Monday, June 13, 2016

Sanggeetham 25 | சங்கீதம் 25 | Psalms 25


கர்த்தாவே,  உம்மிடத்தில்  என்  ஆத்துமாவை  உயர்த்துகிறேன்.  (சங்கீதம்  25:1)

karththaavea,  ummidaththil  en  aaththumaavai  uyarththugi’rean.  (sanggeetham  25:1)

என்  தேவனே,  உம்மை  நம்பியிருக்கிறேன்,  நான்  வெட்கப்பட்டுப்போகாதபடி  செய்யும்;  என்  சத்துருக்கள்  என்னை  மேற்கொண்டு  மகிழவிடாதேயும்.  (சங்கீதம்  25:2)

en  theavanea,  ummai  nambiyirukki’rean,  naan  vedkappattuppoagaathapadi  seyyum;  en  saththurukka'l  ennai  mea’rko'ndu  magizhavidaatheayum.  (sanggeetham  25:2)

உம்மை  நோக்கிக்  காத்திருக்கிற  ஒருவரும்  வெட்கப்பட்டுப்  போகாதபடி  செய்யும்;  முகாந்தரமில்லாமல்  துரோகம்பண்ணுகிறவர்களே  வெட்கப்பட்டுப்  போவார்களாக.  (சங்கீதம்  25:3)

ummai  noakkik  kaaththirukki’ra  oruvarum  vedkappattup  poagaathapadi  seyyum;  mugaantharamillaamal  thuroagampa'n'nugi’ravarga'lea  vedkappattup  poavaarga'laaga.  (sanggeetham  25:3)

கர்த்தாவே,  உம்முடைய  வழிகளை  எனக்குத்  தெரிவியும்;  உம்முடைய  பாதைகளை  எனக்குப்  போதித்தருளும்.  (சங்கீதம்  25:4)

karththaavea,  ummudaiya  vazhiga'lai  enakkuth  theriviyum;  ummudaiya  paathaiga'lai  enakkup  poathiththaru'lum.  (sanggeetham  25:4)

உம்முடைய  சத்தியத்திலே  என்னை  நடத்தி,  என்னைப்  போதித்தருளும்;  நீரே  என்  இரட்சிப்பின்  தேவன்,  உம்மை  நோக்கி  நாள்முழுதும்  காத்திருக்கிறேன்.  (சங்கீதம்  25:5)

ummudaiya  saththiyaththilea  ennai  nadaththi,  ennaip  poathiththaru'lum;  neerea  en  iradchippin  theavan,  ummai  noakki  naa'lmuzhuthum  kaaththirukki’rean.  (sanggeetham  25:5)

கர்த்தாவே,  உம்முடைய  இரக்கங்களையும்  உம்முடைய  காருணியங்களையும்  நினைத்தருளும்,  அவைகள்  அநாதிகாலமுதல்  இருக்கிறதே.  (சங்கீதம்  25:6)

karththaavea,  ummudaiya  irakkangga'laiyum  ummudaiya  kaaru'niyangga'laiyum  ninaiththaru'lum,  avaiga'l  anaathikaalamuthal  irukki’rathea.  (sanggeetham  25:6)

என்  இளவயதின்  பாவங்களையும்  என்  மீறுதல்களையும்  நினையாதிரும்;  கர்த்தாவே,  உம்முடைய  தயவினிமித்தம்  என்னை  உமது  கிருபையின்படியே  நினைத்தருளும்.  (சங்கீதம்  25:7)

en  i'lavayathin  paavangga'laiyum  en  mee’ruthalga'laiyum  ninaiyaathirum;  karththaavea,  ummudaiya  thayavinimiththam  ennai  umathu  kirubaiyinpadiyea  ninaiththaru'lum.  (sanggeetham  25:7)

கர்த்தர்  நல்லவரும்  உத்தமருமாயிருக்கிறார்;  ஆகையால்  பாவிகளுக்கு  வழியைத்  தெரிவிக்கிறார்.  (சங்கீதம்  25:8)

karththar  nallavarum  uththamarumaayirukki’raar;  aagaiyaal  paaviga'lukku  vazhiyaith  therivikki’raar.  (sanggeetham  25:8)

சாந்தகுணமுள்ளவர்களை  நியாயத்திலே  நடத்தி,  சாந்தகுணமுள்ளவர்களுக்குத்  தமது  வழியைப்  போதிக்கிறார்.  (சங்கீதம்  25:9)

saanthaku'namu'l'lavarga'lai  niyaayaththilea  nadaththi,  saanthaku'namu'l'lavarga'lukkuth  thamathu  vazhiyaip  poathikki’raar.  (sanggeetham  25:9)

கர்த்தருடைய  உடன்படிக்கையையும்  அவருடைய  சாட்சிகளையும்  கைக்கொள்ளுகிறவர்களுக்கு,  அவருடைய  பாதைகளெல்லாம்  கிருபையும்  சத்தியமுமானவைகள்.  (சங்கீதம்  25:10)

karththarudaiya  udanpadikkaiyaiyum  avarudaiya  saadchiga'laiyum  kaikko'l'lugi’ravarga'lukku,  avarudaiya  paathaiga'lellaam  kirubaiyum  saththiyamumaanavaiga'l.  (sanggeetham  25:10)

கர்த்தாவே,  என்  அக்கிரமம்  பெரிது;  உம்முடைய  நாமத்தினிமித்தம்  அதை  மன்னித்தருளும்.  (சங்கீதம்  25:11)

karththaavea,  en  akkiramam  perithu;  ummudaiya  naamaththinimiththam  athai  manniththaru'lum.  (sanggeetham  25:11)

கர்த்தருக்குப்  பயப்படுகிற  மனுஷன்  எவனோ  அவனுக்குத்  தாம்  தெரிந்துகொள்ளும்  வழியைப்  போதிப்பார்.  (சங்கீதம்  25:12)

karththarukkup  bayappadugi’ra  manushan  evanoa  avanukkuth  thaam  therinthuko'l'lum  vazhiyaip  poathippaar.  (sanggeetham  25:12)

அவன்  ஆத்துமா  நன்மையில்  தங்கும்;  அவன்  சந்ததி  பூமியைச்  சுதந்தரித்துக்கொள்ளும்.  (சங்கீதம்  25:13)

avan  aaththumaa  nanmaiyil  thanggum;  avan  santhathi  boomiyaich  suthanthariththukko'l'lum.  (sanggeetham  25:13)

கர்த்தருடைய  இரகசியம்  அவருக்குப்  பயந்தவர்களிடத்தில்  இருக்கிறது;  அவர்களுக்குத்  தம்முடைய  உடன்படிக்கையைத்  தெரியப்படுத்துவார்.  (சங்கீதம்  25:14)

karththarudaiya  iragasiyam  avarukkup  bayanthavarga'lidaththil  irukki’rathu;  avarga'lukkuth  thammudaiya  udanpadikkaiyaith  theriyappaduththuvaar.  (sanggeetham  25:14)

என்  கண்கள்  எப்போதும்  கர்த்தரை  நோக்கிக்  கொண்டிருக்கிறது;  அவரே  என்  கால்களை  வலைக்கு  நீங்கலாக்கிவிடுவார்.  (சங்கீதம்  25:15)

en  ka'nga'l  eppoathum  karththarai  noakkik  ko'ndirukki’rathu;  avarea  en  kaalga'lai  valaikku  neenggalaakkividuvaar.  (sanggeetham  25:15)

என்மேல்  நோக்கமாகி,  எனக்கு  இரங்கும்;  நான்  தனித்தவனும்  சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன்.  (சங்கீதம்  25:16)

enmeal  noakkamaagi,  enakku  iranggum;  naan  thaniththavanum  si’rumaippadugi’ravanumaayirukki’rean.  (sanggeetham  25:16)

என்  இருதயத்தின்  வியாகுலங்கள்  பெருகியிருக்கிறது;  என்  இடுக்கண்களுக்கு  என்னை  நீங்கலாக்கிவிடும்.  (சங்கீதம்  25:17)

en  iruthayaththin  viyaagulangga'l  perugiyirukki’rathu;  en  idukka'nga'lukku  ennai  neenggalaakkividum.  (sanggeetham  25:17)

என்  துன்பத்தையும்  என்  வருத்தத்தையும்  பார்த்து,  என்  பாவங்களையெல்லாம்  மன்னித்தருளும்.  (சங்கீதம்  25:18)

en  thunbaththaiyum  en  varuththaththaiyum  paarththu,  en  paavangga'laiyellaam  manniththaru'lum.  (sanggeetham  25:18)

என்  சத்துருக்களைப்  பாரும்;  அவர்கள்  பெருகியிருந்து,  உக்கிரபகையாய்  என்னைப்  பகைக்கிறார்கள்.  (சங்கீதம்  25:19)

en  saththurukka'laip  paarum;  avarga'l  perugiyirunthu,  ukkirapagaiyaay  ennaip  pagaikki’raarga'l.  (sanggeetham  25:19)

என்  ஆத்துமாவைக்  காப்பாற்றி  என்னை  விடுவியும்;  நான்  வெட்கப்பட்டுப்போகாதபடி  செய்யும்;  உம்மை  நம்பியிருக்கிறேன்.  (சங்கீதம்  25:20)

en  aaththumaavaik  kaappaat’ri  ennai  viduviyum;  naan  vedkappattuppoagaathapadi  seyyum;  ummai  nambiyirukki’rean.  (sanggeetham  25:20)

உத்தமமும்  நேர்மையும்  என்னைக்  காக்கக்கடவது;  நான்  உமக்குக்  காத்திருக்கிறேன்.  (சங்கீதம்  25:21)

uththamamum  nearmaiyum  ennaik  kaakkakkadavathu;  naan  umakkuk  kaaththirukki’rean.  (sanggeetham  25:21)

தேவனே,  இஸ்ரவேலை  அவனுடைய  எல்லா  இக்கட்டுகளுக்கும்  நீங்கலாக்கி  மீட்டுவிடும்.  (சங்கீதம்  25:22)

theavanea,  isravealai  avanudaiya  ellaa  ikkattuga'lukkum  neenggalaakki  meettuvidum.  (sanggeetham  25:22)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!