Monday, June 13, 2016

Sanggeetham 22 | சங்கீதம் 22 | Psalms 22

என்  தேவனே,  என்  தேவனே,  ஏன்  என்னைக்  கைவிட்டீர்?  எனக்கு  உதவி  செய்யாமலும்,  நான்  கதறிச்  சொல்லும்  வார்த்தைகளைக்  கேளாமலும்  ஏன்  தூரமாயிருக்கிறீர்?  (சங்கீதம்  22:1)

en  theavanea,  en  theavanea,  ean  ennaik  kaivitteer?  enakku  uthavi  seyyaamalum,  naan  katha’rich  sollum  vaarththaiga'laik  kea'laamalum  ean  thooramaayirukki’reer?  (sanggeetham  22:1)

என்  தேவனே,  நான்  பகலிலே  கூப்பிடுகிறேன்,  உத்தரவுகொடீர்;  இரவிலே  கூப்பிடுகிறேன்,  எனக்கு  அமைதலில்லை.  (சங்கீதம்  22:2)

en  theavanea,  naan  pagalilea  kooppidugi’rean,  uththaravukodeer;  iravilea  kooppidugi’rean,  enakku  amaithalillai.  (sanggeetham  22:2)

இஸ்ரவேலின்  துதிகளுக்குள்  வாசமாயிருக்கிற  தேவரீரே  பரிசுத்தர்.  (சங்கீதம்  22:3)

isravealin  thuthiga'lukku'l  vaasamaayirukki’ra  theavareerea  parisuththar.  (sanggeetham  22:3)

எங்கள்  பிதாக்கள்  உம்மிடத்தில்  நம்பிக்கைவைத்தார்கள்;  நம்பின  அவர்களை  நீர்  விடுவித்தீர்.  (சங்கீதம்  22:4)

engga'l  pithaakka'l  ummidaththil  nambikkaivaiththaarga'l;  nambina  avarga'lai  neer  viduviththeer.  (sanggeetham  22:4)

உம்மை  நோக்கிக்  கூப்பிட்டுத்  தப்பினார்கள்;  உம்மை  நம்பி  வெட்கப்பட்டுப்போகாதிருந்தார்கள்.  (சங்கீதம்  22:5)

ummai  noakkik  kooppittuth  thappinaarga'l;  ummai  nambi  vedkappattuppoagaathirunthaarga'l.  (sanggeetham  22:5)

நானோ  ஒரு  புழு,  மனுஷனல்ல;  மனுஷரால்  நிந்திக்கப்பட்டும்,  ஜனங்களால்  அவமதிக்கப்பட்டும்  இருக்கிறேன்.  (சங்கீதம்  22:6)

naanoa  oru  puzhu,  manushanalla;  manusharaal  ninthikkappattum,  janangga'laal  avamathikkappattum  irukki’rean.  (sanggeetham  22:6)

என்னைப்  பார்க்கிறவர்களெல்லாரும்  என்னைப்  பரியாசம்பண்ணி,  உதட்டைப்  பிதுக்கி,  தலையைத்  துலுக்கி:  (சங்கீதம்  22:7)

ennaip  paarkki’ravarga'lellaarum  ennaip  pariyaasampa'n'ni,  uthattaip  pithukki,  thalaiyaith  thulukki:  (sanggeetham  22:7)

கர்த்தர்மேல்  நம்பிக்கையாயிருந்தானே,  அவர்  இவனை  விடுவிக்கட்டும்;  இவன்மேல்  பிரியமாயிருக்கிறாரே,  இப்பொழுது  இவனை  மீட்டுவிடட்டும்  என்கிறார்கள்.  (சங்கீதம்  22:8)

karththarmeal  nambikkaiyaayirunthaanea,  avar  ivanai  viduvikkattum;  ivanmeal  piriyamaayirukki’raarea,  ippozhuthu  ivanai  meettuvidattum  engi’raarga'l.  (sanggeetham  22:8)

நீரே  என்னைக்  கர்ப்பத்திலிருந்து  எடுத்தவர்;  என்  தாயின்  முலைப்பாலை  நான்  உண்கையில்  என்னை  உம்முடையபேரில்  நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர்.  (சங்கீதம்  22:9)

neerea  ennaik  karppaththilirunthu  eduththavar;  en  thaayin  mulaippaalai  naan  u'ngaiyil  ennai  ummudaiyapearil  nambikkaiyaayirukkappa'n'nineer.  (sanggeetham  22:9)

கர்ப்பத்திலிருந்து  வெளிப்பட்டபோதே  உமது  சார்பில்  விழுந்தேன்;  நான்  என்  தாயின்  வயிற்றில்  இருந்ததுமுதல்  நீர்  என்  தேவனாயிருக்கிறீர்.  (சங்கீதம்  22:10)

karppaththilirunthu  ve'lippattapoathea  umathu  saarbil  vizhunthean;  naan  en  thaayin  vayit’ril  irunthathumuthal  neer  en  theavanaayirukki’reer.  (sanggeetham  22:10)

என்னைவிட்டுத்  தூரமாகாதேயும்;  ஆபத்து  கிட்டியிருக்கிறது,  சகாயரும்  இல்லை.  (சங்கீதம்  22:11)

ennaivittuth  thooramaagaatheayum;  aabaththu  kittiyirukki’rathu,  sagaayarum  illai.  (sanggeetham  22:11)

அநேகம்  காளைகள்  என்னைச்  சூழ்ந்திருக்கிறது;  பாசான்  தேசத்துப்  பலத்த  எருதுகள்  என்னை  வளைந்துகொண்டது.  (சங்கீதம்  22:12)

aneagam  kaa'laiga'l  ennaich  soozhnthirukki’rathu;  baasaan  theasaththup  balaththa  eruthuga'l  ennai  va'lainthuko'ndathu.  (sanggeetham  22:12)

பீறி  கெர்ச்சிக்கிற  சிங்கத்தைப்போல்,  என்மேல்  தங்கள்  வாயைத்  திறக்கிறார்கள்.  (சங்கீதம்  22:13)

pee’ri  kerchchikki’ra  singgaththaippoal,  enmeal  thangga'l  vaayaith  thi’rakki’raarga'l.  (sanggeetham  22:13)

தண்ணீரைப்போல  ஊற்றுண்டேன்;  என்  எலும்புகளெல்லாம்  கட்டுவிட்டது,  என்  இருதயம்  மெழுகுபோலாகி,  என்  குடல்களின்  நடுவே  உருகிற்று.  (சங்கீதம்  22:14)

tha'n'neeraippoala  oot’ru'ndean;  en  elumbuga'lellaam  kattuvittathu,  en  iruthayam  mezhugupoalaagi,  en  kudalga'lin  naduvea  urugit’ru.  (sanggeetham  22:14)

என்  பெலன்  ஓட்டைப்போல்  காய்ந்தது;  என்  நாவு  மேல்வாயோடே  ஒட்டிக்கொண்டது;  என்னை  மரணத்தூளிலே  போடுகிறீர்.  (சங்கீதம்  22:15)

en  belan  oattaippoal  kaaynthathu;  en  naavu  mealvaayoadea  ottikko'ndathu;  ennai  mara'naththoo'lilea  poadugi’reer.  (sanggeetham  22:15)

நாய்கள்  என்னைச்  சூழ்ந்திருக்கிறது;  பொல்லாதவர்களின்  கூட்டம்  என்னை  வளைந்துகொண்டது;  என்  கைகளையும்  என்  கால்களையும்  உருவக்  குத்தினார்கள்.  (சங்கீதம்  22:16)

naayga'l  ennaich  soozhnthirukki’rathu;  pollaathavarga'lin  koottam  ennai  va'lainthuko'ndathu;  en  kaiga'laiyum  en  kaalga'laiyum  uruvak  kuththinaarga'l.  (sanggeetham  22:16)

என்  எலும்புகளையெல்லாம்  நான்  எண்ணலாம்;  அவர்கள்  என்னை  நோக்கிப்  பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.  (சங்கீதம்  22:17)

en  elumbuga'laiyellaam  naan  e'n'nalaam;  avarga'l  ennai  noakkip  paarththukko'ndirukki’raarga'l.  (sanggeetham  22:17)

என்  வஸ்திரங்களைத்  தங்களுக்குள்ளே  பங்கிட்டு,  என்  உடையின்பேரில்  சீட்டுப்போடுகிறார்கள்.  (சங்கீதம்  22:18)

en  vasthirangga'laith  thangga'lukku'l'lea  panggittu,  en  udaiyinpearil  seettuppoadugi’raarga'l.  (sanggeetham  22:18)

ஆனாலும்  கர்த்தாவே,  நீர்  எனக்குத்  தூரமாகாதேயும்;  என்  பெலனே,  எனக்குச்  சகாயம்பண்ணத்  தீவிரித்துக்கொள்ளும்.  (சங்கீதம்  22:19)

aanaalum  karththaavea,  neer  enakkuth  thooramaagaatheayum;  en  belanea,  enakkuch  sagaayampa'n'nath  theeviriththukko'l'lum.  (sanggeetham  22:19)

என்  ஆத்துமாவைப்  பட்டயத்திற்கும்,  எனக்கு  அருமையானதை  நாய்களின்  துஷ்டத்தனத்திற்கும்  தப்புவியும்.  (சங்கீதம்  22:20)

en  aaththumaavaip  pattayaththi’rkum,  enakku  arumaiyaanathai  naayga'lin  thushdaththanaththi’rkum  thappuviyum.  (sanggeetham  22:20)

என்னைச்  சிங்கத்தின்  வாயிலிருந்து  இரட்சியும்;  நான்  காண்டாமிருகத்தின்  கொம்புகளில்  இருக்கும்போது  எனக்குச்  செவிகொடுத்தருளினீர்.  (சங்கீதம்  22:21)

ennaich  singgaththin  vaayilirunthu  iradchiyum;  naan  kaa'ndaamirugaththin  kombuga'lil  irukkumpoathu  enakkuch  sevikoduththaru'lineer.  (sanggeetham  22:21)

உம்முடைய  நாமத்தை  என்  சகோதரருக்கு  அறிவித்து,  சபைநடுவில்  உம்மைத்  துதிப்பேன்.  (சங்கீதம்  22:22)

ummudaiya  naamaththai  en  sagoathararukku  a’riviththu,  sabainaduvil  ummaith  thuthippean.  (sanggeetham  22:22)

கர்த்தருக்குப்  பயப்படுகிறவர்களே,  அவரைத்  துதியுங்கள்;  யாக்கோபின்  சந்ததியாரே,  நீங்கள்  எல்லாரும்  அவரைக்  கனம்பண்ணுங்கள்;  இஸ்ரவேலின்  வம்சத்தாரே,  நீங்கள்  எல்லாரும்  அவர்பேரில்  பயபக்தியாயிருங்கள்.  (சங்கீதம்  22:23)

karththarukkup  bayappadugi’ravarga'lea,  avaraith  thuthiyungga'l;  yaakkoabin  santhathiyaarea,  neengga'l  ellaarum  avaraik  kanampa'n'nungga'l;  isravealin  vamsaththaarea,  neengga'l  ellaarum  avarpearil  bayabakthiyaayirungga'l.  (sanggeetham  22:23)

உபத்திரவப்பட்டவனுடைய  உபத்திரவத்தை  அவர்  அற்பமாயெண்ணாமலும்  அருவருக்காமலும்,  தம்முடைய  முகத்தை  அவனுக்கு  மறைக்காமலுமிருந்து,  தம்மை  நோக்கி  அவன்  கூப்பிடுகையில்  அவனைக்  கேட்டருளினார்.  (சங்கீதம்  22:24)

ubaththiravappattavanudaiya  ubaththiravaththai  avar  a’rpamaaye'n'naamalum  aruvarukkaamalum,  thammudaiya  mugaththai  avanukku  ma’raikkaamalumirunthu,  thammai  noakki  avan  kooppidugaiyil  avanaik  keattaru'linaar.  (sanggeetham  22:24)

மகா  சபையிலே  நான்  உம்மைத்  துதிப்பேன்;  அவருக்குப்  பயப்படுகிறவர்களுக்கு  முன்பாக  என்  பொருத்தனைகளைச்  செலுத்துவேன்.  (சங்கீதம்  22:25)

mahaa  sabaiyilea  naan  ummaith  thuthippean;  avarukkup  bayappadugi’ravarga'lukku  munbaaga  en  poruththanaiga'laich  seluththuvean.  (sanggeetham  22:25)

சாந்தகுணமுள்ளவர்கள்  புசித்துத்  திருப்தியடைவார்கள்;  கர்த்தரைத்  தேடுகிறவர்கள்  அவரைத்  துதிப்பார்கள்;  உங்கள்  இருதயம்  என்றென்றைக்கும்  வாழும்.  (சங்கீதம்  22:26)

saanthaku'namu'l'lavarga'l  pusiththuth  thirupthiyadaivaarga'l;  karththaraith  theadugi’ravarga'l  avaraith  thuthippaarga'l;  ungga'l  iruthayam  en’ren’raikkum  vaazhum.  (sanggeetham  22:26)

பூமியின்  எல்லைகளெல்லாம்  நினைவுகூர்ந்து  கர்த்தரிடத்தில்  திரும்பும்;  ஜாதிகளுடைய  சந்ததிகளெல்லாம்  உமது  சமுகத்தில்  தொழுதுகொள்ளும்.  (சங்கீதம்  22:27)

boomiyin  ellaiga'lellaam  ninaivukoornthu  karththaridaththil  thirumbum;  jaathiga'ludaiya  santhathiga'lellaam  umathu  samugaththil  thozhuthuko'l'lum.  (sanggeetham  22:27)

ராஜ்யம்  கர்த்தருடையது;  அவர்  ஜாதிகளை  ஆளுகிறவர்.  (சங்கீதம்  22:28)

raajyam  karththarudaiyathu;  avar  jaathiga'lai  aa'lugi’ravar.  (sanggeetham  22:28)

பூமியின்  செல்வவான்கள்  யாவரும்  புசித்துப்  பணிந்துகொள்வார்கள்;  புழுதியில்  இறங்குகிறவர்கள்  யாவரும்  அவருக்கு  முன்பாக  வணங்குவார்கள்.  ஒருவனும்  தன்  ஆத்துமா  அழியாதபடி  அதைக்  காக்கக்கூடாதே.  (சங்கீதம்  22:29)

boomiyin  selvavaanga'l  yaavarum  pusiththup  pa'ninthuko'lvaarga'l;  puzhuthiyil  i’ranggugi’ravarga'l  yaavarum  avarukku  munbaaga  va'nangguvaarga'l.  oruvanum  than  aaththumaa  azhiyaathapadi  athaik  kaakkakkoodaathea.  (sanggeetham  22:29)

ஒரு  சந்ததி  அவரைச்  சேவிக்கும்;  தலைமுறை  தலைமுறையாக  அது  ஆண்டவருடைய  சந்ததி  என்னப்படும்.  (சங்கீதம்  22:30)

oru  santhathi  avaraich  seavikkum;  thalaimu’rai  thalaimu’raiyaaga  athu  aa'ndavarudaiya  santhathi  ennappadum.  (sanggeetham  22:30)

அவர்கள்  வந்து:  அவரே  இவைகளைச்  செய்தார்  என்று  பிறக்கப்போகிற  ஜனங்களுக்கு  அவருடைய  நீதியை  அறிவிப்பார்கள்.  (சங்கீதம்  22:31)

avarga'l  vanthu:  avarea  ivaiga'laich  seythaar  en’ru  pi’rakkappoagi’ra  janangga'lukku  avarudaiya  neethiyai  a’rivippaarga'l.  (sanggeetham  22:31)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!