Monday, June 13, 2016

Sanggeetham 27 | சங்கீதம் 27 | Psalms 27

கர்த்தர்  என்  வெளிச்சமும்  என்  இரட்சிப்புமானவர்,  யாருக்குப்  பயப்படுவேன்?  கர்த்தர்  என்  ஜீவனின்  பெலனானவர்,  யாருக்கு  அஞ்சுவேன்?  (சங்கீதம்  27:1)

karththar  en  ve'lichchamum  en  iradchippumaanavar,  yaarukkup  bayappaduvean?  karththar  en  jeevanin  belanaanavar,  yaarukku  agnchuvean?  (sanggeetham  27:1)

என்  சத்துருக்களும்  என்  பகைஞருமாகிய  பொல்லாதவர்கள்  என்  மாம்சத்தைப்  பட்சிக்க,  என்னை  நெருக்குகையில்  அவர்களே  இடறிவிழுந்தார்கள்.  (சங்கீதம்  27:2)

en  saththurukka'lum  en  pagaignarumaagiya  pollaathavarga'l  en  maamsaththaip  padchikka,  ennai  nerukkugaiyil  avarga'lea  ida’rivizhunthaarga'l.  (sanggeetham  27:2)

எனக்கு  விரோதமாக  ஒரு  பாளயமிறங்கினாலும்,  என்  இருதயம்  பயப்படாது;  என்மேல்  யுத்தம்  எழும்பினாலும்,  இதிலே  நான்  நம்பிக்கையாயிருப்பேன்.  (சங்கீதம்  27:3)

enakku  viroathamaaga  oru  paa'layami’rangginaalum,  en  iruthayam  bayappadaathu;  enmeal  yuththam  ezhumbinaalum,  ithilea  naan  nambikkaiyaayiruppean.  (sanggeetham  27:3)

கர்த்தரிடத்தில்  ஒன்றை  நான்  கேட்டேன்,  அதையே  நாடுவேன்;  நான்  கர்த்தருடைய  மகிமையைப்  பார்க்கும்படியாகவும்,  அவருடைய  ஆலயத்தில்  ஆராய்ச்சிசெய்யும்படியாகவும்,  நான்  என்  ஜீவனுள்ள  நாளெல்லாம்  கர்த்தருடைய  ஆலயத்தில்  தங்கியிருப்பதையே  நாடுவேன்.  (சங்கீதம்  27:4)

karththaridaththil  on’rai  naan  keattean,  athaiyea  naaduvean;  naan  karththarudaiya  magimaiyaip  paarkkumpadiyaagavum,  avarudaiya  aalayaththil  aaraaychchiseyyumpadiyaagavum,  naan  en  jeevanu'l'la  naa'lellaam  karththarudaiya  aalayaththil  thanggiyiruppathaiyea  naaduvean.  (sanggeetham  27:4)

தீங்குநாளில்  அவர்  என்னைத்  தம்முடைய  கூடாரத்தில்  மறைத்து,  என்னைத்  தமது  கூடார  மறைவிலே  ஒளித்துவைத்து,  என்னைக்  கன்மலையின்மேல்  உயர்த்துவார்.  (சங்கீதம்  27:5)

theenggunaa'lil  avar  ennaith  thammudaiya  koodaaraththil  ma’raiththu,  ennaith  thamathu  koodaara  ma’raivilea  o'liththuvaiththu,  ennaik  kanmalaiyinmeal  uyarththuvaar.  (sanggeetham  27:5)

இப்பொழுது  என்  தலை  என்னைச்  சுற்றிலும்  இருக்கிற  என்  சத்துருக்களுக்கு  மேலாக  உயர்த்தப்படும்;  அதினிமித்தம்  அவருடைய  கூடாரத்திலே  நான்  ஆனந்த  பலிகளையிட்டு,  கர்த்தரைப்  பாடி,  அவரைக்  கீர்த்தனம்பண்ணுவேன்.  (சங்கீதம்  27:6)

ippozhuthu  en  thalai  ennaich  sut’rilum  irukki’ra  en  saththurukka'lukku  mealaaga  uyarththappadum;  athinimiththam  avarudaiya  koodaaraththilea  naan  aanantha  baliga'laiyittu,  karththaraip  paadi,  avaraik  keerththanampa'n'nuvean.  (sanggeetham  27:6)

கர்த்தாவே,  நான்  கூப்பிடுகிற  சத்தத்தை  நீர்  கேட்டு,  எனக்கு  இரங்கி,  எனக்கு  உத்தரவு  அருளிச்செய்யும்.  (சங்கீதம்  27:7)

karththaavea,  naan  kooppidugi’ra  saththaththai  neer  keattu,  enakku  iranggi,  enakku  uththaravu  aru'lichseyyum.  (sanggeetham  27:7)

என்  முகத்தைத்  தேடுங்கள்  என்று  சொன்னீரே,  உம்முடைய  முகத்தையே  தேடுவேன்  கர்த்தாவே,  என்று  என்  இருதயம்  உம்மிடத்தில்  சொல்லிற்று.  (சங்கீதம்  27:8)

en  mugaththaith  theadungga'l  en’ru  sonneerea,  ummudaiya  mugaththaiyea  theaduvean  karththaavea,  en’ru  en  iruthayam  ummidaththil  sollit’ru.  (sanggeetham  27:8)

உமது  முகத்தை  எனக்கு  மறையாதேயும்;  நீர்  கோபத்துடன்  உமது  அடியேனை  விலக்கிப்போடாதேயும்;  நீரே  எனக்குச்  சகாயர்;  என்  இரட்சிப்பின்  தேவனே,  என்னை  நெகிழவிடாமலும்  என்னைக்  கைவிடாமலும்  இரும்.  (சங்கீதம்  27:9)

umathu  mugaththai  enakku  ma’raiyaatheayum;  neer  koabaththudan  umathu  adiyeanai  vilakkippoadaatheayum;  neerea  enakkuch  sagaayar;  en  iradchippin  theavanea,  ennai  negizhavidaamalum  ennaik  kaividaamalum  irum.  (sanggeetham  27:9)

என்  தகப்பனும்  என்  தாயும்  என்னைக்  கைவிட்டாலும்,  கர்த்தர்  என்னைச்  சேர்த்துக்கொள்ளுவார்.  (சங்கீதம்  27:10)

en  thagappanum  en  thaayum  ennaik  kaivittaalum,  karththar  ennaich  searththukko'l'luvaar.  (sanggeetham  27:10)

கர்த்தாவே,  உமது  வழியை  எனக்குப்  போதித்து,  என்  எதிராளிகளினிமித்தம்  செவ்வையான  பாதையில்  என்னை  நடத்தும்.  (சங்கீதம்  27:11)

karththaavea,  umathu  vazhiyai  enakkup  poathiththu,  en  ethiraa'liga'linimiththam  sevvaiyaana  paathaiyil  ennai  nadaththum.  (sanggeetham  27:11)

என்  சத்துருக்களின்  இஷ்டத்துக்கு  என்னை  ஒப்புக்கொடாதேயும்;  பொய்ச்சாட்சிகளும்  ஆக்கிரமித்துச்  சீறுகிறவர்களும்  எனக்கு  விரோதமாய்  எழும்பியிருக்கிறார்கள்.  (சங்கீதம்  27:12)

en  saththurukka'lin  ishdaththukku  ennai  oppukkodaatheayum;  poychsaadchiga'lum  aakkiramiththuch  see’rugi’ravarga'lum  enakku  viroathamaay  ezhumbiyirukki’raarga'l.  (sanggeetham  27:12)

நானோ,  ஜீவனுள்ளோர்  தேசத்திலே  கர்த்தருடைய  நன்மையைக்  காண்பேன்  என்று  விசுவாசியாதிருந்தால்  கெட்டுப்போயிருப்பேன்.  (சங்கீதம்  27:13)

naanoa,  jeevanu'l'loar  theasaththilea  karththarudaiya  nanmaiyaik  kaa'nbean  en’ru  visuvaasiyaathirunthaal  kettuppoayiruppean.  (sanggeetham  27:13)

கர்த்தருக்குக்  காத்திரு;  அவர்  உன்  இருதயத்தை  ஸ்திரப்படுத்துவார்;  திடமனதாயிருந்து,  கர்த்தருக்கே  காத்திரு.  (சங்கீதம்  27:14)

karththarukkuk  kaaththiru;  avar  un  iruthayaththai  sthirappaduththuvaar;  thidamanathaayirunthu,  karththarukkea  kaaththiru.  (sanggeetham  27:14)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!