiyedukkaiyil,  en  vi'n'nappangga'lin  saththaththaik  keattaru'lum.  (sanggeetham  28:2)

அயலானுக்குச்  சமாதான  வாழ்த்துதலைச்  சொல்லியும்,  தங்கள்  இருதயங்களில்  பொல்லாப்பை  வைத்திருக்கிற  துன்மார்க்கரோடும்  அக்கிரமக்காரரோடும்  என்னை  வாரிக்கொள்ளாதேயும்.  (சங்கீதம்  28:3)

ayalaanukkuch  samaathaana  vaazhththuthalaich  solliyum,  thangga'l  iruthayangga'lil  pollaappai  vaiththirukki’ra  thunmaarkkaroadum  akkiramakkaararoadum  ennai  vaarikko'l'laatheayum.  (sanggeetham  28:3)

அவர்களுடைய  கிரியைகளுக்கும்  அவர்களுடைய  நடத்தைகளின்  பொல்லாங்குக்கும்  தக்கதாக  அவர்களுக்குச்  செய்யும்;  அவர்கள்  கைகளின்  செய்கைக்குத்தக்கதாக  அவர்களுக்கு  அளியும்,  அவர்களுக்குச்  சரிக்குச்  சரிக்கட்டும்.  (சங்கீதம்  28:4)

avarga'ludaiya  kiriyaiga'lukkum  avarga'ludaiya  nadaththaiga'lin  pollaanggukkum  thakkathaaga  avarga'lukkuch  seyyum;  avarga'l  kaiga'lin  seygaikkuththakkathaaga  avarga'lukku  a'liyum,  avarga'lukkuch  sarikkuch  sarikkattum.  (sanggeetham  28:4)

அவர்கள்  கர்த்தருடைய  செய்கைகளையும்  அவர்  கரத்தின்  கிரியைகளையும்  கவனியாதபடியால்,  அவர்களை  இடித்துப்போடுவார்,  அவர்களைக்  கட்டமாட்டார்.  (சங்கீதம்  28:5)

avarga'l  karththarudaiya  seygaiga'laiyum  avar  karaththin  kiriyaiga'laiyum  kavaniyaathapadiyaal,  avarga'lai  idiththuppoaduvaar,  avarga'laik  kattamaattaar.  (sanggeetham  28:5)

கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்;  அவர்  என்  விண்ணப்பங்களின்  சத்தத்தைக்  கேட்டார்.  (சங்கீதம்  28:6)

karththarukku  sthoaththiram;  avar  en  vi'n'nappangga'lin  saththaththaik  keattaar.  (sanggeetham  28:6)

கர்த்தர்  என்  பெலனும்  என்  கேடகமுமாயிருக்கிறார்;  என்  இருதயம்  அவரை  நம்பியிருந்தது;  நான்  சகாயம்  பெற்றேன்;  ஆகையால்  என்  இருதயம்  களிகூருகிறது;  என்  பாட்டினால்  அவரைத்  துதிப்பேன்.  (சங்கீதம்  28:7)

karththar  en  belanum  en  keadagamumaayirukki’raar;  en  iruthayam  avarai  nambiyirunthathu;  naan  sagaayam  pet’rean;  aagaiyaal  en  iruthayam  ka'likoorugi’rathu;  en  paattinaal  avaraith  thuthippean.  (sanggeetham  28:7)

கர்த்தர்  அவர்களுடைய  பெலன்;  அவரே  தாம்  அபிஷேகம்பண்ணினவனுக்கு  அரணான  அடைக்கலமானவர்.  (சங்கீதம்  28:8)

karththar  avarga'ludaiya  belan;  avarea  thaam  abisheagampa'n'ninavanukku  ara'naana  adaikkalamaanavar.  (sanggeetham  28:8)

தேவரீர்  உமது  ஜனத்தை  இரட்சித்து,  உமது  சுதந்தரத்தை  ஆசீர்வதியும்;  அவர்களைப்  போஷித்து,  அவர்களை  என்றென்றைக்கும்  உயர்த்தியருளும்.  (சங்கீதம்  28:9)

theavareer  umathu  janaththai  iradchiththu,  umathu  suthantharaththai  aaseervathiyum;  avarga'laip  poashiththu,  avarga'lai  en’ren’raikkum  uyarththiyaru'lum.  (sanggeetham  28:9)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!