Monday, June 13, 2016

Sanggeetham 21 | சங்கீதம் 21 | Psalms 21


கர்த்தாவே,  உம்முடைய  வல்லமையிலே  ராஜா  மகிழ்ச்சியாயிருக்கிறார்;  உம்முடைய  இரட்சிப்பிலே  எவ்வளவாய்க்  களிகூருகிறார்!  (சங்கீதம்  21:1)

karththaavea,  ummudaiya  vallamaiyilea  raajaa  magizhchchiyaayirukki’raar;  ummudaiya  iradchippilea  evva'lavaayk  ka'likoorugi’raar!  (sanggeetham  21:1)

அவருடைய  மனவிருப்பத்தின்படி  நீர்  அவருக்குத்  தந்தருளி,  அவருடைய  உதடுகளின்  விண்ணப்பத்தைத்  தள்ளாதிருக்கிறீர்.  (சேலா.)  (சங்கீதம்  21:2)

avarudaiya  manaviruppaththinpadi  neer  avarukkuth  thantharu'li,  avarudaiya  uthaduga'lin  vi'n'nappaththaith  tha'l'laathirukki’reer.  (sealaa.)  (sanggeetham  21:2)

உத்தம  ஆசீர்வாதங்களோடு  நீர்  அவருக்கு  எதிர்கொண்டுவந்து,  அவர்  சிரசில்  பொற்கிரீடம்  தரிப்பிக்கிறீர்.  (சங்கீதம்  21:3)

uththama  aaseervaathangga'loadu  neer  avarukku  ethirko'nduvanthu,  avar  sirasil  po’rkireedam  tharippikki’reer.  (sanggeetham  21:3)

அவர்  உம்மிடத்தில்  ஆயுசைக்கேட்டார்;  நீர்  அவருக்கு  என்றென்றைக்குமுள்ள  தீர்க்காயுசை  அளித்தீர்.  (சங்கீதம்  21:4)

avar  ummidaththil  aayusaikkeattaar;  neer  avarukku  en’ren’raikkumu'l'la  theerkkaayusai  a'liththeer.  (sanggeetham  21:4)

உமது  இரட்சிப்பினால்  அவர்  மகிமை  பெரிதாயிருக்கிறது;  மேன்மையையும்  மகத்துவத்தையும்  அவருக்கு  அருளினீர்.  (சங்கீதம்  21:5)

umathu  iradchippinaal  avar  magimai  perithaayirukki’rathu;  meanmaiyaiyum  magaththuvaththaiyum  avarukku  aru'lineer.  (sanggeetham  21:5)

அவரை  நித்திய  ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்;  அவரை  உம்முடைய  சமுகத்தின்  மகிழ்ச்சியினால்  பூரிப்பாக்குகிறீர்.  (சங்கீதம்  21:6)

avarai  niththiya  aaseervaathangga'lu'l'lavaraakkugi’reer;  avarai  ummudaiya  samugaththin  magizhchchiyinaal  poorippaakkugi’reer.  (sanggeetham  21:6)

ராஜா  கர்த்தர்மேல்  நம்பிக்கையாயிருக்கிறார்;  உன்னதமானவருடைய  தயவினால்  அசைக்கப்படாதிருப்பார்.  (சங்கீதம்  21:7)

raajaa  karththarmeal  nambikkaiyaayirukki’raar;  unnathamaanavarudaiya  thayavinaal  asaikkappadaathiruppaar.  (sanggeetham  21:7)

உமது  கை  உமது  சத்துருக்களெல்லாரையும்  எட்டிப்பிடிக்கும்;  உமது  வலதுகரம்  உம்மைப்  பகைக்கிறவர்களைக்  கண்டுபிடிக்கும்.  (சங்கீதம்  21:8)

umathu  kai  umathu  saththurukka'lellaaraiyum  ettippidikkum;  umathu  valathukaram  ummaip  pagaikki’ravarga'laik  ka'ndupidikkum.  (sanggeetham  21:8)

உமது  கோபத்தின்  காலத்திலே  அவர்களை  அக்கினிச்  சூளையாக்கிப்  போடுவீர்;  கர்த்தர்  தமது  கோபத்திலே  அவர்களை  அழிப்பார்;  அக்கினி  அவர்களைப்  பட்சிக்கும்.  (சங்கீதம்  21:9)

umathu  koabaththin  kaalaththilea  avarga'lai  akkinich  soo'laiyaakkip  poaduveer;  karththar  thamathu  koabaththilea  avarga'lai  azhippaar;  akkini  avarga'laip  padchikkum.  (sanggeetham  21:9)

அவர்கள்  கனியை  பூமியிலிராதபடி  நீர்  அழித்து,  அவர்கள்  சந்ததியை  மனுபுத்திரரிலிராதபடி  ஒழியப்பண்ணுவீர்.  (சங்கீதம்  21:10)

avarga'l  kaniyai  boomiyiliraathapadi  neer  azhiththu,  avarga'l  santhathiyai  manupuththirariliraathapadi  ozhiyappa'n'nuveer.  (sanggeetham  21:10)

அவர்கள்  உமக்கு  விரோதமாய்ப்  பொல்லாங்கு  நினைத்தார்கள்;  தீவினையை  எத்தனம்பண்ணினார்கள்;  ஒன்றும்  வாய்க்காமற்போயிற்று.  (சங்கீதம்  21:11)

avarga'l  umakku  viroathamaayp  pollaanggu  ninaiththaarga'l;  theevinaiyai  eththanampa'n'ninaarga'l;  on’rum  vaaykkaama’rpoayit’ru.  (sanggeetham  21:11)

அவர்களை  இலக்காக  வைத்து,  உம்முடைய  அம்புகளை  நாணேற்றி  அவர்கள்  முகத்திற்கு  நேரே  விடுகிறீர்.  (சங்கீதம்  21:12)

avarga'lai  ilakkaaga  vaiththu,  ummudaiya  ambuga'lai  naa'neat’ri  avarga'l  mugaththi’rku  nearea  vidugi’reer.  (sanggeetham  21:12)

கர்த்தாவே,  உம்முடைய  பலத்திலே  நீர்  எழுந்தருளும்;  அப்பொழுது  உம்முடைய  வல்லமையைப்  பாடிக்கீர்த்தனம்பண்ணுவோம்.  (சங்கீதம்  21:13)

karththaavea,  ummudaiya  balaththilea  neer  ezhuntharu'lum;  appozhuthu  ummudaiya  vallamaiyaip  paadikkeerththanampa'n'nuvoam.  (sanggeetham  21:13)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!